தீபாவளி நெருங்கிகின்றது. இன்னும் சில நாட்களே இருக்கும் இந்த நேரத்தில், உங்கள் மனதில் எந்த வகையான பலகாரங்கள் செய்யலாம் என்கின்ற எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும். பல வகை பலகாரங்கள் இருந்தாலும், எளிமையாகவும், விரைவாகவும் தயார் செய்ய சில பலகாரங்களை (diwali recipe/dish) நீங்கள் விரும்புவது இயல்பே.
அப்படி நீங்கள் சுவையான மற்றும் விரைவாக செய்யக்கூடிய பலகாரத்தை (ரெசிபி) தேடிக்கொண்டிருகின்றீர்கள் என்றால், உங்களுக்காக, இங்கே சில
1. மடக்கு பூரி
- தேவையான கோதுமை மாவு, நெய் மற்றும் உப்பு எடுத்துக் கொளவும்
- இதனுடன் சிறிது சுடு தண்ணீர் சேர்த்து பூரி மாவு போன்று பிசைந்து கொள்ளவும்
- சிறிது துருவிய தேங்காய், சர்க்கரை, மற்றும் உடைத்த முந்திரிப் பருப்பு எடுத்து நன்கு கலந்து கொள்ளவும். இது பூரணத்திற்கு
- இப்போது பூரிக்கு செய்வது போன்று கோதுமை மாவை தேய்த்து எடுத்துக் கொள்ளவும்
- இதன் நடுவில் பூரணத்தை வைத்து சோமாசு போன்று மடக்கிக் கொள்ளவும்
- ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி நன்கு காயவிடவும்
- எண்ணை காந்த பின், அதில் மடக்கு பூரியை போட்டு பொறித்து எடுக்கவும். இப்போது சுடச் சுட மடக்கு பூரி தயார்
இனிய தீபாவளி வாழ்த்துக்களையும் படியுங்கள்
2. நெய்யப்பம்
- தேங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி, நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும்
- ஒரு பாத்திரத்தில் வெல்ல பாகு காய்த்து எடுத்துக் கொள்ளவும்
- ஒரு பழுத்த வாழைப்பழத்தை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- தேவைப்படும் அளவு அரிசி மாவு மற்றும் கோதுமை மாவை லேசாக நிறம் மாறாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- ஒரு பாத்திரத்தில், வறுத்த மாவுகள் இரண்டையும் போட்டு, இதனுடன் வறுத்த தேங்காய்ம், வெல்ல பாகு மற்றும் அரைத்த வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து தோசை மாவு பததிற்கு கெட்டியாக கலக்கிக் கொள்ளவும்
- இந்த மாவை அப்படியே சிறிது நேரம் விட்டுவிடவும்
- இதில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- இப்போது ஒரு பணியாற சட்டியில் நாகு சூடானது, நெய் சேர்த்து, குழியில் மாவை பணியாரம் ஊற்றுவது போல ஊற்றவும்
- இரண்டு பக்கமும் நன்கு திருப்பி போட்டு வேக விடவும். இப்போது சுடச்சுட நெய்யப்பம் தயார்
3. ஜவ்வரிசி லட்டு
- தேவையான ஜவ்வரிசியை எடுத்து இரவு முழுவதும் நன்கு ஊற வைக்க வேண்டும்
- ஒரு வாணலியில் நெய் ஊற்றி, நன்கு காய்ந்த பின் அதில் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்
- பின்னர் இதனை தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, நன்கு ஊறிய ஜவ்வரிசியை நெய்யில் போட்டு கட்டிபடாமல் நன்கு கிளறவும்
- இப்போது இதனுடன், ஏலக்காய் பொடி, சிறிது மஞ்சள் தூள், குங்குமப்பூ மற்றும் தேவையான சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்
- இந்தக் ஜவ்வரிசி கலவையை நன்கு வறுக்கவும். தேவைப்பட்டால் மேலும் நெய் சேர்த்துக் கொள்ளலாம்
- இப்போது வறுத்த முந்திரி பருப்பை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி விடவும்
- இப்போது வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போதே, இந்த கலவையை உங்களுக்குத் தேவையான அளவு உருண்டை பிடிக்கவும். இப்போது லட்டு தயார்
4. சீப்பு சீடை
- உளுந்து மற்றும் பாசி பருப்பை வறுத்து நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளவும்
- ஒரு பாத்திரத்தில் உளுந்து பொடி, பாசி பருப்பு பொடி மற்றும் அரிசி மாவு சேர்த்து, இதனுடன் தேவைக்கேற்ப உப்பும் சேர்த்துக் கொள்ளவும்
- இதில் தேங்காய் பால் மற்றும் சிறிது எண்ணை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்
- தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மாவை பிசைந்து கொள்ளவும்
- இந்த மாவை சீப்பு சீடை வடிவில் இருக்கும் தட்டு வைத்து முறுக்கு குழாய் பயன் படுத்தி பிழிந்து கொள்ளவும்
- பின், இந்த பிழிந்த மாவை மோதிர வடிவத்தில் சுற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- வாணலியில் எண்ணை ஊற்றி நன்கு காய்ந்ததும் அதில் இந்த மோதிர வடிவில் இருக்கும் சீதையை போட்டு நன்கு பொரிக்கவும்
- பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து விடவும். இப்போது ருசியான சீப்பு சீடை தயார்
5. கார தட்டை
- தேவையான கடலை பருப்பை எடுத்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்
- ஒரு வாணலியில் சிறிது அரிசி மாவு எடுத்து நன்கு வறுத்துக் கொள்ளவும்
- வாணலியில் உளுந்து பொடியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- ஒரு கப் அரிசி மாவிற்கு, இரண்டு தேக்கரண்டி உளுந்து மாவு சேர்த்து கலக்கவும்
- இதனுடன் உடைத்தகடலை மாவு, தேவையான உப்பு, மிளகாய் தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- தேவைபட்டால் சிறிது பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் கருவேப்பிள்ளை சேர்த்துக் கொள்ளலாம்
- மாவில் சிறிது சூடான எண்ணை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்
- இந்த தயாரித்த மாவை உருண்டை பிடித்து, தட்டை போல தேய்த்து எடுத்துக் கொள்ளவும்
- வாணலியில் எண்ணை ஊற்றி, நன்கு காய்ந்ததும், இந்த தட்டையை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது தட்டை தயார்.
மேலும் படிக்க – தீபாவளி பர்ச்சேஸ் ஆரம்பிச்சாச்சா! இந்த தீபாவளிக்கு என்ன ட்ரெண்டிங்னு தெரிஞ்சுக்கலாமா !
பட ஆதாரம் – Pinterest, Instagram
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!