தமிழ் சினிமாவில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை , செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை அதிதி ராவ். தனது முதல் படத்திலேயே தமிழக ரசிகர்களிடம் பேரன்பை பெற்றுவிட்டார். தற்போது விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள சைக்கோ என்ற படத்தில் நடிகை நித்யா மேனனுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் வரும் 27ம் தேதி திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் பிஸியான நடிகையாக இருக்கிறார் நடிகை அதிதிராவ்.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிதி, அனைத்து இயக்குனர்களுமே எனது குருநாதர்கள் என்று கூறியுள்ளார். ஒரு கதையில் நடிக்க கையெழுத்திடும்போது அந்த படத்தை இயக்குவது யார் என்பதை தான் நான் முதலில் கவனிப்பேன். அதன் பிறகு அந்த கதையில் என் கதாபாத்திரம் என்ன என்பதை கேட்பேன்.
ஏற்கனவே பணிபுரிந்த இயக்குனருடன் மீண்டும் பணிபுரிய வாய்ப்பு வரும்போது பெருமகிழ்ச்சி அடைவேன். காரணம் மீண்டும் அவர்கள் அழைக்கிறார்கள் என்றால் அவர்கள் என்னுடைய திறமையை நம்புகிறார்கள் என்று அர்த்தம். அது ஒரு அற்புதமான உணர்வு.
ட்விட்டரை விட்டு அதிரடியாக வெளியேறிய குஷ்பு : குடும்பத்தினருடன் நிம்மதியாக வாழ விருப்பம்!
அதுபோன்று நிகழும்போது ஆசீர்வதிக்கப்பட்டவளாக நினைத்துக் கொள்வேன் என பெருமையாக கூறியுள்ளார். மேலும் தனது திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்ற பிரமாண்ட கனவையும் அதிதி வெளிப்படுத்தியுள்ளார்.
அதாவது கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் ஒரு ராஜா காலத்து கோட்டையில் தான் அவரது திருமணம் நடைபெற வேண்டும் என்று விரும்புவதாகவும்,
திருமணம் முடிந்த பின்னர் மாப்பிள்ளையின் கையைப் பிடித்துக்கொண்டு கடற்கரையில் ஓட வேண்டும் என்றும் ஆசை உள்ளதாம். மேலும் திருமண விஷயத்தில் பெண்களுக்கு இறக்கை இருக்கிற குதிரையில் ராஜகுமாரன் போல மணமகன் வர வேண்டும்.
ராஜகுமாரி போல் இருக்கும் தன்னை ஒரே கையால் தூக்கி குதிரையில் உட்கார வைத்து அழைத்து செல்ல வேண்டும் என்றெல்லாம் ஆசைகள் இருக்கும் என்று அந்த காலத்து ராஜா ராணி கதைகளில் சொல்வது உண்டு. எனக்கும் சிறுவயதில் இதுபோன்று ராஜகுமாரன் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
எனது அம்மா திருமணம் நடந்தபோது மேக்கப் இல்லாமல் எளிமையாக இருந்தார். அவர் போலவே நானும் அப்படியே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
டிஸ்னியின் ஃப்ரோஸன் 2 தமிழ் பதிப்பில் நாயகிக்கு பின்னணி குரல் கொடுத்துள்ள ஸ்ருதி ஹாசன்!
அதிதி ராவின் இந்த ஆசைகள் எல்லாம் அவரது முதல் திருமணத்தில் கைகூடவில்லை. மத்திய அரசின் வருவாய் துறையில் அதிகாரியாக உள்ள சத்யதீப் மிஸ்ரா என்பவருடன் அதிதிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது.
ஆனால் அந்த திருமணம் தோல்வியில் முடிந்ததால், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கணவரை பிரிந்துவிட்டதாக அதிதியே ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
எனவே அதிதி தனது இரண்டாவது திருமண குறித்த கனவை வளர்த்து வருகிறார். ஆனால் மாப்பிள்ளை யார் என்பது குறித்து அவர் எந்த தகவலையும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மான பிக் பாஸ் ஷெரின் : அசத்தலான வைரல் புகைப்படங்கள்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!