பிரசவத்திற்குப் பின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்த சில குறிப்புகள்!

பிரசவத்திற்குப் பின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்த சில குறிப்புகள்!

பல பெண்கள், பிரசவத்திற்கு பின், முன்பு இருந்தது போல் இளமையான அழகும், மெல்லிய தோற்றமும் இல்லை என்றோ அல்லது குறைந்து விட்டது என்றோ கவலைப்படக் கூடும். இது இயற்கையாகவே, இயல்பான ஒரு விடயமாக இருந்தாலும், இன்றியே பெண்கள், இதை நினைத்து அதிகம் கவலைப்படுவதுண்டு. ஆனால், இது ஒரு பெரிய விடயம் இல்லை. நீங்கள் எளிதாக பிரசவத்திற்கு பின் உங்களுடைய இளமை தோற்றத்தையும், அழகையும் மீண்டும் பெற்று விடலாம். மேலும் உங்களது ஆரோகியத்தையும் மீண்டும் பெற்று முன்பு இருந்தது போலவே, அழகாகவும் இருக்கலாம். இதற்கு நீங்கள் சில விடயங்களை மட்டும் பின்பற்றினால் போதும்.

நீங்கள் பிரசவத்திற்கு பின் (post pregnancy) , நல்ல ஆரோகியதோடும் இளமையாகவும் இருக்க, உங்களுக்காக இங்கே சில குறிப்புகள். 

Table of Contents

  பிரசவத்திற்கு பின் தேவையான போஷாக்குகள்(Nutrition tips for after childbirth)

  கர்ப்ப காலத்திலும் பிரசவ நேரத்திலும், உங்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அதில் இருந்து மீண்டு நீங்கள் இயல்பான நிலைக்கு வர சில நாட்கள்த் தேவைப்படும். இதற்கு முக்கியமாக நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  கர்ப்ப காலத்தில் உங்கள் உடல் எடை அதிகரித்து இருக்கும். பிரசவத்திற்கு பின்னர், இதில் பெரிதாக மாற்றங்கள் ஏற்படாமல், சில கிலோக்கள் மட்டுமே குறைந்திருக்கும். இதனால் உங்கள் உடல் பருமனாகவும், சற்று எடை அதிகரித்தும் தோன்றும்.

  இன்றைய இளம் தாய்மார்கள், பிரசவத்திற்கு பின் எந்த விதமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும், எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற பல விடயங்களை பற்றின விழிப்புணர்வு இல்லாமல் இருகின்றார்கள். குறிப்பான உங்கள் உணவு போஷாக்கு நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதில் நீங்கள் எந்த வித குறைபாடு வைக்கக் கூடாது, இந்த விதத்தில், உங்கள் உணவு போஷாக்கு நிறைந்ததாக இருக்க இங்கே உங்களுக்காக சில குறிப்புகள்;

  • தானியங்கள்: அரிசி, கோதுமை, பார்லி மற்றும் தானிய வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • காய் வகைகள்; இதில் குறிப்பாக அடர் பச்சை காய் வகைகள், சிவப்பு காய்கள் மற்றும் மஞ்சள் நிற காய்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். பட்டாணி, பீன்ஸ், போன்ற காய்களை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பழங்கள்: சாறு அதிகம் நிறைந்த அனைத்து வகை பழங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக கமலாப்பழம், சாத்துக்குடி, தர்பூசணி, சப்போட்டா போன்ற பழ வகைகள் அதிக நன்மைகளையும், போஷாக்கையும் தரும்.
  • பால் பொருட்கள்; இதில் முதன்மை பெற்றது மோர், தினமும் உங்கள் உணவிலும், மேலும் பானமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். நெய் எடுத்துக் கொள்வதால், நல்ல கொழுப்பு உடலுக்குக் கிடைப்பதோடு, கால்சியமும் கிடைக்கும். குறிப்பாக நாட்டு மாட்டுப் பால் எடுத்துக் கொள்வது நல்லது.
  • புரதம்: உங்கள் உணவில் தினமும் கட்டாயம் புரதம் இருக்க வேண்டும். இது இறைச்சி, பட்டாணி, பீன்ஸ், பருப்பு- கொட்டை வகைகள் போன்றவற்றில் அதிகம் இருக்கும்.

