ரசிகர்களை எத்தனை நாள் ஏமாற்றுவீர்கள்..உண்மை வெளிவரும் : விஜய்யை விமர்சித்த இயக்குநர் சாமி!

ரசிகர்களை எத்தனை நாள் ஏமாற்றுவீர்கள்..உண்மை வெளிவரும் : விஜய்யை விமர்சித்த இயக்குநர் சாமி!

நடிகர் விஜய்க்கு இயக்குனர் சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழில் சிந்து சமவெளி, உயிர், மிருகம் என சர்ச்சைப் படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குநர் சாமி (samy). இவர் நடிகர் விஜய்யை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வணக்கம் தளபதி, முன்னால் இளைய தளபதி விஜய் சார். நான்கு முறை நாம் சந்தித்துள்ளோம். அதில் மூன்று முறை உங்கள் வீட்டில், உங்களது அப்பா சந்திரசேகரும் உடன் இருந்தார். அப்போது நான் தோஸ்த் என்ற படத்திற்காக வசனம் எழுதினேன். 

என்னுடைய பெயர் சாமி. நான் மிருகம், கங்காரு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளேன். கடந்த 2000ம் ஆண்டில் உங்களை நேரடியாக சந்தித்து அன்றில் பறவைகள் என்ற குடும்ப கதை ஒன்றை சொன்னேன். அப்போது பிரியமானவளே பட ஷூட்டிங்கில் பிசியாக இருந்த நீங்கள் எனக்காக 2 மணி நேரம் ஒதுக்கி கதையைக் கேட்டீர்கள்.

twitter

சினிமாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். அது பிரச்சினை இல்ல. நீங்கள் ரஜினி சார் மாதிரி நடித்துவிட்டு மட்டும் போங்கள், வாயைத் திறந்து எதுவும் பேச வேண்டாம். ஏனெனில் நீங்கள் பேசுவதால் உங்களுக்கே நீங்கள் ஆப்பு வைத்து கொள்கிறீர்கள்.

உலகில் 5வது பெரிய வைர மோதிரத்தை பரிசாக பெற்ற தமன்னா : கவுண்டமணியை சந்திக்க விருப்பம்!

பிகில் ஆடியோ லாஞ்சில் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்க வேண்டும் என கூறினீர்கள். உங்களை கடவுள் எங்கு வைக்க வேண்டுமோ அங்கு தான் வைத்திருக்கிறார். இயற்கையும் கடவுளும்  யாரை எங்கு வைக்க வேண்டுமே அங்கு தான் வைத்திருக்கார்கள்.

நீங்கள் தேவையில்லாமல் பேசி மாட்டிக் கொள்கிறீர்கள். உங்களை பற்றி அனைவருக்கும் தெரியும். சினிமாவில் மட்டும் அல்ல உண்மையான வாழ்க்கையிலும் நீங்கள் எவ்வளவு பெரிய நடிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.  

twitter

ரசிகர்களைப் பார்த்து என் நெஞ்சில் குடியிருக்கும் என்றெல்லாம் பேசுகிறீர்கள். ஆனால் அவர்களுடன் போட்டோ எடுத்துவிட்டு, கைகுலுக்கிய பின்னர் நீங்கள் உங்கள் கைகளை டெட்டால் ஊற்றி கழுவுவீர்கள். இதனை நானே என் கண்ணால் பலமுறை பார்த்துள்ளேன். 

இது தான் உங்களது உண்மையான முகம்.  நீங்கள் எந்தவிதத்தில் ரூ.50 கோடி சம்பளம் வாங்குகிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. 60 நாள் நடித்துவிட்டு 50 கோடி சம்பளம் வாங்குகிறீர்கள். அந்த பணத்தை பின் வாசல் வழியாக சென்று வாங்கி கருப்பு பணமாக சொத்து வாங்கிக் கொள்கிறீர்கள். 

ஒவ்வொரு அம்மாவும் தெய்வம்தான்..சினேகாவின் பிரசவ வலி பற்றி மனம் திறக்கும் பிரசன்னா !

நேர்மை, உண்மை என மேடையில் மட்டும் பேசுகிறீர்கள். நீங்கள் செய்யும் நடவடிக்கைகளில் எங்கு  நேர்மை உள்ளது. ஏன் மேடையில் பொய் பேசுகிறீர்கள்? எத்தனை நாள் தமிழகத்தை ஏமாற்ற முடியும். தயவு செய்து படம் நடிப்பதை மட்டும் செய்யுங்கள்.

மேடையில் ஏறி பேசுவது, கருத்து கூறுவது போன்ற செயல்களை தவிர்த்து விடுங்கள். உங்களை விட பெரிய நபர்கள் உள்ளனர். வாழ்க்கையில், அரசியலில், சினிமா துறையில் உங்களை விட பெரியவர்கள் சும்மா இருக்கிறார்கள். நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடித்துவிட்டு போங்க. வாயைக் கொடுத்து மாட்டிக்காதீங்க.

twitter

ஒரு நாள் சாயம் வெளுக்க தான் செய்யும், அப்போது உண்மை வெளிவரும். உண்மை தான் ஜெயிக்கும். அப்போது நடிப்பவர்கள் எல்லோரும் கேவலப்பட வேண்டி வரும். தயவு செய்து உங்களை மாற்றி கொள்ளுங்கள் என அவர் பேசியுள்ளார். 

பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய்யின் பேச்சுக்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். இந்நிலையில் திரைத்துறையை (samy) சேர்ந்த ஒருவரே விஜய் குறித்து இப்படி காட்டமாக பேசியிருப்பது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பட வாய்ப்புகள் குறைவு.. திருமணத்துக்கு தயாரான நடிகை லட்சுமி மேனன் : விரைவில் டும் டும்!

அதுவும் இயக்குனர் சாமி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குனர் சாமிக்கு விஜய் ரசிகர்களை பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் அவரை திட்டித்தீர்க்கின்றனர். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!