செல்வாக்கும் புகழும் வந்து சேரும் அந்த ராசி உங்களுடையதா ! சரிபாருங்கள் !

செல்வாக்கும் புகழும் வந்து சேரும் அந்த ராசி உங்களுடையதா ! சரிபாருங்கள் !

இன்று செவ்வாய்க்கிழமை. பரணி நட்சத்திரம். ஐப்பசி பௌர்ணமி. சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் தரிசிக்க தரித்திரம் விலகும்.இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபாருங்கள்                                                                                

மேஷம் 

இன்று லாபகரமான நாளாக இருக்கும். புதிய வியாபாரங்களை துணிந்து ஏற்கலாம். ஆனாலும் சிக்கனமாக இருப்பவர்களே கோடீஸ்வரர்கள் ஆவார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

ரிஷபம்

நட்சத்திரங்கள் உங்களுக்கு பாதகம் செய்யவில்லை. ஆகவே உங்கள் நாள் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் தொடங்கும். தொழில் வியாபாரத்தில் நீண்ட காலமாக யோசித்து வந்தவைகளை செயல்படுத்தலாம்.

மிதுனம்

கொஞ்சம் மத்திமமான நாள். கடுமையான முயற்சிகள் மட்டுமே ஓரளவிற்கு பலன் தரும். மற்றவர்களுடன் பொது இடங்களில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பாதைகள் தடைகளுடன் புலப்படுகிறது.

கடகம்

கண்களையும் காதுகளையும் கவனமாக பயன்படுத்துங்கள். அலுவலக சூழல் ஏற்றதாக அமையும். குடும்பம் உங்களுக்கு அவசியமான நிம்மதியை தரும். உத்தமமான நாள்

சிம்மம்

இன்று எதிர்மறையான நாள் என்பதால் எதனையும் பார்த்து செய்யுங்கள். உடல் நலம் பாதிப்பு சிறு நோய்கள் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உணவில் கவனம் இருக்கட்டும்.

கன்னி

கடினமான உழைப்பிற்கான லாபத்தை ஈட்டும் நேரம் இதுதான். புகழ், செல்வாக்கு எல்லாம் வந்து சேரும். வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். ஷாப்பிங் சென்று பொழுதை களியுங்கள்.

துலாம்

ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பிரார்த்தனைகள் பலிக்க கூடிய காலகட்டம் இதுதான். எது சரி எது தவறு என்கிற வாக்குவாதம் யாரிடமும் செய்ய வேண்டாம். குடும்பத்தினர் உடன் கோயில் செல்வதால் நல்ல அன்பும் இணக்கமும் ஏற்படும்.

விருச்சிகம்

தவறான எண்ணங்கள் முளைக்கும் முன்பே பிய்த்து எறிந்து விடுங்கள். மற்றபடி நல்ல யோசனைகளை தடங்கல்கள் இல்லை. நோய்களில் இருந்து காப்பாற்றி கொள்ளுங்கள். ஆரோக்கியத்தை பின்பற்றுங்கள்.

தனுசு

இன்று மிக மிக சந்தோஷமான நாளாக இருக்கலாம் என நட்சத்திரங்களின் சேர்க்கை கூறுகிறது. முழுமையான திருப்தி மற்றும் நிம்மதி உங்களை வந்து சேரும். பரிசுகள் பாராட்டுக்கள் கிடைக்கலாம்.

மகரம்

இன்று கொஞ்சம் பாதிப்புகள் ஏற்படுத்தும் நாள். புதிதாக எதனையும் தொடங்க வேண்டாம். உத்யோகத்தில் கவனமாக இருக்க வேண்டும். பயணங்களை தவிர்க்க வேண்டும். எழுத்தாளர்கள் மாணவர்கள் பயன்பெறும் நாள்.

கும்பம்

அதிகமான வாக்குவாதங்கள் உங்கள் வாழ்வை காவு வாங்கலாம். எளிதாக ஆரம்பித்தாலும் இறுதியில் கசப்புகளில் முடியும் விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.பணியிடத்தில் முடிவெடுக்க முடியாமல் தவிக்கலாம்.

மீனம்

மகிழ்வான மனநிலை உங்கள் நாளை அலங்கரிக்கும். உங்கள் குடும்பம் இன்றைக்கு மிக நிம்மதியாக இருக்கும். அதே சமயம் உங்கள் அதிகப்படியான ஆளுமை உணர்வால் அவர்கள் சந்தோஷத்தை கேள்விக்குறியாக்காமல் இருங்கள்.

 

predicted by astro asha shah

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!