வாழ்நாளில் ஒருமுறையாவது நிர்மலாவை பார்க்க வேண்டும் - முதல் காதலிக்காக ஏங்கும் நடிகர் ரஜினி

வாழ்நாளில் ஒருமுறையாவது நிர்மலாவை பார்க்க வேண்டும் - முதல் காதலிக்காக ஏங்கும் நடிகர் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் காலா. ரஞ்சித்தின் இயக்கத்தில் இந்த திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு மாற்று கோண திரைப்படமாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில் உண்மையாகவே நமது சூப்பர் ஸ்டாருக்கு ஒரு முதல் காதலி இருந்திருக்கிறார் என்பதும் இன்று வரை அவரை மறுபடி பார்ப்பதற்காக ரஜினிகாந்த் (rajinikanth) ஏங்குகிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

பாட்ஷா படத்தின் வில்லன்களில் ஒருவரானவரும் ரஜினிகாந்தின் நண்பர்களில் ஒருவரானவருமான நடிகர் தேவன் ரஜினிகாந்தின் இந்த நீண்ட கால ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார். இதனால் கோலிவுட் பரபரப்பாகி இருக்கிறது.

பாட்ஷா படப்பிடிப்பின் போது மும்பையில் நடிகர் ரஜினியுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது . அப்போது ஒரு நாள் இரவு உணவிற்கு ரஜினி என்னை அழைத்தார். அதனை ஏற்று அங்கு சென்ற போது அவர் மனம் விட்டு நிறைய பேசினார்.

Youtube

அப்போதுதான் ரஜினியின் முதல் காதல் பற்றியும் பேசினார். பெங்களுருவில் நடத்துனராக பணியாற்றிய போது நிர்மலா என்கிற பெண்ணின் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. முதல் சந்திப்பே மோதலில்தான் ஆரம்பித்ததால். பெங்களுருவில் எல்லோரும் பின்பக்கமாக ஏறி முன்பக்கமாக இறங்குவார்கள்.

ஆனால் நிர்மலா முன்பக்கமாக ஏறிவிட ரஜினிகாந்த் வாக்குவாதம் செய்திருக்கிறார். அதனை கண்டு கொள்ளாத நிர்மலா முன்பக்கமாகவே ஏறியிருக்கிறார். எம்பிபிஎஸ் மாணவியான நிர்மலா ரஜினி காந்தை நேசிக்க ஆரம்பித்திருக்கிறார்.

அதன் பின்னர் ரஜினிகாந்த் தன்னுடைய நாடகம் ஒன்றிற்கு அவரை அழைத்து போய் காட்டியிருக்கிறார். ரஜினிகாந்தின் நடிப்பு திறமையை கண்டு அசந்து போயிருக்கிறார் நிர்மலா. அதன் பின்னர் அடையார் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து ரஜினிக்கு கடிதம் வந்திருக்கிறது.

Youtube

தான் விண்ணப்பிக்காமல் எப்படி இது நடக்கும் என குழம்பிய பின்னர்தான் அது நிர்மலாவின் வேலை என்பதை ரஜினி புரிந்து கொண்டாராம். நிர்மலாவை செல்லமாக நிம்மி என அழைக்கும் ரஜினிகாந்த் ஏன் நிம்மி இப்படி செய்தாய் என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு நிர்மலா.. நீ நன்றாக நடிக்கிறாய். நீ ரொம்ப ஸ்பெஷல் என நான் நினைக்கிறேன். உன்னை திரைப்பட போஸ்டர்களில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். தியேட்டர்களில் உனது கட் அவுட்டை நான் பார்க்க வேண்டும் நீ இந்தியா முழுதும் பிரபலமான நடிகராக வேண்டும். உன்னை நாடகத்தில் பார்த்த போது எனக்கு இதெல்லாம் தோன்றியது. அதனால்தான் விண்ணப்பித்தேன் என்றாராம்.

அடையார் பிலிம் இன்ஸ்டிடூட்டில் சேர தன்னுடைய வேலையை விட வேண்டுமே என்று கவலைப்பட்ட ரஜினிக்கு ஆறுதல் சொல்லி செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பி இருக்கிறார் நிர்மலா. சென்னை வந்த சில நாட்களில் நிர்மலாவை தொடர்பு கொள்ள முயற்சிதிருக்கிறார் ரஜினிகாந்த். முடியாததால் உடனே பெங்களூரு சென்றிருக்கிறார்.

Youtube

அங்கு வசித்திருந்த வீட்டை காலி செய்து விட்டு நிம்மி எங்கோ சென்று விட்டதாக அக்கம்பக்கத்தினர் கூறி உள்ளனர். இதனை சொல்லி விட்டு நடிகர் தேவனை கட்டிப் பிடித்து அழுதிருக்கிறார் ரஜினிகாந்த். இமயமலையோ அமெரிக்காவோ நான் எங்கு சென்றாலும் நிம்மியைத்தான் தேடுகிறேன். நான் இவ்வளவு சாதித்தும் நிம்மி ஏன் என்னை பார்க்க வரவில்லை என்று தேம்பி இருக்கிறார் ரஜினிகாந்த்.

சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்த தேவன் நிம்மியை பார்த்தாரா என்று விசாரித்திருக்கிறார். அவர் இல்லை என்று பதில் தந்திருக்கிறார். இப்படியாக தேவன் தந்த பேட்டி நிறைவடைகிறது. இப்போது ரஜினிக்கு காதல் திருமணம் முடிந்து பெண்கள் பிறந்து பேரன் பேத்தியும் பார்த்தாயிற்று. இன்னமும் அவரை அந்த முதல் காதல் அசைக்கத்தான் செய்யும் என்றுதான் தோன்றுகிறது.

காரணம் எதிர்பார்ப்பில்லாத அன்பு தரப்படும்போது அதனை மறக்க முடியாமல் இழக்க முடியாமல் மனித மனங்கள் தவித்துக் கொண்டே தான் இருக்கும் என்பது உளவியல்.

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!