இன்று புதன் கிழமை பிரதமை திதி கார்த்திகை நட்சத்திரம் . ஐப்பசி மாதம் 27ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபாருங்கள்.
மேஷம்
சட்டென கோபம் தலைக்கேறும் நாள் என்றாலும் அதனை கட்டுப்படுத்துவது உங்கள் நாளை நிதானமாக்கும். பேசுவதற்கு முன்னர் யோசியுங்கள். உங்கள் தன்னம்பிக்கை யை பரிசோதனை செய்யும் நாள்
ரிஷபம்
எதிரிகளை தோற்கடிக்கும் நாள். குடும்பத்தில் இதமான சூழல் உருவாகும். நண்பர்கள் சந்திப்பு நன்மையில் முடியும். முதல் பாகம் அனுகூலம் இரண்டாவது பாகம் சிக்கல் என இந்த நாள் முடிவடையலாம்.
மிதுனம்
கவனமாக கடக்க வேண்டிய நாள். தாயின் உடல்நலம் பாதிக்கப்படலாம். வீட்டில் நட்புணர்வுகள் இல்லாமல் போகலாம். நேர்மையாக இருப்பதன் மூலமே உங்கள் மனதையும் உடலையும் காக்க முடியும்.
கடகம்
நிறைவான நாள் இலக்கியம் புத்தகங்கள் வாசிப்பு என உங்கள் நாள் செல்லலாம். மாணவர்களுக்கு படிப்பு விருப்பமாக மாறும். குடும்பத்தினர் அமைதியாக இருப்பார்கள். திருப்தியான நாள்
சிம்மம்
எல்லாவற்றையும் தன்னம்பிக்கையோடு கொண்டு செல்லுங்கள். பேச்சையும் கோபத்தையும் கட்டுக்குள் வைக்காவிட்டால் உங்களுக்கு சிக்கல் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.
கன்னி
உங்களுடைய சுறுசுறுப்பும் கற்பனை திறமும் உங்களை சமூக வாழ்வில் உயர்வாக வைத்திருக்கும். உங்கள் வியாபார பங்காளிகள் லாபம் அடைவதால் உங்களுக்கும் பணலாபம் கிடைக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள்.
துலாம்
சட்டவிரோதமான காரியங்களை செய்ய வேண்டாம். சிக்கல் ஏற்படும். உடல் உழைப்பு அதிகமாக தேவைப்படும் நாள். நடுநடுவே ஓய்வெடுப்பதால் ஆரோக்கியம் காக்கப்படும்.
விருச்சிகம்
இன்றைக்கு நாள் ஆரம்பிக்கும் போது இருந்ததை விட போக போக நன்றாகி கொண்டே போகும். பதட்டம் காரணமாக வயிறு பாதிக்கப்படலாம். கடின உழைப்பு இன்றைக்கே பலன் தராது என்பதை நினைவில் கொள்ளவும்.
தனுசு
தொழில் வியாபாரம் செழிப்பாக நடைபெறும். அலுவலக பணியாளர்களுக்கும் மேன்மைகள் நடைபெறும். உங்கள் உற்பத்தி திறன் மேலோங்கும். உயர் அதிகாரியின் பாராட்டு கிடைக்கும். அதிர்ஷ்டம் தேடி வரும்.
மகரம்
உங்கள் நாள் விருந்து விளையாட்டுகளில் மகிழ்வாக செல்லும். புதிய வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படலாம். நண்பர்கள் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் செல்ல வாய்ப்பிருக்கிறது. குழந்தைகளால் பெருமை ஏற்படும்.
கும்பம்
கவனகுறைவு காரணமாக சில இழப்புகள் ஏற்படலாம். இதனை தோற்கடிக்க நீங்கள் த்யானம் யோகா போன்றவற்றை முயற்சி செய்யுங்கள். முதலீடுகளை பிரித்து போடுவது லாபத்திற்கு வழிவகுக்கும்.
மீனம்
நாள் நன்றாக இருக்கிறது. அதனால் உங்கள் நல்ல பழக்கவழக்கங்களை தொடருங்கள். கிரக நிலை கொஞ்சம்தான் சரியாகி இருக்கிறது. அதனால் செய்யும் பணிகளில் முழுக்கவனமும் அர்ப்பணிப்பும் அவசியம்.
predicted by astro asha sha
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!