நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் சாக்ஷி அகர்வால் : ஒருதலை காதலில் சிக்கி தவிர்ப்பு!

நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் சாக்ஷி அகர்வால் : ஒருதலை காதலில் சிக்கி தவிர்ப்பு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். தமிழ், கன்னடம், மலையாள சினிமாவில் நடித்த இவர் தமிழில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வரை இவரை பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. 

காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்திருந்தார். மேலும் அட்லியின் ராஜா ராணி படத்தில் கூட ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3ல் சாக்ஷி தன்னால் முடிந்த வரை அனைவரிடமும் நல்ல ஒத்துழைப்புடன் இருந்து வந்தார். 

ஏழு வாரங்கள் வரை அவர் பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்து இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் கண்டுகொள்ளப்படாமலேயே இருந்தவர், இந்நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி வருகிறார். 

twitter

தற்போது ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் ஹீரோயினாக  நடிக்கிறார். படங்களில் நடிப்பதோடு பின்னணி குரல் கொடுக்கும் கலைஞராகவும் வலம் வருகிறார்.  சுந்தர் சி இயக்கத்தில் ஆக்க்ஷன் என்ற படத்தில் விஷால் நடித்து வருகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடித்திருக்கும் அகன்ஷா லக்ஷ்மிக்கு சாக்ஷி அகர்வால் டப்பிங் குரல் பேசி இருக்கிறார். 

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சாக்ஷி, டப்பிங்கில் இது தான் எனது முதல் அனுபவம் என் வாழ்வில் பல வழிகள் திறக்கப்பட்டுள்ளன .. மகிழ்ச்சியான தருணங்கள் என கூறியுள்ளார். இதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நடிகர் ஆர்யா நடிக்கும் டெடி திரைப்படத்தில் சாக்‌ஷி அகர்வால் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவும், சாயிஷாவும் இணைந்து நடித்திருந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. 

twitter

இதனிடையே இருவர் வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். அதனை அடுத்து காப்பான் படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். நிஜத்தில் ஜோடியான இவர்கள் தற்போது மீண்டும்  ‘டெடி’ என்ற படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். 

இப்படத்தை  நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சுவுந்தர்ராஜன் இயக்குகிறார். டெடியின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சாக்‌ஷி அகர்வால் படக்குழுவினருடன் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை சாக்ஷி ஷேர் செய்துள்ளார்.

 
 
 
View this post on Instagram
 
 

We do it like this💥💥 #awwaawwa @actorsathish #Teddy #shootingspot #funnyvideos #biggbosstamil

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

இப்படத்தில் இவர்களுடன் சதீஷ், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி.இமான் இந்த பாடதிக்ரு இசையமைக்கிறார். முன்னதாக சதீஷை, சாக்‌ஷி அடிப்பது போன்ற வீடியோ சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

டெடி படத்தில் நடிப்பது குறித்து பேசிய சாக்ஷி அகர்வால் இந்த படத்தில் நடிகர் ஆர்யாவை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் நடித்து வருவதாகவும், இந்த கேரக்டர் தனக்கு புகழைப் பெற்றுத் தரும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். 

twitter

மேலும் ஆர்யா ஒரு சிறந்த நடிகர் என்றும், இயக்குனர் சக்தி செளந்திரராஜன் மிகவும் திறமையாளர் என்றும் அவர் கூறியுள்ளார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தாற்போது தமிழ்ச் சினிமாவில் சில வாய்ப்புகள் தேடி வந்துள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் வெப் சீரிஸ்களுக்கும் தனக்கு வாய்ப்பு வந்து கொண்டிருப்பதாகவும், கதை மற்றும் எனது கேரக்டர் குறித்து யோசித்து அடுத்தடுத்த படங்களில் ஒப்புக்கொள்ளவிருப்பதாகவும் சாக்சி தகவல் அளித்துள்ளார்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!