  பிரசவத்திற்கு பின் ஓய்வின் முக்கியத்துவம்( Importance of resting post pregnancy)

  Pexels

  நீங்கள் சற்று கவனித்திருந்தால், பிரசவத்திற்கு பின் குறைந்த ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டும் என்று உங்கள் தாயாரும், முதியவர்களும் கட்டாயப்படுத்தி இருப்பார்கள். இதற்கு முக்கிய காரணம், கர்ப்ப காலத்திலும், பிரசவத்தின் போதும் உடல் பல மிகப் பெரிய மாற்றங்களை தன் வாழ்நாளில் காணாத அளவு பெரும். இதை பலரும் மறு பிறப்பு என்றே கருதுவர். இப்படி உங்கள் உடல் மிக கடுமையான மாற்றங்களை அந்த சில மணி நேர பிரசவ நேரத்தில் பெரும் போதும், குழந்தை பிறந்த பின் உங்கள் உடல் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப நிச்சயம் சில நாட்கள் முதல் ஒரு சில மாதங்கள் வரையிலும் ஆகலாம். இதற்கு முக்கியமாக நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டும்.

  பிரசவத்திற்கு பின் ஏன் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்கு இங்கே சில முக்கிய காரணங்கள்;

  • முதல் சில வாரங்களுக்கு நீங்கள் எந்த வேலையும் செய்யாமல், உங்கள் உறவினர்கள் அல்லது உதவியாளர்கள் யாரைவாது உதவிக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் உங்கள் உடலும், மனமும் ஓய்வு எடுக்க சில மணி நேரங்கள் தினமும் கிடைக்கும்
  • முடிந்த வரை உங்கள் குழந்தை தூங்கும் போதே நீங்களும் தூகி விடுவது நல்லது. இதனால் உங்களுக்கு மேலும் அதிக நேரம் ஓய்வு கிடைக்கும். இதனால் மனம் அமைதியாகும். இது நீங்கள் விரைவாக குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்ப ஒரு நல்ல வாய்ப்பு
  • அதிக நேரம் ஓய்வு எடுக்கும் போது, உங்கள் உடல் வெகு விரைவாக இயல்பான நிலைக்குத் திரும்பும். இதனால், எலும்புகள் மற்றும் தசைகளும் பலம் பெற்று நீங்கள் ஆரோக்கியமாக அனைத்து வேலைகளையும் முன்பு செய்ய உதவும்
  • முடிந்த வரை வீட்டிற்கு அதிக விருந்தினால் முதல் ஓரிரு மாதங்களுக்கு வருகைத் தருவதை தவிர்ப்பது நல்லது. இதனால் நீங்கள் அவர்களை கவனிக்கும் தேவை இல்லாமல் போவதோடு, ஓய்வு எடுக்கவும் நேரம் கிடைக்கும். மேலும் உறவினர்களால் ஏற்படும் மன உளைச்சலும் குறையும்
  • நீங்கள் எவ்வளவு நேரம் ஓய்வு எடுகின்றீர்களோ, அதற்கு ஏற்றார் போல், விரைவாக மனம், உடல் மற்றும் ஆன்ம ஒருநிலைப் பெரும்.
  • இயல்பாகவே, பிரசவத்திற்கு பின், அந்த நேரத்தில் ஏற்பட்ட வலி மற்றும் மன உளைச்சலால், நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். ஆனால், நீங்கள் பிரசவத்திற்கு பின் ஓய்வு எடுக்கும் போது, அத்தகைய எதிர்மறை விளைவுகளில் இருந்து விடுபட்டு, விரைவாக இயல்பு நிலைக்கு திரும்புவீர்கள்
  • ஓய்வு எடுக்கும் போது உங்கள் மனம் அமைதியாவதால், உங்கள் சிந்திக்கும் திறமும் அதிகரிக்கும். இதனால் நீங்கள் தெளிவாக முடிவுகளை எடுக்க முடியும்.
  • ஓய்வு எடுக்கும் போது, உங்கள் குழந்தையுடன் நீங்கள் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். இதனால் உங்கள் மனமும் மகிழ்ச்சியோடு இருக்கும்

  பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டியவைகள்(Food to eat/avoid post pregnancy)

  ஒரு சிலர் பிரசவத்திற்கு பின் உணவில் சில நாட்களுக்கு அதிக கட்டுபாடுகள் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், சிலரோ, அப்படி ஏதும் இல்லை, எந்த விதமான உணவையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுவார்கள். எனினும், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மீண்டும் பெற்று, இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்றால், நிச்சயம் உங்கள் உணவில் சில விடயங்களை கவனிக்கத் தான் வேண்டும். இந்த வகையில், நீங்கள் பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றிய விவரங்கள் இங்கே, உங்களுக்காக;

  பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள்

  • நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு தாய் பால் அதிகம் சுரக்க உதவுவதாகவும், தாய் மற்றும் சேய் ஆகிய இருவருக்கும் ஆரோக்கியத்தை தருவதாகவும் இருக்க வேண்டும்
  • உங்கள் உணவில் அதிகம் கீரை வகைகள், மீன், பச்சை காய் வகைகள், முட்டை மற்றும் பயிர் வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்
  • உங்கள் உணவில் பால் உணவுகள், அதாவது, நெய், மோர், பசும் பால் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு கிடைக்கும்
  • பழங்கள் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது. குறிப்பாக சாறு நிறைந்த கமலாப்பழம், சாத்துக்குடி, கிர்ணிபழம், தர்பூசணி, மாம்பலம், போன்ற வளகைகளை எதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்
  • நீங்கள் எடுத்துக் கொள்ளும் காய் மற்றும் பழங்களில் வைட்டமின் B, மற்றும் D நிறைந்திருக்க வேண்டும்
  • அதிகம் கால்சியம் இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்
  • முளைகட்டிய பயிர் வகைகள், குறிப்பாக பச்சைப்பயிர், கொண்டைக்கடலை போன்றவற்றை எடுத்துக் கொள்வது நல்லது
  • நார் சத்து அதிகம் இருக்கும் வாழக்காய், வாழைப்பழம், வாழைத்தண்டு, வாழைப்பூ, பீன்ஸ், காராமணி போன்ற காய் வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்
  • கீரை வகைகள் மற்றும் ப்ரொகொலி போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்
  • நாட்டுக் கோழி முட்டை, நன்னீர் மீன், சுறா, மற்றும் நாட்டுக்கோழி போன்றவையும் உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தரும்
  • குறிப்பாக பழச்சாறுகள் மற்றும் தண்ணீர் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்

  பிரசவத்திற்கு பின் தவிர்க்க வேண்டிய உணவுகள்

  • எண்ணையில் செய்த, கடைகளில் கிடைக்கும் துரித உணவு மற்றும் நொறுக்குத் தீனிகள்
  • மது மற்றும் புகையிலை போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டும்
  • அதிகம் காபி மற்றும் தேநீர் அருந்தக் கூடாது
  • கடைகளில் கிடைக்கும் குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும்
  • ஒரு சில குறிப்பிடத்தக்க கடல் உணவுகளை தவிர்க்க வேண்டும்
  • கொழுப்பு மற்றும் எண்ணை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்
  • சிவப்பு இறைச்சி வகைகளை தவிர்ப்பது நல்லது
  • மெர்குரி இருக்கும் கடல் உணவுகளை தவிர்க்க வேண்டும்

  உடல் ஆரோக்கியத்தை மீண்டும் பெற குறிப்புகள்(Tips to be healthy post pregnancy)

  Pexels

  பிரசவத்திற்கு பின் பல பெண்களுக்கு எப்படி தங்களது ஆரோக்கியத்தை மீண்டும் விரைவாக பெறுவது என்பதை பற்றின விழிப்புணர்வு இல்லாமல் இருகின்றது. இதனாலேயே பலரும், பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக உதவிக்கு பெரிதாக யாரும் துணை இல்லாத போது, குழந்தை பார்த்துக் கொள்ள வேண்டும், வீட்டு வேலைகளை கவனிக்க வேண்டும் என்று பல பொறுப்புகள் இருக்கும். இதனால் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பற்றி கவலைப் படவோ அல்லது அதற்காக நேரம் ஒதுக்கவோ முடியாமல் போகின்றது.

