ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்:பிளாஸ்டிக்கு பதிலாக இனி இவைகளை பயன்படுத்தலாமே!

 ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்:பிளாஸ்டிக்கு பதிலாக இனி இவைகளை பயன்படுத்தலாமே!

உலகளவில் நெகிழி அல்லது பிளாஸ்டிக்கால்  ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி தெரிந்து கொண்டாலும், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இன்னும் முழுமையாக நெகிழியை ஒழிக்க முடியவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் பயன்படுத்தும், மக்காத சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிக்கும் நெகிழியை விட்டொழிக்க முயற்சி எடுக்க வேண்டும். நெகிழியின் பயன்பாடு மிகவும் சுலபமாகவும், எளிமையாகவும் இருப்பதால், பொருட்களை கொண்டு செல்ல மட்டுமல்ல, சாப்பிடவும், சூடான குழம்பு, தேநீர், போன்றவற்றிற்கும் பயன்படுத்தும் போது தான் சுற்றுப்புறம் மிக மோசமான நிலையை அடைந்திருக்கிறது.

நெகிழிக்கு பதிலாக பயன்படுத்தக் கூடிய பொருட்கள்

எந்தெந்த நேரங்களிலெல்லாம் நெகிழியை பயன்படுத்துகிறோம் என்றும், அப்போது என்னமாதிரியான தீர்வு மேற்கொள்ளலாம் (plastic alternatives) என்றும் பார்ப்போம்.

1. காய்கறிகளையும் பழங்களையும் வாங்கும்போது

காய்கறிகளை, பழங்களை வாங்கும்போது நெகிழியால் செய்த பைகளைத் தவிர்த்து துணிப்பை பயன்படுத்துங்கள்.வேலைக்குச் சென்று திரும்பும் போது வரும் வழியில் காய்கறிகளையும், பழங்களையும் வாங்கி வர முனைகிறோம். அப்போதுதான் இந்த பைகள் வீட்டில் அதிகம் கூடுகிறது. கைபேசியை எடுக்கும்போதெல்லாம், உங்கள் கைப்பையில் அடங்குமாறு, மெல்லிய துணிப்பைகளை எப்போதும் எடுத்துச் செல்லுங்கள்.

2. தண்ணீர் பாட்டில்கள்

நெகிழியால் செய்த பாட்டில்களுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்துங்கள். அலுவலகத்தில், திருமணங்களில், விழாக்களில், ரயில் நிலையங்களில், பயணத்தின் போது என பல இடங்களில் மக்களுக்கு தர எளிதாக இருப்பதால், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பாட்டில்களில் தண்ணீர் தரப்படுகிறது. இந்த இடங்களில், கூலர் பயன்படுத்தலாம். பயணங்களின் போது வீட்டில் இருந்து சில்வர் அல்லது செம்பு பாட்டில்கள்(தற்போது எங்கும் கிடைக்கிறது), அவற்றை கொண்டு செல்லலாம். 

ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி டம்ளர்கள் பயன்படுத்தும் இடங்களில், சில்வர் டம்ளர் பயன்படுத்தலாம். மேலும், சமையல் அறையில் உணவுப் பொருட்களை போட்டு வைக்க கண்ணாடி பாட்டில்கள் பயன்படுத்துங்கள். உணவுப் பொருள் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். பிளாஸ்டிக் பாட்டில்களை விட உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. நெகிழியில் அடைத்து விற்கும் குளிர்பானங்களை தவிர்க்கவும். எலுமிச்சை பழச்சாறு போன்ற இயற்கை பானங்களுக்கு மாறுங்கள். நெகிழியில் இருந்தும் விடுபடலாம், குளிர்பானத்தால் உடலுக்கு வரும் தீங்கில் இருந்தும் தப்பிக்கலாம்.

3. துணிக் கடைகளுக்கு செல்லும்போது

Pexels

துணிக் கடைகளுக்கு செல்லும்போது அழகான ஜூட் பேக் எடுத்துச்செல்லலாம்.பண்டிகை நாட்களில், துணிக்கடைக்கு செல்வது திட்டமிட்டுத்தான் செல்கிறோம். அப்போது ஒரு அழகான ஜூட் பையை எடுத்துச் செல்லுங்கள். கடைகளில் கொடுக்கும் நெகிழி பைகளைத் தவிர்க்கலாம். 

4. பிளாஸ்டிக் ஸ்பூன்- கத்தி

பிளாஸ்டிக் ஸ்பூன், கேக் வெட்ட பயன்படும் பிளாஸ்டிக் கத்தி ஆகியவற்றிற்கு பதிலாக மரத்தினால் ஆனா ஸ்பூன், கத்திகளை பயன்படுத்துங்கள்.நெகிழியால் ஆன ஸ்பூன், கத்தி, போர்க்(fork) என அனைத்து கட்லெரி(cutlery) ரகங்களும் தற்போது எடை இல்லாத மரத்தினால் செய்யப்பட்டு குறைந்த விலையில் கிடைக்கிறது. நெகிழியால் செய்யப்பட்ட கட்லெரி எளிதில் உடையும் தன்மை கொண்டது. மேலும் பிளாஸ்டிக் ஸ்பூனால் சூடான உணவை சாப்பிடும்போது, உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும்.

உணவுப் பொருட்களைக் கொண்டு(கோதுமை) செய்யப்பட்ட ஸ்பூன்கள்கூட கிடைக்கிறது. குழந்தைகள் ஆர்வமாக உணவு உண்டு, அந்த ஸ்பூனையும் சாப்பிடலாம் என்று கூறினால் குதூகளிப்பார்கள். பிளாஸ்டிக் தட்டுகளுக்கு பதிலாக, பாக்குமர தட்டுகளைப் பயன்படுத்தலாம். அவை இன்னும் உறுதியாக இருக்கும். 

