அபரிமிதமான பணவரவு, பதவி உயர்வு,தொட்டதெல்லாம் வெற்றி - எந்த 3 ராசிக்கு இந்த பலன் !

 அபரிமிதமான பணவரவு, பதவி உயர்வு,தொட்டதெல்லாம் வெற்றி - எந்த 3 ராசிக்கு இந்த பலன் !

இன்று சனிக்கிழமை துவாதசி திதி அஸ்த நட்சத்திரம். கார்த்திகை மாதம் ஏழாம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

இன்று அற்புதமான நாள். விஷயங்களை சரியான கோணத்தில் பார்க்க கற்று கொள்வீர்கள். நீரில் கண்டம் இருப்பதால் அங்கே செல்ல வேண்டாம். காதலர்களுக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

ரிஷபம்                              

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றி தரும்.உங்கள் நடத்தையை அனைவரும் புகழ்ந்து பேசுவார்கள்.குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பீர்கள். உற்சாகம் மிகுந்த நாள்.

மிதுனம்                                      

இன்று பல சிக்கல்கள் எழும் என்பதால் நீங்கள் அமைதியாகா இந்த நாளை கழிக்க வேண்டும். உணர்ச்சிவசப்படுவது மனநிம்மதியை விலை பேசும். வாழ்க்கை துணையிடம் பணிந்து போவது சுகமானது.

கடகம்                                 

இன்று வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும். கடனில் இருந்து வரும் வட்டி போன்ற பல்வேறு விதமான வருமானங்கள் உங்களை வந்து சேரும். பிள்ளைகள் கவலை தருவார்கள். எதை தொட்டாலும் வெற்றிதான்.

சிம்மம்                                  

உங்களுக்கு சோர்வாக இருக்கும். வியாபாரத்தில் இழப்புகளை சந்திப்பதால் உங்கள் சோர்வு அதிகமாகும். உங்கள் பிள்ளைகளே உங்களுக்கு எதிரி ஆவார்கள். இன்று எதற்கும் உகந்த நாள் அல்ல.

கன்னி

இன்று மிகவும் உற்சாகம் நிறைந்த நாள். அலுவலகம் குடும்பம் இரண்டிலும் சரிசமமான நன்மைகள் நடக்கும். பதவி உயர்வு பெறும் யோகம் இருக்கிறது. வீட்டின் தோற்றமே ப்ரகாசமாக மாறி விடும்.

துலாம்

இன்று லாபகரமான நாள். எல்லா துறையிலும் உங்கள் சுயமரியாதை அதிகரிக்கும். உங்களுக்கு அதிக அளவில் பணவரவு கிடைக்கப்போகிறது. நண்பர்கள் உங்களை மகிழ்விக்கலாம். வியாபாரம் செழிப்பாக இருக்கும்.

விருச்சிகம்

உங்களுக்கு எரிச்சல்கள் அதிகரிக்கலாம். மன உளைச்சல்களால் உணர்வுகளை கட்டுப்படுத்த திணறுவீர்கள்.உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்களுக்கு ஆதரவு தரவேண்டாம். சட்டத்திற்கு புறம்பான செயல்களை தவிர்க்கவும்.

தனுசு

இன்று சந்தோஷமான உற்சாகமான நாள். குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் உங்கள் நலம் விரும்பிகளுடன் சந்தோஷமான நேரத்தை செலவிடுவீர்கள் எதிர்பாராத பரிசுகள் கிடைக்கும். உல்லாச பயணம் செல்ல வாய்ப்பிருக்கிறது.

மகரம்

இன்று நல்லது கெட்டது என இரண்டும் இணைந்திருக்கும் .பலவீனம் மற்றும் உற்சாகம் இரண்டும் ஒன்றன் பின் ஒன்றாக வரும். பணவரவு முதலில் ஏமாற்றும் பின்னர் கிடைக்கும். கலவையான நாள்.

கும்பம்

உங்கள் கவலைகள் உங்களை சந்தோஷப்படுத்தும். நீங்கள் கவலையோடு இருப்பதால் மற்றவர் வேதனை புரியும். அதன் மூலம் வருத்தத்தில் இருக்கும் ஒருவரை தேற்றுவீர்கள். ஆகவே உங்கள் கவலைகள் உங்களை சந்தோஷப்படுத்தும்.

மீனம்

உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தாவிட்டால் மனம் வருந்தும் நிகழ்வுகள் நடக்கலாம். மற்றவர்களின் மனப்பான்மை உங்கள் பெருமைக்கு பங்கம் விளைவிக்கும். அம்மாவின் உடல்நலம் காக்கவும்.

predicted by astro asha shah

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!