  எந்த சூழலாக இருந்தாலும், உங்களுக்கு பயன் தரும் வகையில், உங்களுக்காக இங்கே சில எளிய குறிப்புகள்;

  • எப்போதெல்லாம் முடிகின்றதோ அப்போதெல்லாம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்
  • பிரசவத்திற்கு பின் முதல் சில வாரங்கள் மிக முக்கியமானதாகும். இந்த நேரத்தில் உங்களுக்கு கிடைக்கும் ஓய்வு உங்கள் ஆரோக்கியத்தை, வாழ்நாள் முழுவதும் நிர்ணயிக்கும் ஒன்றாக மாறிவிடும்
  • எந்த கனமான பொருட்களையும் தூக்கக் கூடாது. குறிப்பாக உங்களுக்கு அறுவைசிகிச்சை பிரசவம் நடந்திருந்தால், கட்டாயமாக கனமான பொருட்களை சில மாதங்களுக்கு தூக்கக் கூடாது
  • தயங்காமல், உங்கள் தோழி, அல்லது உறவினர்களை முடிகின்ற போதெல்லாம் உதவிக்கு கூப்பிடுங்கள்
  • குறிப்பாக துணி துவைக்கவும், சில கடுமையான வீட்டு வேலைகளை செய்யவும் உதவிக்கு பணியாளர்களை வைத்துக் கொள்ளுங்கள்
  • அதிகம் படிக்கட்டுகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது
  • குழந்தை பிறந்துள்ளது என்று தெரிந்தால், நிச்சயம் உங்கள் வீட்டிற்கு தொடர்ந்து விருந்தினர்கள் மற்றும் உறவினர்கள் வருகைத் தருவது இயல்பு. ஆனால், அவர்களை கவனிக்க நீங்கள் மேலும் வீட்டு வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். மேலும், அப்படி அதிகம் வெளி மனிதர்கள் வருவதால், குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். அதனால், முடிந்த வரை உறவினர்கள் வருகையை தவிர்ப்பது நல்லது
  • குழந்தை பராமரிப்பை எளிமையாக வைத்துக் கொள்ளுங்கள். உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர்கள் கூறுகின்றனர் என்பதற்காக அதிகம் மெனக்கெடாமல், உங்கள் வேலையை எளிமைப்படுத்திக் கொள்வது நல்லது. எனினும், குழந்தை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை தினமும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
  • சோர்வாகவோ, அல்லது மயக்கம் வருவது போலவோ அல்லது ஏதாவது உடல் உபாதைகள் / உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவர் உதவியைப் பெறுவது நல்லது

  உடல் எடையை குறைக்க சில விடயங்கள்(tips to reduce weight post pregnancy)

  உங்கள் உடல் எடையை பிரசவத்திற்கு பிறகு குறைக்க, இங்கே சில முக்கய குறிப்புக்கள்:

  1. வயிற்றில் சுற்றி கட்டிக்கொள்ளுங்கள்

  பல ஆண்டுகளாக, பெண்கள் பிரசவத்திற்கு பிறகு உடல் பருமனாகாமல் இருக்க இந்த முறையை இன்றும் பின் பற்றி வருகின்றனர். இதில், ஒரு நீளமான துணியை வயிற்றை சுற்றி கட்டிக் கொள்வார்கள் அல்லது, கடைகளில் பட்டையாக கிடைக்கும் பெல்ட்டுகளை பயன்படுத்தி வயிற்றை சுற்றி இருக்க கட்டுக் கொள்கிறார்கள். இதனால், வயிற்றில் வாயு புகாமல், உடல் பருமனாவதை தவிர்க்கலாம்.

