பஸ்ஸுக்கு காசில்லை.. ஆனாலும் 5 லட்ச ரூபாய் தந்தும் வாங்கவில்லை.. தனஞ்ச் ஜெக்தலேயின் நேர்மை

பஸ்ஸுக்கு காசில்லை.. ஆனாலும் 5 லட்ச ரூபாய் தந்தும் வாங்கவில்லை.. தனஞ்ச் ஜெக்தலேயின் நேர்மை

தான் செல்ல வேண்டிய இடத்திற்கு டிக்கெட் எடுக்க 10ரூ தேவை. ஆனால் தன்னிடமோ 3 ரூபாய் தான் இருக்கிறது என்பதால் பெரியவர் ஒருவர் எப்படி ஊருக்கு செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

மராட்டி மாநிலம் சதாரா பகுதியில் வசிப்பவர் தனஞ்ச் ஜெக்தலே . இவர் தாகிவாடி எனும் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்கு திரும்ப பேருந்து நிலையம் வந்திருக்கிறார். அப்போது அவரிடம் 3 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது.                                                      

பஸ்சுக்கு டிக்கெட் 10 ரூபாய் என்பதால் தயங்கியபடி இருந்திருக்கிறார். அப்போது சாலையின் ஓரம் பண்டில் பண்டிலாக பணம் கட்டுக்கட்டாக கிடப்பதை பார்த்திருக்கிறார். அதில் 40000 இருந்திருக்கிறது. அதனை பார்த்தும் ஆசைப்படாமல் அருகில் உள்ளவர்களை விசாரித்திருக்கிறார்.

Youtube

அப்போது பதட்டமான ஒரு நபர் அது தன்னுடைய பணம் தான் என்றும் தன்னுடைய மனைவியின் அறுவை சிகிச்சைக்காக இந்தப் பணத்தை கொண்டு வந்ததாகவும் தொலைத்து விட்டதாகவும் கூறி இருக்கிறார். உடனடியாக அவருக்கு தான் கண்டெடுத்த பணத்தை கொடுத்துவிட்டார் தனஞ்ச் ஜெக்தலே.                                             

அவரது நேர்மையை (honesty) பாராட்டிய அந்த நபர் ஆயிரம் ரூபாயை பரிசாக கொடுக்க முற்பட்டார். அப்போது அது வேண்டாம் என்றும் தன்னுடைய ஊருக்கு செல்ல 3 ரூபாய் மட்டுமே இருப்பதால் மீதம் 7 ரூபாய் கொடுத்தால் போதுமானது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

நீண்ட வற்புறுத்தலுக்கு பின்னரும் 7 ரூபாயை மட்டுமே வாங்கி கொண்டு அவர் சென்றார். இந்த விஷயம் அறிந்த பாஜக புள்ளிகள் அவருக்கு பரிசாக பணம் கொடுத்து பாராட்ட முற்பட்ட போது அதனையும் வாங்க மறுத்துவிட்டாராம் தனஞ்ச் ஜெக்தலே.

Youtube

அதே போல அவர் வசிக்கும் இடத்தில் இருக்கும் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் இதனை கேள்விப்பட்டு ஐந்து லட்ச ரூபாயை கொடுக்க முற்பட்ட போது அதனையும் அமைதியாக தனஞ்ச் ஜெக்தலே மறுத்திருக்கிறார்.                                                         

இதற்கான காரணமாக அவர் கூறியது "யாரோ ஒருவரிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டால் மட்டும் அவர் திருப்தி அடைய முடியாது என்று நினைக்கிறேன். நான் இந்த சமுதாயத்துக்கு சொல்லும் செய்தி மக்கள் நேர்மையாக வாழ வேண்டும் என்பதுதான் என்றாராம் தனஞ்ச் ஜெக்தலே.                                                     

இந்த செய்தியை பார்க்கும்போது இதனூடே இன்னொரு கூடுதல் செய்தியையும் தனஞ்ச் ஜெக்தலே வைத்திருக்கிறார் என்றுதான் எனக்கு தோன்றியது. நேர்மையாக இருந்தால் பரிசுகள் பலன்கள் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புகள் இங்கே அதிகம் இருக்கின்றன. அந்த எதிர்பார்ப்புகள் இல்லாமல் நேர்மை என்பது நமது இயல்பாகவே மாறி விட வேண்டும் என்பதை நமக்கு வாழ்ந்து காட்டி கொண்டிருக்கிறார் தனஞ்ச் ஜெக்தலே.                                        

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!