ஆல்யா மானஸா இப்ப கர்ப்பமாக இருக்காங்க! சந்தோஷத்தை உரக்க சொன்ன சஞ்சீவ்!

ஆல்யா மானஸா இப்ப கர்ப்பமாக இருக்காங்க! சந்தோஷத்தை உரக்க சொன்ன சஞ்சீவ்!

ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ் ஜோடிதான் இப்போது சின்னத்திரை உலகில் வெற்றிகரமான காதல் ஜோடிகள். தங்களுடைய காதலை பிரம்மபிரயத்னப்பட்டு திருமணத்திலும் முடித்துக் கொண்ட அதிர்ஷ்டக்கார ஜோடிதான் ஆல்யா மானஸா சஞ்சீவ் தம்பதி(alya manasa - sanjeev) 

ராஜா ராணி ( raja rani) சீரியலின் போது இவர்கள் பிரபலம் ஆனார்கள். ஆனாலும் இவர்களை மேலும் பிரபலப்படுத்தியது இவர்கள் இருவரும் செய்த டப்ஸ்மாஷ்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மட்டுமே.                         

youtube

செம்பா மற்றும் கார்த்திக் மீது பெரும் பிரியம் கொண்டிருந்த சீரியல் காதலர்களுக்கு இந்த சீரியல் முடிவுக்கு வந்ததால் பெரிய மன வருத்தம் இருந்தது. அதனைப் போக்கும் வகையில் காற்றின் மொழி சீரியலில் சஞ்சீவ் நாயகனாக நடிக்கிறார்.                                                                        

ஆனால் செம்பா பற்றிய சேதி எதுவும் தெரியாமல் ரசிகர்கள் திணறி வந்த நிலையில் இப்போது செம்பா ஆல்யா மானஸா கர்ப்பமாக இருக்கிறார் என்கிற சேதி வந்திருக்கிறது. அதுவும் அரசல்புரசலாக இல்லாமல் காதல் கணவன் சஞ்சீவ் பொது மேடையில் இந்த அறிவிப்பை மிக சந்தோஷமாக அறிவித்திருக்கிறார்.

 

youtube

விஜய் டிவி தர்மபுரியில் நடத்திய விஜய் நட்சத்திர கொண்டாட்டம் எனும் பிரம்மாண்டமான நிகழ்வை நடத்தியது. இதில் பிரபலங்கள் அனைவரும் குழுமியிருந்த ஒரு பொழுதில் காதல் கணவர் சஞ்சீவ் தன்னுடைய காதல் மனைவி ஆல்யா மானஸா கர்ப்பமாக இருக்கிறார் என்பதை சந்தோஷமாக அறிவித்தார்.

இதனால் அங்கிருந்த பிரபலங்கள் அத்தனை பேரின் வாழ்த்துக்களும் தம்பதிகளுக்கு உடனேயே கிடைத்தன. ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். சஞ்சீவ் ஆல்யா மானஸா ஜோடி தங்கள் காதலை சரியானபடி கொண்டு சென்று கொண்டுள்ளனர் என்பதற்கு இதொரு சாட்சி.

 

youtube

முன்னதாக ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ் தம்பதியினர் திருமணமான இரண்டாவது மாதத்திலேயே சொந்தமாக வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்தனர். இதற்கடுத்து இப்போது ஆல்யா மானஸா கர்ப்பமாக இருக்கிறார். இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார் சஞ்சீவ்.

இனி ஆல்யா மானஸாவை சின்னத்திரையில் பார்க்க சில வருடங்கள் ஆகலாம் போல!                                                                                                         

 

youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                                  

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!