நீங்கள் காதலிப்பவர் உங்களை ஏமாற்றி விடுவாரா! அவரின் இந்த குணங்களை சரிபாருங்கள்!

நீங்கள் காதலிப்பவர் உங்களை ஏமாற்றி விடுவாரா! அவரின் இந்த குணங்களை சரிபாருங்கள்!

காதல்... இந்த மூன்றெழுத்து வார்த்தை செய்யும் மாயம் இந்த உலகை நகர்த்திக் கொண்டிருக்கிறது. விதம் விதமான காதல்கள் தினமும் நம் கண்பார்வையில் வந்து விழுகிறது. அதில் நிஜம் எது பொய் எது என்பதை எவர் அறிவார்.

பத்திரிகைகளில் தவறான காதல்களில் குற்றங்களை இழைக்கும் காதலர்களை படிக்கிறோம். டிவி சீரியல்களிலோ கேட்கவே வேண்டாம். முன்பு இருந்த வரைமுறைகளை மீறியவை எல்லாமும் இப்போது காதல் எனப்படுகிறது.

 

Youtube

இதற்கு நடுவிலும் ஆங்காங்கே சிறிய பனி துகள் போல உண்மைக் காதல்கள் ஆர்ப்பாட்டங்கள் கண்களில் படாமல் ரகசியமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் போலி காதல்கள் அழிக்க முடியாத அசுரன் போல கர்ஜித்துக் கொண்டிருக்கிறது.

இதில் நீங்கள் காதலிப்பவர் உங்களைக் காதலிக்கிறாரா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். காதலில் ஏமாற்றும் பழக்கம் ஆண் பெண் இருபாலருக்கும் இருந்தாலும் இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள்தான். கீழே குறிப்பிடப்பட்டுள்ள குணங்கள் (toxic) உங்கள் காதலரிடம் இருந்தால் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

Youtube

ஆறுதல் தரும் ஆண்

உங்களுக்கு ஒரு கவலை என்றால் அதில் இருந்து உங்களை திசை திருப்பி உங்களுக்கு ஆறுதல் தரும் ஒரு ஆண் எப்போதும் இருப்பார்கள். ஆனால் அதன் முடிவில் அவர்கள் நோக்கம் என்ன என்பதை நீங்கள் உணர முடியும். அதுதான் சாக்கு என்று உங்கள் வாழ்வினுள் நுழைந்து அவர்களுடைய தேவைகளை லாவகமாக பூர்த்தி செய்து கொள்வதில் இவர்கள் மன்னர்கள். இதற்கு நீங்கள் தனியாகவே இருக்கலாம்.


சுண்டு விரல் பற்றும் ஆண்

ஒரு சில ஆண்கள் சிறு குழந்தைகள் போல உங்கள் சுண்டு விரலை பற்றியபடியே திரிவார்கள். எப்போதும் முன்னேற விரும்பாத இவர்கள் யாரையாவது சார்ந்துதான் தங்கள் வாழ்வை வாழ்வார்கள். குறிக்கோள் இல்லாத வாழ்வில் தன்னை கவனித்துக் கொள்ளும் ஒரு தாதி ஒருவரை தேடி கொண்டிருப்பார்கள் . அது நீங்களாக இருந்தால் யோசியுங்கள். இவர்கள் தங்கள் தேவைகளை உங்களிடம் பூர்த்தி செய்து கொள்வார்களே தவிர உங்களுக்கு உதவியாக இருக்க மாட்டார்கள்.

 

Youtube

காதல் ரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சி

இந்த மாதிரி ஆண்கள் எல்லா காலங்களிலும் உங்களோடு உடன் வர மாட்டார்கள். பல நாட்கள் உங்கள் தொடர்பு எல்லைக்குள் வர மாட்டார்கள். அவர்களுக்கான தேவை என்று வரும்போது உங்களைத் தேடி வருவார்கள். அவர்கள் உங்களை பாராட்டவோ தட்டிக் கொடுக்கவோ மாட்டார்கள். அன்பாகவும் இருக்க மாட்டார்கள். இவர்கள் தேவை உடலோ பணமோ எதுவாக இருந்தாலும் அதனை அனுபவித்த பின்னர் மறைந்து போவார்கள். உங்கள் கழுத்தை உறிஞ்சி காதல் ரத்தம் குடிக்கும் காட்டேரிகள் இவர்கள்.

கவிப் பொய் சொல்லும் கலை மணிகள்

இவர்களை பொய் சொல்லும் போட்டியில் யாராலும் ஜெயிக்க முடியாது. அத்தனை நிதானமாக மென்மையாக ஒரு கவிதை எழுதுவதை போலான பொய்களை உங்களிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பார்கள். தான் காமப் பித்தன் என்றாலும் தன்னை உத்தமன் என்றே கூறிக் கொள்வார்கள். பழக்கப்படுத்தப்பட்ட நாய்க்குட்டியை போல தங்களை நெருங்குபவர்களை மாற்றி விடும் வல்லமை வாய்ந்தவர்கள். வசீகரம், புகழ் எல்லாமே மற்றவரிடம் இருந்து அவர்கள் அறியாமல் திருடியே பெறுவார்கள். இவர்களிடம் நீங்கள் நேர்மையை எதிர்பார்த்தால் உங்களுக்கு வலிகளே மிஞ்சும்.

செலவு செய்ய கணக்கு பார்ப்பவர்கள்

இவர்களுக்கு மனித இதயத்தின் மதிப்பை விட தங்களிடம் இருக்கும் பொருள்கள்தான் உயர்ந்தவை. முடிந்தவரைக்கும் தன்னுடைய பர்ஸை வெளியே எடுக்க மாட்டார்கள். உங்கள் மீது அன்பும் இருக்காது அதை விட செலவழிக்கும் பணத்தின் மீதே கவனம் இருக்கும். இப்படியானவரை ஒருபோதும் உங்கள் வாழ்க்கை துணையாக்கி கொள்ளாதீர்கள்.

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்