இந்த சின்ன சின்ன செயல்கள்தான் பெண்களைக் காதலிக்க தூண்டுகிறதாம்! லவ் டிப்ஸ் !

இந்த சின்ன சின்ன செயல்கள்தான் பெண்களைக் காதலிக்க தூண்டுகிறதாம்! லவ் டிப்ஸ் !

இன்று கடலை கூட கடைந்து விட தொழில்நுட்பங்கள் பெருகி விட்டன. ஆனால் ஒரு பெண்ணின் காதலை பெறுவது அத்தனை சுலபமில்லை. இதற்காக எதையெதையோ செய்து பெண்ணை புரிந்து கொள்ள முடியாமல் விலகவும் முடியாமல் தவிப்பவர்கள் ஏராளம்.

அவர்களுக்குத்தான் இந்த லவ் டிப்ஸ்கள் (love tips). எங்கோ ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி உள்ளிருக்கும் ஒரு குகைக்குள்ளே ஒளிந்திருக்கும் கிளியின் கூடல்ல பெண் மனம். அது சின்னதாய் பூக்கள் தந்தாலே பரிதவித்து பார்க்கும் தாய்மை மனம் என்பதை உங்களுக்கு புரிந்து கொள்ள இந்த கட்டுரை உதவலாம்.

எப்படி உங்களது சிறிய செயல்கள் பெண்ணை உங்களை நோக்கி ஈர்க்க செய்கிறது என்று பார்க்கலாம்.

61 ஆண்டுகளாக மனைவிக்கு தினம் ஒரு புதிய ஆடையை பரிசளிக்கும் அன்புக் கணவர் ! இதல்லவோ காதல்!

Youtube

மிருதுவான பார்வை

ஒரு பெண்ணை எப்போதும் தூண்டி விடும் ஒரு விஷயம் பரஸ்பரம் பார்வைகளை பரிமாறிக் கொள்வதுதான். கண்களை நேருக்கு நேராக பார்க்கும் ஆண்கள் பெண்களுக்கு நெருக்கமானவர்கள் ஆகிறார்கள். அதிலும் ஒரு மிருதுவான கனிவான பார்வை பெண்களுக்கு ஆயிரம் கோடி பட்டாம்பூச்சியை பரிசளிப்பதற்கு சமமானது.

வாழ்நாளில் ஒருமுறையாவது நிர்மலாவை பார்க்க வேண்டும் - முதல் காதலிக்காக ஏங்கும் நடிகர் ரஜினி

தேகப்பயிற்சி

ஆண் பெண் இருவருக்குமே தேகப்பயிற்சி பொருந்தும். அதிலும் ஆண்கள் தேகப்பயிற்சி செய்யும் போது உடலில் ஏற்படும் வியர்வை துளிகள் பெண்களுக்குள் காதலை பெருக்கெடுத்து ஓட செய்யும். இறுக்கமான தசைகளும் பரந்த மார்பும் அகன்ற தோள்களும் பெண்களை கற்காலம் முதல் இக்காலம் வரை காதல்வயப்பட வைக்கும் ஈர்ப்பு விசை ஆகும்.                                         

சமையல்

சமைப்பது பெண்களின் வேலை என்றில்லாமல் அதிலும் கலந்து கட்டி தன்னுடைய திறமையை காட்ட விரும்பும் ஆணை ஒரு பெண் நிறையவே விரும்புகிறாள். எவ்வளவு காலம்தான் பெண் கையால் ஆண் சாப்பிடுவது. சில காலம் உங்கள் கை ருசியை அவர்களுக்கு காட்டித்தான் பாருங்கள். பின்னர் உங்களை பிரியவே மாட்டார்கள்.

Youtube

பத்திரமாக அழைத்து செல்வது

உங்கள் மனதிற்கு பிடித்தமானவரை எங்கு அழைத்து சென்றாலும் பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள். அவர்களை வீட்டில் விடும்போதும் கவனமாக செல்லுங்கள். யாரும் நெருங்காமல் உடன் இருந்து பார்த்து கொள்வது உங்கள் ஆண்மையின் அடையாளம் என பெண்கள் பாவிப்பார்கள்.                                             

ஆலோசனைகள்

உங்கள் பிரியமான பெண் ஏதாவது சிக்கலில் இருந்தால் உடனடியாக உதவி செய்து விடாமல் மெல்ல மெல்ல அறிவுரை சொல்லுங்கள். மீண்டும் அந்த செயலில் அவர் ஈடுபடாத வாறு அறிவுறுத்தி விட்டு உதவி செய்து விட்டு வந்து விடுங்கள். அப்பெண்ணின் வாழ்நாள் ஹீரோ நீங்கள் மட்டும்தான். நீங்கள் அவர் மீது அக்கறையாக இருக்கிறீர்கள் என்பதை பெண்கள் இப்படித்தான் முடிவு செய்வார்கள்.

லேசான ஸ்பரிசங்கள்

என்னதான் நீங்கள் தள்ளி தள்ளி இருந்தாலும் அவ்வப்போது தெரியாமல் உங்கள் நேசத்திற்குரிய பெண்ணை மெதுவாக விரல்களால் ஸ்பரிசியுங்கள். ஒரு இருக்கையை அமர காட்டும் சமயம் முதுகில் உங்கள் விரல்கள் உரசுவது அவர்களுக்கு காதலை உணர்த்தும்.

கூந்தலை கோதுதல்

தன்னுடைய கூந்தலுடன் விளையாடும் அளவிற்கு எந்த பெண்ணும் ஒரு ஆணை அனுமதிக்க மாட்டாள். அப்படி அனுமதித்தால் நீங்கள் அவள் அன்புக்கு பாத்திரம் ஆகி விட்டீர்கள் என்றுதான் பொருள். ஆகவே தாமதிக்காமல் அவர்களின் கூந்தலை கோதி கோலம் போட ஆரம்பித்தீர்கள் என்றால் உங்கள் காதல் உங்கள் வசம்தான்.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!