5. மாமிசம் வாங்க

மாமிசம் வாங்க நெகிழி பைகள் வேண்டாம், சில்வர் பாத்திரங்கள் போதும்.மாமிசம் வாங்கும்போது இரண்டு இரண்டு நெகிழி பைகள் தருவார்கள். அது மக்காத குப்பையாகி சுற்றுப்புறத்திற்கு தீங்குதான் விளைவிக்கும். அதற்கு பதிலாக, சில்வர் பாத்திரங்கள் பயன்படுத்துங்கள். வீட்டில் இருந்து செல்லும்போது அதற்கான பாத்திரத்தை எடுத்துச் சென்றால் போதுமே!

6. பிளாஸ்டிக் ஸ்ட்ரா

Pexels

பிளாஸ்டிக்  ஸ்ட்ராவிற்கு பதிலாக சில்வர் ஸ்டிரா பயன்படுத்துங்கள். சில்வர் ஸ்டிராவை, சுடு நீரில் போட்டால் போதும், நன்றாக சுத்தமாகிவிடும். சில்வர் பயன்படுத்த விரும்பாதவர்களுக்கு, மூங்கிலால் ஆன ஸ்ட்ரா கூட கிடைக்கிறது. ஆனால், அவை முழுவதும் மூங்கிலினால் ஆனதா என்று சோதித்து வாங்க வேண்டும். மூங்கில் போன்ற நிறத்தில், ரசாயனம் கலந்து விற்கப்படும் பொருட்களில் இருந்து கவனமாக இருங்கள்.

7. பிளாஸ்டிக் டூத் பிரஷ்

பிளாஸ்டிக் டூத் பிரஷ்க்கு பதிலாக மூங்கில் டூத் பிரஷ் பயன்படுத்தலாம்.பிளாஸ்டிக் டூத் பிரஷ்கள், டாய்லெட் பிரஷ்கள், ஆகியவற்றிற்கு பதிலாக மூங்கில் பிரஷ்கள் பயன்படுத்தலாம். இதை இங்கு வாங்கலாம். 

8. குழந்தைகள் விளையாடும் பிளாஸ்டிக் பொம்மை

குழந்தைகள் விளையாடும் பிளாஸ்டிக் பொம்மைகளுக்கு பதிலாக மரத்தினால் ஆன பொம்மைகள் வாங்கித்தாருங்கள்.நெகிழியால் ஆன பொம்மைகளைத் தவிர்த்து மரத்தினால் ஆன பொம்மைகள், துணியினால் ஆன பொம்மைகளை வாங்கிக் கொடுங்கள். 

9. பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ்

Pexels

பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் தவிர்த்து சில்வர் அல்லது கண்ணாடி லஞ்ச் பாக்ஸ்க்கு மாறுங்கள்.ஃபுட் கிரேட் பாதுகாக்கப்பட்ட நெகிழியால் ஆன லஞ்ச் பாக்ஸ் என்றாலும், சூடான பொருட்களை வைக்கும்போது, நாளைடைவில் வாசனை வர ஆரம்பிக்கிறது. குழந்தைகளுக்கு என இப்போது லீக் ப்ரூஃப் கொண்ட லஞ்ச் பாக்ஸ் கிடைக்கிறது. பெரியவர்களுக்கு கண்ணாடி பொருட்களால் ஆனா லஞ்ச் பாக்ஸ் ட்ரெண்டியாக அழகாக கிடைக்கிறது. சுத்தம் செய்வதும் எளிது.

மேலும், பயணங்களின்போது, வாழை இலையில் உணவை மடித்து எடுத்துச் செல்லலாம். அது உடலுக்கும் ஆரோக்கியம் தரும், சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிக்காது. உணவை உண்ட பின் குப்பை தொட்டியில் போட்டுவிடலாம். உங்கள் பை காலியாகி விடும்.

10. பிளாஸ்டிக் குப்பை போடும் பை

பிளாஸ்டிக் குப்பை போடும் பைகளுக்கு பதிலாக சில்வர் குப்பை தொட்டிகளையும், மக்கும் தன்மை கொண்ட பைகளையும் பயன்படுத்துங்கள்.நெகிழி பைகளில் எது வாங்கி வந்தாலும் அதைப் பயன்படுத்தி குப்பை சேர்த்து கடைசியில் வெளியில் தூக்கி வீசுகிறோம். அதோடு நம் வேலை முடிந்தது என்று இருக்கிறோம். ஆனால் அது மக்காமல், மழைநீரும் பூமிக்கு செல்ல முடியாமல் போகிறது, மேலும் மாடுகள் அந்த பைகளை உண்டு மாண்டு விடுகிறது.இரும்பு அல்லது சில்வர் குப்பைத் தொட்டிகள் கிடைக்கின்றன. மேலும், மக்கும் பைகளும் கிடைக்கின்றது. அவற்றைப் பயன்படுத்துங்கள். 

ஒரு நாளிற்கு 26000டன் பிளாஸ்டிக் குப்பைகள் இந்தியாவில் மட்டும் கொட்டப்படுகிறது. நமக்கென்ன என்று ஒவ்வொருவரும் இருந்து விடாமல், அவரவர் வீடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து நெகிழி பொருட்களையும் மாற்றினால், விரைவில் நல்ல ஆரோக்கியமான சுற்றுச்சூழலை ஏற்படுத்தலாம்.

மேலும் படிக்க - எளிமையாக குறைந்த பராமரிப்பில் வீட்டிற்குள் வளர்க்க கூடிய செடிகள்!

பட ஆதாரம்  - Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!