  2. போதுமான அளவு தூக்கம்

  குழந்தை பிறந்து விட்டாலே, தாய்க்கு சரியான தூக்கம் இல்லாமல் போய்விடும். இதுவும் உங்கள் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். ஆனால், முடிந்த வரை போதுமான அளவு தூங்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். இது உங்கள் உடல் எடை சீராக இருக்க உதவும்.

  3. குழந்தையின் நேரத்திற்கு ஏற்ப உங்கள் வேலைகளையும், உணவையும் திட்டமிடுங்கள்

  Pexels

  பிறந்த குழந்தையை பராமரிப்பதில் அதிக நேரம் செலவு செய்ய வேண்டிய சூழல் உண்டாவது இயல்பே. ஆனால், உங்கள் உடல் நலன் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. அதனால், உங்கள் குழந்தை தூங்கும் போது, தூங்குவது, குழந்தைக்கு உணவூட்டும் போதும், உங்களது உணவையும் சற்று கவனித்துக் கொள்வது என்று திட்டமிட்டு நேரத்தை செலவு செய்தால், ஓய்வெடுக்கவும், உடற் பயிற்சி செய்யவும் போதிய நேரம் கிடைக்கும்.

  4. தாய்பால் கொடுக்க வேண்டும்

  எந்த சூழலிலும் தாய்பால் கொடுப்பதை நீங்கள் நிறுத்தி விடக்கூடாது. இதனால் உங்கள் உடல் எடை சீராக இருப்பதோடு, உடல் பருமன் உண்டாகாது. மேலும் நீங்கள் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

  5. உணவின் மீது கவனம்

  நீங்கள் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவின் மீது கவனம் செலுத்த வேண்டும். அதிக நார் சத்து, நீர் சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள். கொழுப்பு நிறைந்த உணவை தவிர்த்து விடுங்கள்.

  பிரசவத்திற்கு பிறகு அழகை மீண்டும் பெற(how to regain your beauty post pregnancy)

  இன்று இருக்கும் பெரும்பாலான பெண்கள் தங்கள் அழகின் மீது அதிகம் கவனம் செலுத்துகின்றனர். இதனால், பல முயற்சிகளையும் எடுகின்றனர். இந்த வகையில், பிரசவத்திற்கு பின், மீண்டும் இளமை தோற்றத்தையும், அழகையும் பெற வேண்டும் என்று அதிக முயற்சிகளை எடுகின்றனர். அப்படி நீங்கள் விரும்பினால், உங்களுக்காக இங்கே சில குறிப்புகள்

  1. அழகு நிலையத்திற்கு செல்லுங்கள்

  உங்கள் வீட்டின் அருகே இருக்கும் அழகு நிலையத்திற்கு சென்று பேசியல் மற்றும் மசாஜ் செய்து கொள்ளலாம். இதனால், நீங்கள் அழகான சருமம் மற்றும் நல்ல உடல் அமைப்பைப் பெறலாம்.

  2. அதிக நீர் அருந்துங்கள்

  Pexels

  அதிக தண்ணீர் அருந்தும் போது, உங்கள் உடலுக்குத் தேவையான நீர் சத்து கிடைக்கும். இதனால் சருமம் பலபலப்பாகவும் ஆரோக்கியமாகவும், பொலிவோடும் இருக்கும்.

  3. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்

  முற்றிலுமாக பழங்கள், பச்சை காய் வகைகள், கீரை, நாட்டுக் கோழி முட்டை, பசுமாட்டுப் பால் போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

  4. ஸ்க்ரப் செய்யுங்கள்

  உங்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்கு மற்றும் மாசு அகல, வாரம் இரு முறை அல்லது ஸ்க்ரப் செய்யுங்கள். இதனால் சருமம் மிருதுவாவதோடு, அழகான தோற்றத்தையும் பெரும்.

  5. உடற் பயிற்சி

  Pexels

   தினமும் சில நிமிடங்களாவது உடற் பயிற்சி செய்வது அவசியம். இதனால் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு, உடல் பருமனும் குறையும்.

  6. சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்

  எப்போதும் உங்கள் சருமத்தை / உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இதனால், உடல் ஆரோக்கியம் அதிகரிப்பதோடு, சருமமும் ஆரோகியம்ப் பெரும்.

