இன்று ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதி புனர்பூச நட்சத்திரம் கார்த்திகை மாதம் 1ம் தேதி. ஐயப்ப பக்தர்கள் மாலை அணியலாம். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபாருங்கள்.
மேஷம்
இன்று மற்றவருடன் கலந்து ஆலோசித்து எடுக்கும் முடிவுகள் சிறப்பாக இருக்கும். உங்கள் கற்பனைத்திறனால் உருவாகும் எண்ணங்களை செயல்படுத்தலாம்.விவாதங்களில் சிறப்பான செயல்பாடு இருக்கும்.
ரிஷபம்
உங்கள் நட்சத்திரங்கள் மறைந்திருப்பதால் கவலையில் ஆழ்ந்திருப்பீர்கள். உங்கள் மனம் நிலையாக இல்லாததால் சரியான முடிவெடுக்க முடியாமல் போகலாம். சச்சரவுகளால் சங்கடம் ஏற்படும்.
மிதுனம்
உள்ளும் புறமும் மகிழ்ச்சி அலைமோதும் நாள். குடும்பத்தினர் மகிழ்வதால் வீட்டில் உல்லாசம் பிறக்கும். மன உடல் ஆரோக்கியம் மேம்படும். ப்ரகாசமான நாள்.
கடகம்
இன்று சுதந்திரமாக இருங்கள். இருக்கின்ற வேலைகளை மறந்து விட்டு இரண்டு நாட்களுக்கு கேளிக்கைகளில் கவனம் செலுத்துங்கள். ஒரு சிறிய பயணமோ நண்பர்களுடன் காஃபியோ உங்களை மேலும் சிறப்பாக மாற்றும்.
சிம்மம்
இன்று நீங்கள் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். யாரிடம் பேசினாலும் அவர்கள் உங்களை எரிச்சலூட்டுவார்கள். பொறுமையாக கடக்க வேண்டும். நீண்ட நாட்களாக மனதில் இருக்கும் புரட்சிகர எண்ணங்களை துரத்தி விடுங்கள்.
கன்னி
நீங்கள் செய்யும் மலை அளவு தவறுகளை கடுகளவாக குறைப்பது நல்லது. அது உங்களுக்கு ஞானத்தை அருளும். தல யாத்திரைகள் செய்ய சரியான நாள். பெண் மற்றும் உறவினரிடம் இருந்து லாபம் கிடைக்கும். புதிய ஆட்களிடம் விலகி இருங்கள்.
துலாம்
இன்று கேளிக்கைகளுக்கான நாள்.வியாபாரம் வணிகம் போன்றவற்றில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். இதனை கொண்டாட சுற்றுலா செல்வீர்கள்.
விருச்சிகம்
உங்கள் இயல்பு சிறப்பாக இருக்கிறது. தலைசிறந்த மனிதராக திகழ்வீர்கள். மக்களிடம் பாராட்டுக்கள் கிடைக்கும். உங்கள் மனோதிடம் மேம்படும். அதனால் மேலும் வெற்றிகள் குவியும்.
தனுசு
யோகாசனங்கள் பத்திய உணவு மூலம் உங்கள் நாள் ஆரோக்கியமாகவே ஆரம்பிக்கும். காரணங்களை ஆராயாமல் பலன்களை அனுபவிக்கும் காலம் இது. புத்துணர்வு தரும் நாள்.
மகரம்
நடுத்தரமான நாள். சிறப்புகள் எதுவும் இல்லை. ஆரோக்கியம் அப்படியே இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதால் திகைக்கலாம். கட்டுப்பாட்டில் நிதி நிலவரத்தை கையாளுங்கள்.
கும்பம்
இன்று பலவீனமான உணர்வுகளால் வேதனைப்படலாம். கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் வேலைகளை முடிப்பதால் பாராட்டுக்கள் கிடைக்கும். ஸ்பா மற்றும் ஷாப்பிங் உங்கள் நிலைமையை சரி செய்யும்.
மீனம்
இன்றைய நாள் மகன் மற்றும் உறவினரிடம் கடும் வாக்குவாதத்தில் முடியலாம். இதனால் எரிச்சல் அடைவீர்கள். பொறுமையாக இருப்பது உறவுகளை தக்க வைக்கும்.
predicted by astro asha shah
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!