நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் & சரி செய்யும் முறைகள்!

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் & சரி செய்யும் முறைகள்!

இன்றைய காலத்தில் நன்கு குனிந்து, நிமிர்ந்து வேலை செய்பவர்களை விட நீண்ட நேரம் ஒரே இடத்தில உட்கார்ந்து வேலை செய்பவர்கள் தான் அதிகம். அதிலும் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். 

அவர்கள் உட்கார்ந்து (sitting) கொண்டே அனைத்து வேலைகளையும் முடித்துவிடுவார்கள். ஆனால் வேலை பார்ப்பது எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு உட்கார்ந்து வேலை செய்கிற நேரத்தை உடல் செயல்பாட்டிற்கும் அளித்து சமன் செய்வதும் முக்கியம்.

தொடர்ச்சியாக வேலை செய்வது பலருக்கும் அவசியமாகவும், தவிர்க்க முடியாததாகவும் இருந்தாலும், இது நீங்கள் உங்களுக்கு செய்துகொள்கின்ற தீங்கான விஷயம். 

pixabay

உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு உண்டாகும் பாதிப்புகள்

 • பல்வேறு ஆய்வுகளும் தினசரி எட்டு மணி நேரத்திற்கும் மேலாக எந்த ஒரு உடல் செயல்பாடும் இல்லாமல் அமர்ந்து வேலை செய்பவர்கள் புகைப்பிடித்தல் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு நிகரான ஆபத்துக்களை சந்திக்கின்றனர் என தெரிவிக்கின்றனர். 
 • உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்களில் அதிகம் பேர் பாதிக்கப்படுவது முதுகு வலியால் தான். உடலில் உள்ள தசைகள் எந்த ஒரு அசைவும் இல்லாமல் நீண்ட நேரம் உட்கார்வதால் ஏற்படுகிறது. அதுவே நீண்ட நாட்கள் தொடர்ந்து பல மணிநேரம் உட்கார்ந்தால் முதுகு தண்டுவடம் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும். 
 • நீண்ட நேரம் உட்கார்ந்தால் உடலின் வளர்ச்சிதை மாற்ற பணிகள் பாதிக்கப்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. வளர்ச்சிதை மாற்ற பணிகள் பாதிக்கப்பட்டால் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலில் உள்ள லிப்போபுரோட்டீன் அளவு குறைந்துவிடும். இந்த கொலஸ்ட்ரால் குறைந்தால் உடலில் பிரச்சனைகள் ஏற்படும்.  
pixabay

 • நீண்ட காலத்திற்கு உட்கார்ந்து வேலை செய்வது தசை குறைபாட்டை ஏற்படுத்தலாம். உடல் செயல்பாடு இல்லாமை காரணமாக தசைகள் வீணாகும்போது தசைக் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் வலுவான மற்றும் உறுதியான தசைகள் இல்லாமல் உங்கள் கீழ் உடல், மேலும் ஆபத்திற்குள்ளாக்குகிறது. 
 • கால்களை தொங்கவிட்டபடி மணிக்கணக்கில் வேலை செய்வது உங்கள் கால் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் சீராக செல்லாமல் தடை செய்கிறது. இதனால், கால்களில் பிடிப்பு, வலி, அசௌகரியமாக உணர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
 • ஒரு இடத்தில் அமர்ந்து (sitting) வேலை செய்பவர்கள் தனது உட்காரும் நிலையை தன் நிலை மறந்து அமரும் போது அதாவது குனிந்த நிலையிலேயே கழுத்தை வைத்திருக்கும் போது கழுத்து எலும்பு தேய்மானம் கழுத்து தசைப் பிடிப்புக்கள் முதுகு எலும்பு தேய்மானம் ஏற்பட வாய்ப்பளிக்கிறது. 
 • பொதுவாக நாம் உணவு உண்டபின் சிறிது தூரம் நடைபயிற்சி செய்ய வேண்டும். அப்போது நாம் உண்ட உணவு உடல் தேவைக்கு ஏற்ப சக்திகளைப் பெற்றுக் கொள்ள உண்ட உணவை உடைத்து குளுக்கோஸ் கொழுப்பாகவும் வைட்டமின் சத்தாகவும் இன்னும் பிற சத்துக்களாக மாற்றும். ஆனால் சாப்பிட்டவுடன் அமர்ந்து வேலை செய்வதால் உடன் பருமன் பிரச்சனைகள் ஏற்படும். 
pixabay

 • உடல் பருமன் அதிகமாகும் போது பல்வேறு கெட்ட கொழுப்புகள் உடலில் சேரும். இது இருதய நோய்களுக்கு வழிவகுக்கிறது. தொடர்ந்து ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டு நீர் கூட அருந்தாமல் வேலைப்பளுவில் மூழ்கி போய்விடும் சிலருக்கு சிறுநீரகக் கற்கள் பிரச்சினைகளும் ஏற்படவும் வாய்ப்புள்ளது. 
 • நீண்ட நேரம் தொடர்ந்து உட்கார்பவர்களுக்கு விரைவில் மரணம் ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் உடலில் உள்ள இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாகவும், நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறைவாகவும் மாறிவிடும். இதனால் வேகமாக இதயம் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு மற்றும் பல இதய நோய்கள் வரும் வாய்ப்பும் உள்ளது. 
pixabay

கவனிக்க வேண்டியவைகள்

 • ஒரே இடத்தில் அமர்ந்து  (sitting) 8-10  மணி நேரம் வேலை செய்பவர்கள் எப்போதும் தொடர்ந்து ஒரே இடத்தில் உட்காராமல் உடலுக்கு ஏதேனும் அசைவை கொடுக்க வேண்டும். 
 • தினந்தோறும் 30 நிமிட உடற்பயிற்சியை கட்டாயமாக மாற்றிக் கொள்ளும் போது உட்கார்ந்த நிலையில் எட்டு மணி நேரம் வேலை செய்பவருக்கு ஏற்படும்  பிரச்சினைகள் இருந்து ஓரளவுக்கு தன்னை தற்காத்துக் கொள்ள முடியும். 
 • நீங்கள் 8 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவராக இருந்தால் உங்கள் இருக்கையின் கட்டமைப்பு வசதி சிறப்பாக இருக்குமாறு அமைத்துக் கொள்ளுங்கள்.
pixabay

 • உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்கள் தொடர்ந்து உட்கார்ந்தபடியே வேலை செய்வதை தவிர்த்து இடையிடையே சிறிது நேரம் நடந்தால் பிரச்சனைகள் குறைய வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் லிப்ட்டிற்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்தலாம். 
 • ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது உங்கள் இடத்திலிருந்து எழுந்து நீர் அருந்தவோ அல்லது உங்கள் நண்பரிடம் உரையாடவோ சென்று வாருங்கள். வாரத்தில் 7 நாட்கள் நடக்காவிட்டாலும் 3 நாட்களாவது அவசியம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். 
 • குளிர்சாதன அறையில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். மதிய வேளையில் அசைவ உணவு, துரித உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
 • உடல் பருமனை தடுப்பதற்கும், மலச்சிக்கல் வராமல் தடுப்பதற்கும் நார்ச்சத்து மிக்க உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!