logo
ADVERTISEMENT
home / Celebrity Life
ரம்யாபாண்டியன் பாணியில் இறங்கிய நடிகை நந்திதா : சேலையில் சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்!

ரம்யாபாண்டியன் பாணியில் இறங்கிய நடிகை நந்திதா : சேலையில் சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்!

தமிழில் அட்டக்கத்தி திரைப்படம் மூலம் கடந்த 2012ல் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நந்திதா. எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். 

அதன்பின்னர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு அட்டகத்தி, எதிர்நீச்சல் ஆகிய படங்கள் சிறந்த படமாக அமைந்தது. பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து இவர் நடித்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படம் சிறந்த படமாக அமைந்தது. 

        மேலும் படிக்க – கோடிகளில் வாழும் நடிகை நயன்தாராவின் பெற்றோர்களை பார்த்திருக்கிறீர்களா..வைரலான புகைப்படம் !

அந்த படத்தில் ” குமுதா ஹேப்பி அண்ணாச்சி” என்ற  விஜய் சேதுபதியின் வசனம் ரசிகர்கள் மத்தில் பெரும் பேசப்பட்டது. கன்னட நடிகையான இவர் அட்டகத்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் பெற்றார்.

ADVERTISEMENT

twitter

தெலுங்கிலும் குறிப்பிடும் அளவுக்கு படங்களில் நடித்து பெயர் இவர் பெற்றவர். தற்போது 7, டானா ஆகிய தமிழ் படங்களிலும், ஐபிசி 376, கல்கி உள்ளிட்ட தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு பெரும்பாலும் குடும்ப பெண் போன்ற கதாபாத்திரங்களே அமையும். 

இந்த பிம்பத்தை உடைக்க நினைத்த நந்திதா (nandita), அவ்வப்போது மாடர்ன் உடைகளில் போட்டோஷூட் நடத்தில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். கடந்த வாரம் ஈரம் சொட்டும் உடையில் நீச்சல் குளத்தில் இருந்தபடி சில புகைப்பங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்தார். 

ADVERTISEMENT

இந்நிலையில் தற்போது இளஞ் சிவப்பு சேலையில் இடுப்பு தெரியும் அளவிற்கு ஹாட் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள்  தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

முன்னதாக மாடர்ன் உடைகள் மட்டுமின்றி சேலையிலும் ஹாட் போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியானார் நடிகை ரம்யா பாண்டியன். நடிகை ரம்யா பாண்டியன் இதேபோன்று சேலையில் இடுப்பு மடிப்புகள் தெரிய ஹாட் போட்டோ ஷூட் நடத்தி பிரபலமானார்.

          மேலும் படிக்க – பொம்மையுடன் அக்ஷரா ஹாசன்… ‘அக்னிச் சிறகுகள்’ படத்தின் கேரக்டர் போஸ்டர் வெளியீடு!

ADVERTISEMENT

twitter

அவரது புகைப்படங்கள் இணையத்தை ஒரு உலுக்கு உலுக்கியது என்றே கூறலாம். அதனால் அவர் தற்போது மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று சேலையில் போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

தற்போது இந்த சேலை போட்டோஷூட் டிரெண்டில் நடிகை நந்திதாவும் (nandita) இணைந்துவிட்டார். சேலையிலும் என்னால் கவர்ச்சி காட்ட முடியும் என மற்ற நடிகைகளுக்கு சவால் விடும் அளவு வளைவு நெளிவுகளில் அமர்க்களப்படுத்தி உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் லைக் மற்றும் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். 

                            மேலும் படிக்க – 16 வயதில் ஒரு பையனுடன் டேட் சென்றேன் .. நடிகை ராசி கண்ணா வெளியிட்ட அதிர்ச்சி  தகவல்!

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

22 Nov 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT