கருவேப்பிள்ளை சமையல் – சுவையான கருவேப்பிள்ளை உணவுகள்

கருவேப்பிள்ளை சமையல் – சுவையான கருவேப்பிள்ளை உணவுகள்

 

கருவேப்பிள்ளை(curry leaves) நம் உணவில் மறவாமல் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு கீரை வகை. இதில் இருக்கும் கசப்பு உடலுக்கு பல நன்மைகளை தருகின்றது. கருவேப்பிள்ளை என்றாலே, பலருக்கும் அடர்ந்த மற்றும் கருமையான தலை முடி வளர்ச்சிதான். ஆனால் கருவேப்பிள்ளையை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளும் போது, மேலும் பல நன்மைகள் உடலுக்கு கிடைகின்றது.

நீங்கள் எளிய முறையில், சுவையான கருவேப்பிள்ளை உணவுகளை செய்ய விரும்புகின்றீர்கள் என்றால், இங்கே சில குறிப்புகள் உங்களுக்காக;

1.   கருவேப்பிள்ளை சட்னி:

செய்முறை

·         தேவையான அளவு கருவேப்பிள்ளையை எடுத்துக் கொள்ளவும்

·         5௦ கிராம் சிறிய வெங்காயம்

·         7 பூண்டு பல்

·         சிறிய துண்டு இஞ்சி

·         சிறிது கடலை பருப்பு

·         5 காய்ந்த மிளகாய்

·         சிறிது புளி

·         இவை அனைத்தையும், வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி மிதமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்

·         பின்னர் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்

·         தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்

·         வாணலியில் எண்ணை ஊற்றி, சிறிது கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து, பொரிந்ததும், அரைத்த சட்னியை தாளித்து விட வேண்டும்

2.   கருவேப்பிள்ளை பொடி

செய்முறை

·         தேவையான அளவு கருவேப்பிள்ளை எடுத்துக் கொள்ளவும்

·         25 – 5௦ கிராம் உளுந்து எடுத்துக் கொள்ளவும்

·         காரத்திற்கேற்ப மிளகு

·         தேவைகேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்

·         முதலில் வாணலியில் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வருக்க வேண்டும்

·         பின்னர் மிளகு சேர்த்து வருக்க வேண்டும்

·         பின்னர் கருவேப்பிள்ளையை சேர்த்து வருக்க வேண்டும்

·         இவற்றை இப்போது தேவைகேற்ப உப்பு சேர்த்து, மிக்சர் கிரைண்டரில் போட்டு பொடி செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்

·         இந்த பொடி, சாதம், இட்லி மற்றும் தோசைக்கு ஏற்றதாக இருக்கும்

 

 

3.   கருவேப்பிள்ளை சாதம்

செய்முறை

·         வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி, காய்ந்த பின் அதில் சிறிது உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு, சீரகம் மற்றும் தேவையான அளவு காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்

·         இதனுடன் சிறிய அளவு புளி சேர்த்துக் கொள்ளலாம்

·         பின்னர் சிறிது கருவேப்பிள்ளை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்

·         இவற்றை மிக்சர் கிரைண்டரில் பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

·         ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் அதில் சிறிது கடுகு, உளுந்தம்பருப்பு, வேர்கடலை சேர்த்து வறுக்கவும்

·         இதனுடன் சிறிது காய்ந்த மிளகாயை சேர்த்து வறுக்கவும்

·         பின்னர் தேவைக்கேற்ப வேக வைத்து வடித்த சாதத்தை சேர்த்து மிதமாக கிளறவும்

·         பின்னர் அரைத்த கருவேப்பிள்ளை பொடியை, தேவைக்கேற்ப சேர்க்கவும்

·         தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்

·         நன்கு கிளறி இறக்கி வடவும்

·         சூடான கருவேப்பிள்ளை சாதம் தயார்

 

4.   கருவேப்பிள்ளை ஜூஸ் – உடல் எடையை குறைக்க

செய்முறை

·         தேவையான அளவு கருவேப்பிள்ளை எடுத்துக் கொள்ளவும்

·         மிக்சர் கிரைண்டரில் இதனை சேர்த்து, சிறிது உப்பு தேவைக்கேற்ப சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்

·         தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

·         இந்த சாரை இப்போது வாடி கட்டி ஒரு குவளையில் எடுத்துக் கொள்ளவும்

·         இதனுடன் சிறிது எழுமிச்சைபழ சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

·         இப்போது இதை நீங்கள் அருந்தலாம்

·         இந்த சாரை தினமும் அருந்தி வந்தால், உடல் எடை குறைவதோடு, நீரழிவு நோயும் குணமாகும்

 

5.   கருவேப்பிள்ளை குழம்பு

செய்முறை

·         தேவையான கருவேப்பிள்ளை எடுத்துக் கொள்ளவும்

·         சிறிது துவரம் பருப்பு, மிளகு அல்லது காய்ந்த மிளகாய் மற்றும் வெந்தயம் எடுத்துக் கொண்டு வாணலியில் சிறிது நேரம் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

·         இதனை மிக்சர் கிரைண்டரில் போட்டு, கருவேப்பிள்ளை இலைகளையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

·         தேவையான புளியை கரைத்து எடுத்துக் கொள்ளவும்

·         வாணலியை சூடு செய்து, தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய வைக்கவும்

·         இப்போது கடுகு, கருவேப்பிள்ளை, காய்ந்த மிளகாய் சேர்த்து, பொரிந்ததும், பூண்டு தேவையான அளவு சேர்த்து வறுக்கவும்

·         தேவையான மஞ்சள் தூள் சேர்த்து வதுக்கவும்

·         இப்போது அரைத்து வைத்த கலவையை இதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும்

·         இதனுடன் கரைத்து வைத்த புளியை சேர்க்கவும்

·         தேவையான உப்பு சேர்க்கவும்

·         குறைந்தது 15 நிமிடமாவது, நன்கு கிளறி கொதிக்க விடவும்

·         இப்போது கருவேப்பில்லை குழம்பு தயார்

·         இதனை சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம் 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!                                 

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்