மனதை திறந்து வைத்து காத்திருங்கள்.. காதல் உள்ளே வர வாய்ப்பிருக்கிறது.. எந்த ராசிக்கு !

மனதை திறந்து வைத்து காத்திருங்கள்.. காதல் உள்ளே வர வாய்ப்பிருக்கிறது.. எந்த ராசிக்கு !

இன்று திங்கள் கிழமை அஷ்டமி திதி திருவோண நட்சத்திரம் ஐப்பசி மாதம் பதினெட்டாம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை அறிந்து கொள்ளுங்கள்.

மேஷ ராசி

ஏதேனும் ஒரு தொந்தரவு இருந்தால், அதை உங்கள் உறவுகளின் மீது எடுத்து செல்லாதீர்கள். பேசுவதற்கு முன் யோசித்து பேசவும்!

ரிஷப ராசி

வாழ்க்கையில் பல விஷயங்களை நீங்கள் அடைந்துவிட்டீர்கள், ஆனாலும் நீங்கள் இன்னும் அடைய ஏங்குவீர்கள் . உங்கள் பதில்கள் மற்றும் எதிர்விளைவுகளில் கவனமாக இருங்கள். மற்றவர்களின் தேவைகளை புறக்கணித்து, உங்களுடைய சொந்த பிரச்சனைகளைப் பற்றி மட்டுமே நீங்கள் கவலைப்படுவீர்கள்.

மிதுன ராசி

இப்போது செய்து கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு எவையெல்லாம் முக்கியமான செய்ய வேண்டிய வேலை என்பதை பட்டியல் போடுங்கள்.உங்கள் கர்வம் உங்கள் வேலைகளுக்கு தடையாக இருக்க வேண்டாம்.எது முக்கியமோ அதில் கவனத்தை செலுத்தி விட்டு மற்றதை மற்றவர்களிடம் விட்டு விடுங்கள். உங்கள் வேளைகளில் கவனம் மற்றும் விழிப்புணர்வு தேவை.

கடக ராசி

இப்போது உங்கள் தேடலில் உங்களுக்கு உதவ தயாராக இருக்கும் அற்புதமான மக்கள் உள்ளனர். வாய்ப்புகள் உங்களுக்கு வழங்கப்படுகின்றன, ஆனால் நீங்கள் கவனம் செலுத்துவதில்லை அல்லது உங்கள் எதிர்பார்ப்புகளில் நீங்கள் மிகவும் கடினமானவராக இருக்கலாம். உங்களைத் தளர்த்திக்கொண்டு எல்லாவற்றிற்கும் தயாராக இருங்கள்

சிம்ம ராசி

நல்ல அதிர்ஷ்டம் இப்போது உங்கள் ஆதரவில் உள்ளது . ஒரு புதிய சுழற்சி ஆரம்பிக்கப் போகிறது. அதிர்ஷ்டம் உங்கள் பக்கமாக இருக்கிறது, நீங்கள் ஆழமாக கனவு காணும் போது , தொடர்ந்து நினைத்துப் பார்க்கும் போது, கற்பனை செய்யமுடியாத வழிகளில் வெளிவர இருக்கிறது. உங்கள் வாழ்க்கையை அழகாக வடிவமைக்க அனுமதிக்கவும்.

கன்னி ராசி

நீங்கள் எரிச்சல் அடையலாம். உங்கள் நாள் பிரகாசமாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் வேலையின் மத்தியில் உடற்பயிற்சியை செய்வது சிறந்த யோசனையாக இருக்கும். பார்ட்னர் ஆதரவாளராக இருப்பார், எனவே அவரது ஆலோசனையையும் பரிந்துரைகளையும் கேட்டு கொள்ளுங்கள்.

துலாம் ராசி

எல்லா பிரச்சனைகளும் முடிந்து , அழகாக இருக்கும் ஒரு சமநிலையான நாள் இது. மிகவும் விடாப்பிடியான பிடிவாதத்தால் இருக்காதே. எல்லாம் நீங்கள் விரும்பும் வழியில் செல்லும் போது, மக்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த எதிர்பார்க்க வேண்டாம்.

விருச்சிக ராசி

கூட்டங்கள் மற்றும் நேர்காணல்கள் நிறைந்த ஒரு நாள். புதிய திட்டங்களைத் தேடிக்கொண்டவர்கள் சில வழிகளைப் பெறுவார்கள், ஆனால் சில உற்சாகமான முடிவுகளை நீங்கள் செய்ய வேண்டியிருக்கும். கவனத்துடன் இருங்கள் மற்றும் பயத்தை வைத்து இல்லாமல் உண்மையை அடிப்படையாகக் கொண்ட முடிவுகளை எடுக்கவும்

தனுசு ராசி

நீங்கள் விரும்பும் விஷயங்களைச் செய்வதற்கு நீங்கள் விரும்பும் மக்களைச் சந்திப்பதற்கும், சந்திக்கும் நேரத்திற்கும் ஒரு சிறந்த ஓய்வு நாள். நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் ஒரு ஆச்சரியமான விஜயத்தைச் செலுத்தலாம். சற்றே மன அழுத்தம் காரணமாக நீங்கள் பங்குதாரர் அல்லது பெற்றோரின் உணர்ச்சி நலனைப் பற்றி கவலைப்படலாம். இளைய குடும்ப உறுப்பினர்களுடன் அதிக சகிப்புத்தன்மையுடன் இருங்கள்.

மகர ராசி

எந்த உறவும் சிறப்பாக அமைவதில்லை. அதனால் , உங்களுடையது சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஒரு சிறிய நம்பிக்கை வைத்திருங்கள். இன்றைய வேலைகளில் நீங்கள் நன்றாகச் செய்ய விரும்பினால், கருத்துக்களை சரியாக எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரே வழி இது தான்.

கும்ப ராசி

உங்கள் தாத்தா பாட்டி அப்பா அம்மா அனைவரும் சொல்லி பயமுறுத்தி வைத்திருக்கும் உங்கள் எல்லைகளை தகர்த்தெறியுங்கள். பரம்பரையாக கடைபிடித்த வடிவமைப்பை மாற்றி அமைக்க வேண்டிய தருணம் இது. பழைய நம்பிக்கைகளையும் பயங்களையும் தகர்த்தெறியுங்கள்.

மீன ராசி

காதலை வரவேற்க திறந்த மனதோடு இருங்கள். நீங்கள் நேசிக்க கூடியவர். மற்றவரை நேசிக்கவும் உங்களை மற்றவர் நேசிக்கவும் தகுதியானவர். பழையதை நினைத்து வருத்தப்படாதீர்கள். பழைய காதலை விட்டு நகர்ந்து வாருங்கள்.

predicted by astro asha shah

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!