தொடர்ச்சியான பணவரவுகளால் மகிழப் போகும் ஐந்து ராசிக்காரர்கள் இவர்கள்தான் !

தொடர்ச்சியான பணவரவுகளால் மகிழப் போகும்  ஐந்து ராசிக்காரர்கள் இவர்கள்தான் !

இன்று வெள்ளி கிழமை த்ரிதியை திதி மிருகசீரிஷ நட்சத்திரம். ஐப்பசி மாதம் 29ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசி பலனை சரிபாருங்கள்.

மேஷம்                    

எதிர்பாராத பணவரவு ஏற்படும். பிரிந்து சென்ற உறவுகளை நினைத்து கவலை கொள்ள வேண்டாம். தொழிலில் மேன்மை ஏற்படும். புதிய முதலீடுகள் செய்யலாம்.

ரிஷபம்                

வியாபார லாபங்கள் அமோகமாக நடக்கும். உறவினர் மற்றும் நண்பர்களின் அனுசரணை உங்களை நிம்மதியாக்கும். உயர் அதிகாரிகள் உதவி செய்வார்கள். பயணம் செல்லும் வாய்ப்பிருக்கிறது.

மிதுனம்           

சூழ்நிலைக்கு தகுந்தவாறு வியாபாரத்தில் நீங்கள் மாற்றம் செய்ய வேண்டி வரலாம். பயணத்தொல்லைகள் சரியாகும். உத்யோகம் சிக்கல் இல்லாமல் செல்லும். புது வேலைகளுக்கு முயற்சி செய்யுங்கள்.

கடகம்                 

திடீர் பணவரவால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். வாழ்க்கை துணையும் மகிழ்ச்சியாக காணப்படுவர்.

சிம்மம்                    

நண்பர்கள் மீண்டும் வந்து சேரும் நாள். குடும்பத்தினர் மனம் அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள். தொழிலை விரிவுபடுத்துங்கள். லாபம் கிடைக்கும். உடன்பிறப்புகள் உதவி செய்வார்கள்.

கன்னி                

சகோதர மனக்கசப்புகள் முடிவுக்கு வரலாம். தம்பதிகளுக்குள் அன்யோன்யம் குறைந்து போகலாம். புத்துணர்ச்சி உடன் வேலைகள் தொடங்குவீர்கள். வாக்குவாதங்களை தவிர்த்தால் நல்ல நாளாக அமையும்.

துலாம்                 

தேவையான பொருள்களை வாங்கும் அளவிற்கு பணவரவு இருக்கும். எதிர்பாராத லாபங்களால் மகிழ்வீர்கள். பயணம் உங்களை நன்மையில் ஆழ்த்தும். குழப்பமான எண்ணங்கள் மனதை வருத்தும்.

விருச்சிகம்

உடல் நலம் பாதிக்கும் என்பதால் புதிய முயற்சிகளை தவிர்த்து விடுங்கள். ஆதாயங்களுடன் செலவுகளும் ஏற்படலாம். வியாபாரம் லாபத்தில் முடியும். பிள்ளைகள் படிப்புக்கு உதவி கிடைக்கும்.

தனுசு

காரிய னுகூலம் உண்டாகும். நண்பர்கள் உதவி கிடைக்கும். பேச்சு சாதுர்யத்தால் நினைத்ததை சாதிப்பீர்கள். புதிய எண்ணங்கள் ஏற்படும். செயல்படுத்தலாம்.

மகரம்

எதிர்பார்த்த பணம் கைக்கு வரலாம். புதிய ஆடை ஆபரண சேர்க்கை நடைபெறும். அலுவலகத்தில் சலுகைகள் கிடைக்கும். வீண் செலவுகள் மனக்கவலைகள் ஏற்படுத்தும்.உறவினருடன் கருத்து வேறுபாடு வரலாம்.

கும்பம்

குடும்ப உறுப்பினர்கள் உங்களை மகிழ்விப்பார்கள் . பெரியோர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும்.வேலை நிமித்தம் அலைச்சல்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். அமைதியாக இருக்க வேண்டும்.

மீனம்

இவ்வளவு காலமாக மனத்தில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். வெளிநாட்டு வியாபாரங்கள் நல்ல செய்தி கொண்டு வரும். புதிய சொத்து சேர்க்கை வரும் வாய்ப்பிருக்கிறது.

predicted by astro asha sha

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!