  7. உற்சாகத்தோடு உங்கள் நாளைத் தொடருங்கள்

  தினமும் உற்சாகத்தோடு உங்கள் நாளைத் தொடருங்கள். அதிக நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் மனமும் புத்துணர்ச்சியோடு இருக்கும்

  8. மேலும் சில குறிப்புகள்

  Pexels

  • உங்கள் நேரத்தை திட்டமிடுங்கள்
  • தினமும் யோகா மற்றும் த்யானம் செய்யுங்கள்
  • வெள்ளை சர்க்கரை மற்றும் கெட்டிப் பால் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள்
  • நன்னீர் மீன் அதிகம் எடுத்தக் கொள்ளலாம்

  உடல் எடையை குறைக்க குறிப்புகள்(ways to reduce weight post pregnancy)

  அனைத்து பெண்களுக்கும் பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஒரு பெரிய மனக்கவலை, உடல் எடை அதிகரிப்பு. இதனால், அவர்கள் உடல் ஆரோக்கியம் பாதிகின்றதோ இல்லையோ, ஆனால் மன உளைச்சலுக்கு ஆராகின்றனர். மேலும் மனதில் தாழ்வு மனப்பான்மையும் சிலருக்கு ஏற்படுகின்றது. இதனை போக்க, எப்படியாவது, உடலில் உள்ள அதிக எடையை குறைக்க போராடுகின்றனர். நீங்கள் உங்கள் உடல் எடையை பிரசவத்திற்கு பின் குறைக்க, உங்களுக்காக சில குறிப்புகள்;

  • நீங்கள் மாடி வீட்டில் வசிப்பவராக இருந்தால் முடிந்த வரை, தானியங்கி படிக்கட்டுகள் அல்லது லிப்ட் பயன்படுத்தாமல், படிக்கட்டுகளில் ஏற / இறங்க முயற்சி செய்யுங்கள். இதனால் உங்களுக்கு கொஞ்சம் உடற்பயிற்சி கிடைக்கும்
  • தாய்பால் கொடுப்பதை தொடருங்கள். எந்த காரணம் கொண்டும் அதனை நிறுத்தக் கூடாது. இது உங்கள் உடல் எடை குறைய, சீரான உடல் எடை பெற மற்றும் ஆரோக்கியமாக வாழ உதவும்
  • தினமும் முடிந்த வரை உடற் பயிற்சி செய்யுங்கள். சில நிமிடங்களாவது உடற் பயிற்சி செய்யும் போது, உடல் ஆரோக்கியம் பெரும். மேலும் தேவையற்ற கொழுப்பு மற்றும் நச்சும் உடலில் இருந்து வெளியேறும்
  • நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் கவனம் தேவை. குறிப்பாக அதிக எண்ணை மற்றும் கொழுப்பு சத்து நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும்
  • அதிக நார் சத்து உள்ள உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் ஜீரணம் சீராக இருப்பதோடு, கொழுப்பு கரைந்து உடல் எடை சீராகும்
  • நொறுக்கு தீனி அனைத்தையும் விட்டு விடுங்கள். இது உங்கள் உடல் எடையை அதிகரித்து விடும்
  • தினமும் கமலாப்பழம், சாத்துக்குடி போன்ற நீர் சத்து அதிகம் இருக்கும் பழச்சாறுகளை எடுத்துக் கொள்ளுங்கள்
  • சிவப்பு இறைச்சி வகைகளை தவிர்த்து விடுங்கள்
  • பால் பொருட்களை அதிகம் எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது
  • முளைகட்டிய பயிர் வகைகள், பச்சை காய் வகைகள், கீரை வகைகள் போன்றவற்றை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்
  • காபி, தேநீரை தவிர்த்து விடுங்கள்
  • மதுபானங்கள் மற்றும் புகையிலை போன்றவற்றை தவிர்த்து விடுங்கள்
  • தினமும் யோகா மற்றும் எளிமையான உடற்பயிற்சி செய்யுங்கள்
  • பகல் நேரங்களில் அதிகம் தூங்குவதை தவிர்ப்பது நல்லது

