நம் அனைவருக்கும் ஒரு தனித்துவமிக்க திறன் இருக்கும். ஆனால் உங்கள் ராசிப்படி (zodiac sign) உங்களுக்குள் இருக்கும் திறனை நீங்கள் கண்டறிந்தீர்களா? இதுவரை கண்டறியவில்லை என்றால், கீழ்கூறிய அந்தந்த ராசியின் ரகசிய குணாதிசயங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
எல்லா விஷயத்திலும் எப்பொழுதும் முதலிடத்தில் இருக்க விரும்பும் மேஷ ராசி நபர்கள் பிடிவாதமான மக்கள் அவர். இப்படிப்பட்டவர்கள் ராசியின் பட்டியலிலும் முதல் இடத்தையே பெற்றுள்ளனர்.
இவர்களின் திறன்கள் - போட்டியில் சிறப்பாக பங்கு கொள்வார்கள், மற்றவர்களை கிண்டலும் கேலியுமாக பேசுவார்கள்.
ரிஷப ராசி நபர்கள் அமைதியான சூழலில் ஓய்வெடுக்க விரும்புவார்கள். நிதானத்தை விரும்பும் இவர்கள் இனிமையான ஒலிகளை கொண்ட சுற்றுச்சூழலில் இருக்க விரும்புவார்கள். பூமியை அடையாளமாகக் கொண்ட இத்தகைய ராசிக்காரர்களின் அடையாளச் சின்னம் காளை ஆகும்.
இவர்களின் சிறப்பம்சம் -பாடுவது, வாதங்களை வெல்வது மற்றும் சிகை அலங்காரம்
காற்றை அடையாளச் சின்னமாக வைத்திருக்கும் மிதுன ராசிக்காரர்கள் (horoscope) இருமடங்கு ஆற்றலுடனும் இருப்பதால் இவர்களுக்குள் இருக்கும் இரட்டையர்கள் எப்போதுமே பல விஷயங்களை செய்ய விரும்புவார்கள் . இவர்கள் ஏராளமான திறன்களில் சிறப்பாக தோன்றினாலும் இவர்களின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு -
விவாதங்களை வெல்வார்கள், தங்களைத் தானே கேலி செய்வது, மற்றவர்களின் முன் ஒரு ஈர்க்கும் தோற்றத்தை உருவாக்குவதில் வல்லவர்கள்.
கடக ராசிக்காரர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் அதன் சரியான ஆற்றலை சிறப்பாக தெரிந்துகொள்வார்கள். நீரின் அடையாளத்தைக் கொண்ட இவர்கள் மிகவும் உணர்ச்சி பூர்வமாகவும் நடைமுறைக்கு ஏற்றவாறும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
இவர்களின் சிறப்பம்சங்கள் -வீடியோ கேம்களை விளையாடுவது, படித்தல், எழுதுதல், மன்னிப்பு கேட்பதில் கெட்டிக்காரர்கள் .
அனைவரின் கவனத்தையும் எப்பொழுதும் ஈர்க்கும் சிம்ம ராசிக்காரர்கள் தனது அந்தஸ்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட எப்போதும் தயாராக இருப்பார்கள். இத்தகைய குணம் கொண்ட இவர்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருப்பார்கள். நெருப்பின் அனைத்து அறிகுறிகளும் கொண்ட இவர்களின் குணாதிசயங்கள்(skill) பின்வருமாறு.
வாய்வழி விளக்கக்காட்சிகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள், நாடகம், நடிப்பு, கரோக்கி இவை அனைத்திலும் வல்லுனர்களாக செயல்படுவார்கள்.
நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ப நடந்து கொள்ளும் கன்னி ராசி மக்கள் தேவைப்படும் போதெல்லாம் தங்கள் திறமைகளை மேம்படுத்த தயாராக இருப்பார்கள்.
இவர்களின் சிறப்பம்சங்கள் - ஒரே நாளில் ஒரு புத்தகத்தை முடிக்கும் திறன் கொண்டவர்கள், ஒருகுரலை மனப்பாடம் செய்தல், விஷயங்களை அமைப்பதில் வல்லுனர்கள்.
