அலுவலகத்தில் வேலை பார்க்கும் அனைவரும் இன்று சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை மன அழுத்தம்(stress). இது பணி சுமைகளாலும், அழுத்தம் நிறைந்த சூழ்நிலையில் வேலை பார்ப்பதாலும் ஏற்படுகின்றது. எனினும், இதை நீங்கள் எளிதாக போக்கி, அமைதியான சூழ்நிலையை உண்டாக்கலாம். மேலும் உங்கள் மனதையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளலாம்.
உங்களுக்காக, எப்படி அலுவலக பணி அழுத்தத்தில் இருந்து விடுபட்டு(குறைக்க), மகிழ்ச்சியான மன நிலையை பெறுவது என்று, இங்கே சில குறிப்புகள்.
1. ஒரு சமயத்தில் ஒரு வேலையை செய்யுங்கள்
அலுவலகம்(office) என்று வந்து விட்டாலே, உங்கள் மேலாளர் வேலைகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிக் கொண்டே போவார். ஒரு வேலையை நீங்கள் முடிக்கும் முன், அடுத்த வேலை காத்திருக்கும். இப்படி பட்ட சூழலில் உங்களுக்கு நேரமும் மிக குறைவாக இருக்கும். அதனால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை நீங்கள் செய்ய முயற்சிப்பீர்கள். இதனால் உங்கள் மன அழுத்தம் அதிகமாவதோடு, கொடுக்கப்பட்ட வேலையில் பிழை உண்டாகும். இதனால் மீண்டும் அதனை செய்ய வேண்டிய தேவை உண்டாகும். அதனால், ஒரு சமயத்தில் ஒரு வேலையில் மட்டும் கவனத்தை செலுத்தி பார்க்கும் போது, நீங்கள் சரியாக முடிப்பதோடு, நேரத்தையும் திட்டமிட்டு செலவிடலாம்.
2. செய்ய வேண்டிய வேலைகளை முக்கியத்துவதிற்கேர்ப்ப திட்டமிடுங்கள்
Pexels
பல வேலைகளை நீங்கள் முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் போது, எதை முதலில் செய்வது, எதை பிறகு செய்வது என்கின்ற குழப்பம் உண்டாகும். அப்படி ஏற்படாமல், முக்கியத்துவத்திற்கு ஏற்ப உங்கள் வேலைகளை திட்டமிட்டு செய்ய முயற்சி செய்யுங்கள். இதனால் நீங்கள் சரியாக கொடுக்கப்பட்ட வேலையை முடிப்பதோடு, திட்டமிட்ட படி அனைத்து வேலைகளையும் முடித்து விட முடியும்.
3. தாமதமின்றி அலுவலகத்திற்கு வந்து விடுங்கள்
பல காரணங்களால் பலர் அலுவலகத்திற்கு தாமதமாக வருவதுண்டு. இதனால், அலுவலகத்தில் பணி செய்ய வேண்டிய நேரமும் குறைகின்றது. இதற்கு சவாலாக, அந்த குறைந்த நேரத்தில் அன்றைய வேலைகள் அனைத்தையும் செய்து முடிக்க வேண்டிய கட்டாயமும் எழுகின்றது. இதனால் மன அழுத்தம் அதிகரித்து, சரியாக வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவறுகளும் ஏற்படுகின்றது. அதனால், முடிந்த வரை சரியான நேரத்திற்கு அலுவலகம் சென்று, அன்றைய வேலைகளை திட்டமிட்டு செய்யத் தொடங்க வேண்டும்.
4. சவால்களை ஏற்றுக் கொள்ளுங்கள்
Pexels
உங்கள் மேலாளரும், உடன் வேலைபார்ப்பவர்களும் உங்களுக்கு சில சமையங்களில் சவால் நிறைந்த வேலைகளை கொடுக்கக் கூடும். அதனை கண்டு அஞ்சாமல், மகிழ்ச்சியோடு எடுத்துக் கொண்டு முடித்து காட்டுங்கள். இதனால் உங்கள் திறமை வளருவதோடு, நீங்கள் புதிதாகவும் ஒரு வேலையை கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகின்றது
5. நேரத்திற்கு உணவை எடுத்துக் கொள்ளுங்கள்
பலர் அலுவலகத்தில் வேலையை விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்காக, இடைவேளை நேரத்தில் தேநீரோ அல்லது பழச்சாறோ எடுத்துக் கொள்ளாமலும், மதிய உணவை தாமதமாக உண்பது அல்லது உண்ணாமலே தொடர்ந்து வேலை பார்ப்பது என்று செய்கின்றனர். இதனால் உடல் சோர்வடைவதோடு மனமும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றது. அதனால், நேரத்திற்கு தேநீர், பழசாறு மற்றும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அவ்வப்போது, தண்ணீர் அருந்த வேண்டும். இது உங்கள் மனதையும், உடலையும் அமைதிபடுத்தும்.
6. த்யானம் செய்யுங்கள்
Pexels
நீங்கள் தினமும் காலையிலோ, அல்லது இரவிலோ த்யானம் செய்யலாம். இது உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள உதவும். இதனால் உங்கள் கவனம் அதிகரிப்பதோடு, நினைவாற்றலும் அதிகரிக்கும். இதனால் உங்கள் செயல்திறன் அதிகரிக்கும்.
7. கவன சிதறல்களை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்
இன்று பலர் தங்கள் கவனத்தை சிதற விட முக்கிய காரணமாக இருப்பது ஸ்மார்ட் போன்கள். முகநூல், வாட்ஸ் ஆப், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள், பலரை தங்கள் வேலைகளை செய்ய விடாமல், ஈர்க்கின்றது. அப்படி நீங்கள் உங்கள் கவனத்தை சிதற விடாமல், அலுவலக நேரத்தில் அலுவலக பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலை பார்த்தால், அதிக நேரம் கிடைக்கும். இதனால் சரியான நேரத்திற்குள் உங்கள் வேலையை நீங்கள் முடித்து விடலாம்.
8. அரசியலில் ஈடுபடாதீர்கள்
Pexels
அலுவலகம் என்று வந்து விட்டாலே, அரசியல் என்று இருக்கத்தான் செய்யும். மேலும் உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் பலர் சதி செய்வார்கள். ஆனால் இவற்றிக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல், அரசியலிலும் கலந்து கொள்ளாமல் உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால், நீங்கள் நிம்மதியாக உங்கள் வேலைகளை சரியாக முடித்து விடலாம். இதனால் உங்கள் மன அழுத்தமும் குறையும். மகிழ்ச்சியான சூழலும் உண்டாகும்.
மேலும் படிக்க – வேலைக்கு செல்லும் பெண்கள் எவ்வாறு உடை அணியலாம்?
பட ஆதாரம் -Pixabay,Pexels
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!