இன்று பண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்? : தெரிந்து கொள்ளுங்கள்!

இன்று பண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்? : தெரிந்து கொள்ளுங்கள்!

இன்று ஞாயிற்றுக் கிழமை திரியோதச சித்திரை நட்சத்திரம். கார்த்திகை மாதம் 8ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) சரிபாருங்கள்

மேஷம் 

இன்று உற்சாகமான நாள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு கிடைக்கும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது உணவு, தண்ணீர் விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.சமூக காரியங்களில் ஈடுபடுவீர்கள். அமோகமான நாள்.

ரிஷபம் 

இன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்பட்டாலும், மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.  உடன் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். 

மிதுனம்

இன்று தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகும். சக பணியாளர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாட்களுக்கு பின்னர் நண்பர்களை சந்திப்பீர்கள்.வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். இன்று சாதிக்கும் நாளாக அமையும். 

கடகம் 

இன்று அனுகூலமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் வந்து சேரும். ஆனால் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும். வாழ்க்கை குறித்து துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். முயற்சியால் முன்னேறும் நாள். சமூக வாழ்க்கை நிலையானதாக இருக்கும். 

சிம்மம் 

இன்று உற்சாகமான நாள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் புதிய முயற்சி சாதகமாக முடியும். ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் வழக்கம்போல இருக்கும். சமூக வாழ்க்கை பிசியாக இருக்கும். 

கன்னி

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிக்கலான சவால்களை எல்லாம் கையில் எடுத்துக் கொண்டு இருக்காதீர்கள். அலுவலகத்தில் தேவையில்லாமல்  மற்றவர்கள் விஷயங்களில் தலையிட வேண்டாம். தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக அமையும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வழிபடுவீர்கள். பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். நண்பர்கள் ஆலோசனைக்காக  உங்களிடம் திரும்புவார்.

youtube

துலாம்

இன்று சாதிக்கும் நாளாக அமையும். அலுவலகத்தில் மறைமுக விமர்சனங்களும், வீண் அலைச்சலும் உண்டாகும். முன் கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. பணிச்சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். குடும்ப உறுப்பினர்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.

விருச்சிகம் 

சவாலான விஷயங்க ளையும், சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். அவர்களின் ஆதரவுப் பெருகும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும். சமூக வாழ்க்கை நிலையானதாக இருக்கும். 

தனுசு

இன்று பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத்தில் மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். உயரதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புக்களை ஒப்படைப்பார்கள்.உணர்ச்சி பூர்வமாகச் செயல்படுவதைத் தவிர்த்து, அறிவுப் பூர்வமாக செயல்பட நினைப்பீர்கள். குடும்பத்தில் சங்கடம் ஏற்பட வாய்ப்புள்ளதால் முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. 

மகரம் 

புதிய முயற்சிகளையும், பயணங்களையும் தவிர்க்கவும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.  வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. கும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், உரிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். 

கும்பம்

இன்று சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.  அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவும். சக பணியாளர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றப் போராட வேண்டி இருக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் அதனால் பாதிப்பு எதுவும் இல்லை. 

மீனம்

இன்று எடுத்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். புதிய சலுகைகள் கிடைக்கும், தன்னம்பிக்கை துளிர் விடும் நாள். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சகோதர வழியில் நன்மைகள் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். மாலை நேரத்தில் நண்பர்களுடன் வெளியில் செல்ல திட்டங்கள் இருக்கும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!