சமநிலை மற்றும் நல்லிணக்கத்தின் குணங்களைக் கொண்ட துலாம் மக்கள் எப்பொழுதும் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் ஒரு சமநிலையை உருவாக்க கடுமையாக முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்.
இவர்களின் சிறப்பு அம்சங்கள் -அலுவலக விளக்கக்காட்சிகளை உருவாக்குவதில் வல்லுனர்கள், நல்ல ஆடைகளை தேர்ந்தெடுப்பது,விஷயங்களை தள்ளிப்போடுவது.
நீரை அடையாளமாக கொண்ட விருச்சக ராசிக்காரர்கள் தனது ஆர்வத்தை மனநல மற்றும் உணர்ச்சி மண்டலத்திலிருந்து பெறுகிறார்கள். இவர்கள் எப்பொழுதும் உணர்ச்சி வசப்படுவார்கள்! இவர்களுக்குள் இருக்கும் திறன்கள் (ability) -
நீண்ட காலத்திற்குப் பிறகும் முகங்களை நினைவு வைத்துக் கொள்வார்கள், அவர்கள் உண்மையில் விரும்பும் ஒரு நபரை வெறுக்கும் படி நடிப்பார்கள்,படம் வரைதல்.
எப்பொழுதும் தனது அறிவை மேம்படுத்தும் முயற்சியில் இருக்கும் தனுசு ராசிக்காரர்கள் சுற்றுலா பயணம் செல்ல விரும்புவார்கள். எந்த ஒரு விஷயத்தையும் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் எடுத்துச்செல்லும் இத்தகைய ராசிக்காரர்களின் திறமைகளை கீழ்வருமாறு காணலாம்.
சொற்கள் விளையாடுவது, சமூக ஊடகங்களில் வல்லுனர்கள், கண்ணாமூச்சி விளையாடுதல்
கடல் ஆட்டின் உருவத்தைக் கொண்ட மகர ராசி நேயர்கள் தேவைப்படும்போது உணர்ச்சி பூர்வமான நிலையிலிருந்து நடைமுறை வாழ்க்கைக்கு தனது மனநிலையை மாற்றிக் கொள்வார்கள். பூமியின் சின்னத்தைக் கொண்ட இந்த ராசிகாரர்களின் சிறப்பம்சங்கள் -
இவர்கள் வெறுக்கும் நபர்களிடம் கூட பொறுமையுடன் கையாளுவார்கள், ஆசிரியர்களுக்கு பிடிக்கும் படி நடந்து கொள்வார்கள், கடைசி நிமிடத்தில் கடின உழைப்புடன் தனது வேலைகள் அனைத்தையும் முடித்து விடுவார்கள்.
நீங்கள் விளையாட்டு பிரியராக இருந்தால் உங்களுக்கு மிகவும் பொருத்தமுள்ள ராசிக்காரர் கும்ப ராசிக்காரர் ஆவர். காற்றின் அடையாளங்களில் கடைசியாக வரும் இந்த ராசி நபர்கள், நீரின் பிரதிநிதித்துவம் கொண்டவர்கள் மற்றும் எந்த ஒரு சூழ்நிலையையும் குணப்படுத்தும் திறன் கொண்டவர்கள்.
இவர்களின் திறன்கள் இதுவாக இருக்கலாம் - விளையாட்டு, உண்மையைப் பேசுவது, எழுதுவது.
கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் தொடர்ந்து திசைதிருப்பி கொண்டே இருக்கும் மீனம் ராசிக்காரர்கள், ராசிகளின் பட்டியலில் கடைசியாக இடம் பெற்றவர்கள். மீனம் என்பது மகிழ்ச்சி, வலி ,அச்சங்கள் போன்ற மற்ற எல்லா ராசிக்காரர்களின் அறிகுறிகளிலும் பண்புகளிலும் செயல்படும் ராசி ஆகும் .
இவர்களின் நற்குணங்கள் - நகைச்சுவையான பதில்கள், நடிப்பு, சிறப்பான பரிசுகளை தேர்ந்தெடுப்பது.
பட ஆதாரம் - Shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.