பெண்களுக்கு அழகே மெல்லிய இடுப்பும், வயிறும் தான் என்ற கருத்து நிலவும் நிலையில் இந்த இரண்டும் ஒரே நேரத்தில் பெருத்து போகிற நேரம் கர்ப்ப காலம். குழந்தை பிறந்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் புது அம்மாக்களை தடுப்பது, பிரசவத்திற்கு பின்னும் குறையாமல் இருக்கும் பெருத்த வயிறுதான்.
ஆரோக்கியமான குழந்தை வேண்டும் என்பதோடு கூட வயிறு தளர்ந்து தொப்பையாகிவிடக்கூடாது என்றும் கர்ப்பிணிகள் விரும்புகிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு வயிறு இறங்கிவிடாமல் தடுப்பதற்காக புடவை போன்ற நீளமான துணியினால் இறுக்கமாக கட்டுவது பாரம்பரிய பழக்கம்.
pixabay
தற்போது மெட்டனிட்டி பெல்ட், டம்மி பைண்டர் என்ற பெயரில் இதற்கான பல்வேறு வகை பெல்ட்கள் பல விலைகளில் சந்தைகளில் கிடைக்கின்றன. டெலி ஷாப்பிங் நிறுவனங்கள் சில மாடல்களைக் காண்பித்து இந்தப் பெல்ட்டை நீங்கள் நிற்கும் போதோ, உட்காரும் போதோ அரை மணி நேரம் வயிற்றில் கட்டி கொண்டாலே போதும்.
முத்து போன்ற ஜவ்வரிசியை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் மற்றும் ரெசிபிகள்!
தொப்பை குறைந்து 3 வாரங்களிலே அழகான இடையைப் பெறலாம் என கூறுகின்றனர். அவற்றைப் பயன்படுத்தி பிரசவத்துக்குப் பின் உண்டாகும் பெரிய தொப்பையைக் குறைத்துவிட முடியும் என்று நம்புகிறார்கள் பலர் அத்தகைய பெல்டை (belt) பயன்படுத்தலாமா? அதில் கிடைக்கும் நன்மைகள் என்ன என நாம் இங்கு பாப்போம்.
pixabay
பிரசவகால பெல்ட் – நன்மைகள்
- குழந்தை வளர, வளர வயிற்றுத் தசைகள் விரிகின்றன. இடுப்பளவும் மாறுகிறது. இதனால் பிரசவத்துக்குப் பிறகு இடுப்பு பகுதியில் சதை போடுகிறது. இதை குறைக்க வயிற்றைச் சுற்றி பெல்ட் அணியலாம். இதன் மூலம் அப்பகுதி வியர்த்து கலோரிகள் எரிக்கப்படும்.
- வயிற்றுப்பகுதி தசைகள் மற்றும் உறுப்புகளை தாங்கிப்பிடிக்கும் வண்ணம் பெல்ட் போடப்படுகிறது. இதனால் தளர்ந்த தசைகள் இறுக்கமடைந்து தொப்பையான வயிறை சிக்கென்று மாற்றிவிடுகின்றன.
- பெல்ட் அணிந்தால் வயிறு குறையுமா என்கிற சந்தேகமும் பல பெண்களுக்கு இருக்கிறது. பெல்ட் அணிவதால் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கொழுப்பை குறைக்க முடியும் என்பது உண்மையே.
அட! மன அழுத்தத்தில் இருந்து விடுபட இத்தனை சுவாரசியமான வழிகளா ?!
- கர்ப்பத்தின் போது பெருத்து, பிரசவத்துக்குப் பிறகு தளர்ந்து, தொய்வடைந்த வயிற்றுக்கு பெல்ட் ஒருவித சப்போர்ட் தந்து தொப்பையை குறைக்க உதவுகிறது.
- பிரசவித்த பெண்களுக்கு இடுப்புக்குக் கீழ் காற்றுப் போகக் கூடாது என்று சொல்லப்படுவதால், அந்த நேரத்தில் மட்டும் பெல்ட்டை அணிவதால் பலனிருக்கும்.
pixabay
பிரசவகால பெல்ட் – பக்க விளைவுகள்
- சிலருக்கு பெல்ட் அணிவதால் உடல் சூடு, சூடு கட்டிகள், வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள்தான் வரும்.
- பெல்ட்டை (belt) உபயோகப்படுத்தும் அந்த இடத்தில் வெப்பநிலை அதிகரித்து வியர்க்க ஆரம்பிக்கும். இதே நிலை தொர்ந்து நீடிக்கும் போது உடம்பில் இருக்கும் நீர்ச்சத்து வெளியேறும்.
- பெல்ட் அணிவதால் வயிற்றுப் பகுதி, குறிப்பாக கருப்பை அழுத்தப்படுகிறது. அதனால் இரத்தப்போக்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
- பெல்ட்டின் ஓரம் உடலோடு உரசுவதால் அரிப்பு ஏற்படக்கூடும். மேலும் நாள் முழுவதும் அணிந்து கொள்வதால் அசௌகரியமும் வலியும் ஏற்படுகிறது.
pixabay
குறிப்பு
- பிரசவத்திற்குப் பிறகு வயிற்றில் துணி கட்டுவது அல்லது பெல்ட் (belt) அணிந்து கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியம். சுகப்பிரசவமாக இருந்தால் குழந்தை பிறந்த சில மணி நேரம் கழித்து வயிற்றை கட்டிக்கொள்ளலாம்.
கர்ப்பமடைவது எப்படி – பெண்களுக்கான சில ஆலோசனைகள்!
- சில மருத்துவர்கள் ஒருநாள் கழித்தே எவற்றையும் செய்ய அனுமதிப்பார்கள். சிசேரியன் முறையில் அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பிறந்திருந்தால் அந்த காயம் ஆறும் வரை சில வாரங்கள் பொறுத்திருக்க வேண்டும்.
- பிரசவமான உடனேயே உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் வயிற்றைக் குறைப்பதற்கான பயிற்சிகளையும், உணவுக் கட்டுப்பாட்டுக்கான தகவல்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டு, வீட்டிலேயே செய்வது நலம்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!