அப்போதுதான் பூத்த பூக்கள் போல எப்போதும் பிரெஷ் லுக் வேண்டுபவர்க்கு சில ரகசிய குறிப்புகள்!

அப்போதுதான் பூத்த பூக்கள் போல எப்போதும் பிரெஷ் லுக் வேண்டுபவர்க்கு சில ரகசிய குறிப்புகள்!

அன்றலர்ந்த மலர் போல என்பது சங்க தமிழ் காலத்தில் இருந்தே வழக்கில் இருந்த சொல்லாகும். அதாவது அப்போதுதான் பூத்த பூவை போல அவள் முகம் அழகாக இருந்தது என்பதுதான் அன்றைய ஆடவர்கள் தங்கள் பெண்களை பற்றி வர்ணித்த விதமாகும்.                                                             

அப்படியான அப்போதுதான் மலர்ந்த பூக்கள் போன்ற பிரெஷ் லுக் போன்ற முகப்பொலிவை நீங்கள் பெற வேண்டும் என்றால் நான் உங்களுக்கு சில ரகசிய வழிகளை (secret tips) பரிந்துரைக்கிறேன். அதனை நீங்கள் பின்பற்றினால் உங்கள் வயதில் 5 வருடங்கள் குறைந்து புதிய புத்துணர்ச்சி ஊட்டும் முகத்தை உங்களால் பெற முடியும்.

Youtube

சருமத்தை பொறுத்தவரை உங்கள் சின்ன சின்ன அக்கறைகள் உங்கள் முகத்தை பல வருடங்கள் இளமையாக இருக்க வைக்கும். அப்படியான சில கவனிப்புகளை இப்போது பார்க்கலாம்.                                                           

எப்படியும் உங்கள் சமையலில் பீட்ரூட் இருக்கும். அப்படியான நாட்களில் துருவிய பீட்ரூட்டில் கொஞ்சம் எடுத்து உங்கள் முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். பீட்ரூட் பொரியல் வெந்து முடியும் வரை முகத்தில் இருக்கட்டும். அதன் பின்னர் முகம் கழுவுங்கள்.உங்கள் முக சுருக்கங்கள் மறைய இது ஒரு வழியாகும்.

 

Youtube

சந்தனப்பொடி எப்போதும் உங்கள் வீட்டில் இருக்கலாம். அல்லது வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். காதி கிராப்ட் பொடி கலப்படம் இல்லாமல் தூய்மையானதாக இருக்கும். இரண்டு ஸ்பூன் சந்தன பொடியை சில துளிகள் ரோஸ் வாட்டருடன் கலந்து கொள்ளுங்கள். அதனுடன் சிறிதளவு பால் சேர்த்து முகம் கழுத்து கைகளில் அவ்வப்போது தடவி உலர விட்டு கழுவிக் கொள்ளுங்கள். சில வாரங்கள் முகம் செப்பு சிலையாக மின்னும்.

குளியல் அழகின் முக்கியமான கட்டம். அப்படியான முக்கியமான நேரத்தில் சுடு தண்ணீரில் குளிப்பது உங்கள் சருமத்துவாரங்களை சுருங்க வைக்கும். இதனால் விரைவில் வயதான தோற்றத்தை அடைவீர்கள். இதனை தவிர்க்க மிதமான சூட்டில் குளித்து பழகுங்கள். முடிந்தவரை குளிர்ந்த நீர் உங்கள் அழகை பத்திரமாக பாதுகாக்கும்.

 

Youtube

முகம் இளமையுடன் இருக்கவும் புதுப்பொலிவுடன் திகழவும் நீங்கள் சாப்பிடும் உணவில் வைட்டமின் சி அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் முதிய தோற்றம் உங்களை எளிதில் அண்டாது.

கேரட்டை சாறெடுத்து அதனை பஞ்சினால் தொட்டு உங்கள் முகத்தில் ஒற்றி எடுங்கள். இப்படி அடிக்கடி செய்து வர முகம் பொன் போல பொலிவாக மாறும்.

அதைப்போலவே உங்கள் வீட்டில் ஸ்வாமி படங்களுக்கு நீங்கள் போடும் ரோஜாப்பூக்களை எடுத்து அதனை நிழலில் காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். தோன்றும்போதெல்லாம் அந்தப் பொடியுடன் பாலாடையை கலந்து கொள்ளுங்கள். அதனை முகத்தில் பூசி வாருங்கள். புத்தம் புது ரோஜா பூ போல உங்கள் முகம் பேரழகாக மாறும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!