  எளிமையான உடற் பயிற்சிகள்(easy to do exercises)

  Pexels

  பிரசவத்திற்கு பிறகு நீங்கள் செய்ய சில எளிமையான உடற்பயிற்சிகள்

  1. நடை பயிற்சி

  தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் ஒரு மணி நேரமாவது நடைபயிற்சி செய்யுங்கள். இதனால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். உடல் எடையும் குறையும்

  2. உடற் பயிற்சி

  கை கால்களுக்கும், உடலுக்கும் சில அளிமையான பயிற்சிகளை செய்யுங்கள். இதனால் உடல் நல்ல சுறுசுறுப்பாக இருக்கும், உடல் எடையும் குறையும்.

  3. யோகா

  பிரசவத்திற்கு செய்ய சில குறிப்பிடத்தக்க யோகா பயிற்சிகள் உள்ளன. அதனை நீங்கள் முறையாக ஒரு ஆசாரியரிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்.

  4. மூச்சு பயிற்சி

  உடல் ஆரோக்கியமாகவும், உடல் எடையை சீராக வைத்துக் கொள்ளவும், மூச்சு பயிற்சி பெரிதும் உதவும். அதனால், தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மூச்சு பயிற்சி செய்யுங்கள்.

  5. இடுப்பு பகுதிக்கு பயிற்சி

  குறிப்பாக இடுப்பு பகுதியில் தான் பருமம் அதிகம் உண்டாகின்றது. இந்த வகையில், நீங்கள் உங்கள் இடுப்பு பகுதிக்கு வேலை கொடுக்கும் வகையில் பயிற்சிகளை தேர்வு செய்து செய்ய வேண்டும்.

  கேள்வி பதில்கள் (FAQs)

  1. பிரசவத்திற்கு பின் ஓய்வு கட்டாயம் தேவையா?

  நிச்சயம் தேவை. பிரசவ நேரத்தில் உடல் பல கடினமான மாற்றங்களை எதிர் கொள்கின்றது. இதனால் வலியும் உண்டாகின்றது. இவை இரண்டும் உடல் மற்றும் மனம் இரண்டையும் பாதிகின்றது. ஓய்வு எடுக்கும் போது மனம் அமைதியாகி, தெளிவு பெற்று, புத்துணர்ச்சி பெறுவதோடு, உடலும் ஆரோக்கியம் பெறுகின்றது.

  2. குழந்தை பிறந்த பின் எத்தனை நாட்கள் ஓய்வு பெற வேண்டும்?

  இது ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். எனினும், அறுவைசிகிச்சை பிரசவம் என்றால், மருத்துவர் ஆலோசனைப் படி நீங்கள் 3 முதல் 6 மாதங்கள் அல்லது ஒரு சிலருக்கு ஒரு வருட காலம் வரையிலும் ஓய்வு தேவைப் படலாம். சுக பிரசவம் ஏற்பட்டால், குறைந்தது ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை ஓய்வு தேவைப்படலாம்.

  3. பிரசவத்திற்கு பின் உடல் எடையை எப்படி விரைவாக குறைக்கலாம்?

  இது நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு, செய்யும் உடற் பயிற்சி மற்றும் ஓய்வு ஆகியவற்றை சார்ந்து இருக்கும். அதிக நார் சத்து மாறும் நீர் சத்து இருக்கும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உடற் பயிற்சி செய்ய வேண்டும். மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். இவை நீங்கள் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை விடயங்கள். முடிந்த வரை எண்ணை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. மேலும் அதிக காய் மற்றும் பல வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். முளைகட்டிய பயிர் வகைகள் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும். எந்த காரணம் கொண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவின் அளவை குறைக்க முயற்சி செய்யாதீர்கள்.

   

  மேலும் படிக்க - கர்ப்ப காலத்தில் அணிய வேண்டிய கலக்கலான உடைகள் மற்றும் அதற்கான கடைகள் !

  மேலும் படிக்க - கர்ப்ப காலத்தில் யோனியில் ஏற்படும் மாற்றங்கள் – நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

  பட ஆதாரம்  - Instagram 

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!