இன்று சனிக்கிழமை சதுர்த்தி திதி திருவாதிரை நட்சத்திரம் ஐப்பசி மாதம் 30ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
மேஷம்
பணம் கொடுக்கல் வாங்கல் எதுவும் வைத்துக் கொள்ள வேண்டாம். பேச்சு கோபம் போன்றவற்றை தவிருங்கள்.நீங்கள் நகைச்சுவையாக பேசுவது மற்றவர்களை அவமானம் செய்வதாக அவர்கள் கருதலாம்.
ரிஷபம்
உங்கள் நடத்தையில் உல்லாசமும் களிப்பும் மிகுந்திருக்கும் நாள்.உங்களை சுற்றி உள்ள நேர்மாறான மேகங்கள் விலகி பாதைகள் பளிச்சென தெரிகின்றன.அதிர்ஷ்டங்கள் வந்து கொண்டிருப்பதால் சந்தோஷத்தை கொண்டாடுங்கள்.
மிதுனம்
உடலும் உள்ளமும் சோர்வடையும். சுறுசுறுப்பு வற்றி போனதாக நீங்கள் உணரலாம். வாழ்க்கை துணையின் கோபம் உங்களுக்கு மேலும் எரிச்சல் தரலாம். இதய வலி மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியன வந்து போகலாம்.
கடகம்
நட்சத்திரங்களின் போக்கு மாலையில் இருந்து நன்றாக இருப்பதால் காலை வேளைகள் கடினம் தரும்.பொறுமை நல்லது. பயணங்களை தவிருங்கள். குழந்தை உடல்நலம் பாதிக்கும். அலுவலகம் சுமாராக செல்லும்.
சிம்மம்
காலையில் இருந்தே நல்ல சகுனங்கள் தென்படும். புதிய உற்சாகம் பிறக்கும். காதலியின் குரல் ஐஸ்க்ரீமாய் இறங்கும்.இயற்கையை நேசிப்பீர்கள். இன்று உங்களை இதமாக்கும் நாள்.
கன்னி
கலாச்சார ஆர்வம் உள்ள நட்புகள் உங்களை சந்தோஷப்படுத்தும்.பயணத்தின் போது நல்ல அனுபவங்கள் கிடைக்கும். புதிய ஆடைகள் வேண்டி மனம் அலையும். பழைய நட்பு உங்களை ஆறுதல் செய்யும்.
துலாம்
துணிவான செயல்களை ஆரம்பிப்பதற்கான சரியான நாள். நீண்ட நாள் காத்துக் கொண்டிருந்த சந்தர்ப்பங்கள் அமையலாம். பயன்படுத்தி கொள்ளுங்கள். உணவு ஆரோக்கியம் போன்றவற்றில் கவனம் வேண்டும்.
விருச்சிகம்
உறவுகள் மற்றும் உணர்வுகள் இரண்டையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். ஏற்றுக்கொண்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.பொறுமை வேண்டும். தீர்த்த யாத்திரை செல்லலாம்.
தனுசு
இன்றைய நாள் அமைதியாக நடக்கும். தடைகள் தடங்கல்கள் விலகும். லாபங்கள் சுமாராக கிடைத்தாலும் உழைப்பிற்கான ஊதியம் என மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகள் சந்தோஷப்படுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும்.
மகரம்
இன்றைக்கு அதி அற்புதமான நாள். லாபங்கள் கிடைக்கும். இறைவனின் ஆசிர்வாதம் உங்கள் வசம். லாபம் கொட்டுவதால் மகிழ்ச்சி ததும்பும் .உங்கள் உழைப்புதான் இப்படி ஒரு பலன் கிடைக்க உதவி இருக்கிறது.
கும்பம்
கவனமாகவும் எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். நிறைய பிரச்னைகள் வரக்கூடிய நாள். நீங்கள் பொறுமையுடன் இருந்தால் அவற்றை தவிர்க்கலாம்.நோயால் வாடலாம். கவனம்
மீனம்
விருந்தாளிகள் வரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். மனதில் உற்சாகம் பிறக்கும். வீடு மற்றும் அலுவலகம் இரண்டுமே மகிழ்வை தரும். சந்தோஷம் ததும்பும்.
predicted by astro asha shah
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!