குழந்தை எப்போது என கேள்வி கேட்ட ரசிகர்.... கோபமாக பதிலடி கொடுத்த நடிகை சமந்தா!

குழந்தை எப்போது என கேள்வி கேட்ட ரசிகர்.... கோபமாக பதிலடி கொடுத்த நடிகை சமந்தா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சமந்தா. பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா மகன் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர். 

8 வருட காதலுக்குப் பின்னர் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் இருவரும் தங்களது பணிகளில் பிஸியாக இருந்தாலும்,  ஆட்டோ நகர் சூர்யா, மஜிலி உள்ளிட்ட திரைப்படங்களிலும் இணைந்து நடித்தனர்.  

instagram

மேலும் விடுமுறை தினங்களில் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சுற்றி வந்தனர். சமீபத்தில் ஸ்பெயின் சென்ற சமந்தா - நாக சைதன்யா ஜோடி  அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிந்தனர். இந்த படங்களை பார்த்த அவரது ரசிங்கர்கள் எப்போது குழந்தை பெற்று கொள்ள போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி வந்தனர். 

 
 
 
View this post on Instagram
 
 

My 🍳 @chayakkineni 🤴🏽 .... PC @shilpareddy.official 💓

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

அதற்கு விரைவில் என இருவரும் பதில் அளித்திருந்தனர். ஆனால் திருமணம் முடிந்து 2 வருடங்களுக்கு மேல் ஆன நிலையில் தற்போது வரை சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. இதனால் தொடர்ந்து இது தொடர்பான கேள்விகள் எழுந்து வந்தது. 

இதனால் கோபமான சமந்தா இன்ஸ்டாகிராமில் ஒருவருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். அதில் "என் உடல் எப்படி இயங்குகிறது என இப்படி கேட்பவர்களுக்கு எனது பதில், வரும் 7 ஆகஸ்ட் 7 மணி 2022 வருடம் நான் குழந்தை பெற்றுக்கொள்வேன்" என தேதி, நேரத்துடன்  கோபமாக பதில் கூறியுள்ளார் சமந்தா. 


முன்னதாக பட வாய்ப்புகள் குறைந்ததால் சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக சமந்தா கூறியிருந்தார். இந்நிலையில் அவர் பெரிய திரையில் தானே மவுசு குறைந்துள்ளது என்று வெப் சீரீஸ் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார். 

அஞ்சான் படத்தில் வில்லனாக  நடித்த நடிகர் மனோஜ் பாஜ்பாய் சமீபத்தில் 'தி பேமிலி' என்ற வெப் சீரிஸில் நடித்தார். அமேசான் பிரைமில்  வெளியான இந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது. இதிலும் மனோஜ் பாஜ்பாய் ஹீரோவாக நடிக்கவுள்ளார். 

twitter

இந்நிலையில் நடிகை சமந்தா இந்த வெப் சீரிஸில் வில்லியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதுவும் அவர் தீவிரவாதியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமந்தா கையில் தற்போதைக்கு 96 படத்தின் தெலுங்கு ரீமேக் மட்டுமே உள்ளது. அந்த படத்தில் வரும் தனது காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்ட நிலையில் விரைவில் வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் பிரியாமணி, சந்தீப் கிஷன் ஆகியோரும்  நடிக்கவுள்ளனர்.

இதுவரை சமந்தாவை ஒரு அழகான பேபி டால் கதாநாயகியாக பார்த்திருப்போம். ஆனால் தற்போது வேறு ஒரு கதாபாத்திரத்தில் அதுவும் வில்லியாக நடிக்க உள்ளது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை  தூண்டியுள்ளது. 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                                    

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!