உறைய வைக்கும் காட்சிகளுடன் நடிகை அனுஷ்கா நடித்துள்ள ‘நிசப்தம்’ படத்தின் டீஸர் வெளியானது!

உறைய வைக்கும் காட்சிகளுடன் நடிகை அனுஷ்கா நடித்துள்ள ‘நிசப்தம்’ படத்தின் டீஸர் வெளியானது!

நடிகை அனுஷ்கா (anushka) தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 2005ம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நாகார்ஜுனா ஜோடியாக அறிமுகமான இவர், 2006ம் ஆண்டு தமிழில் மாதவனுடன் இரண்டு என்ற படத்தில் அறிமுகமானார். 

இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களான விஜய் சூர்யா விக்ரம் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். மேலும் புகழ்பெற்ற பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். கடைசியாக அவர் நடித்த திரைப்படம் பாக்மதி. 

இவர் சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தில் நடித்து வந்தார். ஆனால் தற்போது இவருக்கு பட வாய்ப்பு சரியாக அமையாததால் பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு நிசப்தம் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. 

twitter

ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் மாதவன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அனுஷ்கா லீடு ரோலில் நடித்து வரும்இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் என மொத்தம் 5 மொழிகளில் வெளிவருகிறது.  

புதுவித நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சந்தியா .. இப்போது எப்படி இருக்கிறார் ?

மேலும் நிசப்தம் திரைப்படம் ஆங்கிலத்தில் சைலன்ஸ் எனும் தலைப்பில் உருவாகி வருகிறது. பாகமதி படத்திற்கு பிறகு மீண்டும் லீடு ரோலில் அனுஷ்கா நடித்துள்ள இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன், ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேடிசன், அஞ்சலி மற்றும் அர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

twitter

சுந்தர்.சியின் 'இரண்டு' படத்தில் மாதவனுடன் அனுஷ்கா ஜோடியாக நடித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்த திரைப்படம் 4 இந்தியர்களுக்கும் அமெரிக்க போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையே நடக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் ஆகும்.

நிசப்தம் என்ற தலைப்புக்கு ஏற்ப படத்தின் நாயகி அனுஷ்கா (anushka) இந்த படத்தில் வாய் பேசாத ஊமைப் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் பிரஸ்ட் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், அதில் ஒல்லியான தேகத்தில் ஓவியராக அனுஷ்கா அழகாக காட்சியளித்தார். 

தெலுங்கில் சங்கத்தமிழன்..தன் பெயரே படத்தின் டைட்டில் : புதிய அந்தஸ்தை பெற்ற விஜய் சேதுபதி!

 

twitter

நிசப்தம் படத்தில் மிகவும் இளமையான தோற்றத்தில் இப்படி ஒரு அனுஷ்காவை (anushka) பார்த்த ரசிகர்கள் மகிழ்ந்தனர். அதில் வரும் நவம்பர் 7ம் தேதி டீசர் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் நிசப்தம் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் விடுமுறைக்கு சென்ற இடத்தில் ஒரு திகில் திரில்லர் சம்பவங்கள் நடைபெறுவது கட்டப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் டீசரை கவுதம் மேனனும், தெலுங்கில்  பூரி ஜெகன்நாத்தும், இந்தி டீசரை நீரஜ் பாண்டேவும் வெளியிட்டனர். 

கணிக்கமுடியாத காட்சிகளுடன் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு அனுஷ்கா நடித்த எந்தவொரு படமும் வெற்றியடையவில்லை. இதனால் நிசப்தம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எழுந்திந்திருந்த நிலையில் டீசர் ரசிகர்களிடையே நல்ல கருத்துக்களை பெற்றுள்ளது. டீசரை பார்த்த பின்னர் படம் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

வைரலாகும் ரகுல் ப்ரீத்தின் புதிய போட்டோஷூட் படங்கள்... ராணாவுடனான உறவு குறித்து விளக்கம்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!