மழைக்கால சரும வறட்சியை போக்கி உங்கள் முகத்தை அழகாக்கும் ஓட்ஸ்!

மழைக்கால சரும வறட்சியை போக்கி உங்கள் முகத்தை அழகாக்கும் ஓட்ஸ்!

மழைக்காலம் வந்து விட்டாலே கை கால் வறண்டு போகும். சருமத்தைக் கீறினால் வெள்ளை வெள்ளையாக கோடுகள் தென்படும். சிலருக்கு முகம் கறுத்துப் போகும்.  மழைக் காலத்தில் நம் அழகை பாதுகாக்க ஓட்ஸ் (oats) பயன்படுத்தினால் போதுமானது. 

சருமத்திற்கு கிளின்சிங் மற்றும் மாஸ்சுரைசிங் போன்றவற்றை மட்டும் செய்தால் போதாது. இவற்றால் மட்டும் சருமம் நன்கு அழகோடு, பட்டுப் போட்டு இருக்கும் என்று நினைப்பது தவறு. ஏனெனில் இதனால் மட்டும் முகத்தில் இருக்கும் அழுக்குகள் முழுவதும் நீங்கிவிடாது. அவ்வப்போது சருமத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும்.

pixabay

 • ஓட்ஸ் பொடியை எடுத்து அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன் சேர்த்து கலந்து முகத்திற்கு தடவி 2-3 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி சருமம் பொலிவோடு காணப்படும்.

பேரழகு மின்னும் பளிங்கு முகம் வேண்டுமா? மங்கு ,கரும்புள்ளிகளை நீக்கும் குங்குமாதி தைலம் !

 • ஓட்ஸ் பொடியுடன் வாழைப்பழத்தை நன்கு மசித்து வைத்து கொள்ளவும். இதனுடன் தேன் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள அதிகபடியான எண்ணெயை அகற்றிவிடும். 
 • ஓட்ஸ் உடன் வெள்ளரிக்காயை கலந்து பேஸ்ட் செய்து வாரத்திற்கு ஒரு முறை ஸ்கரப் செய்தால் சருமம் பொலிவாக இருக்கும்
pixabay

 • ஓட்ஸ் உடன் தக்காளி சாற்றை கலந்து பேஸ்ட் செய்ய வேண்டும். அதனுடன் சிறிது சர்க்கரை கலந்து ஸ்கரப் செய்தால் நல்ல பலனை விரைவில் காணலாம். இதனை வாரம் இருமுறை செய்துவந்தால் முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கிவிடும். 
 • ஓட்ஸ் மற்றும் ஆலிவ் ஆயிலை சேர்த்து ஸ்கரப் செய்தால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் குறைந்து இளமையான தோற்றத்தை பெறலாம். மேலும் ஓட்ஸை வைத்து ஸ்கரப் செய்வதால், சருமத்துளைகள் ஆரோக்கியம் அடைவது மட்டுமல்லாமல் சருமத்தின் நிறமும் அதிகரிக்கும். 

நல்ல உடல் வாகோடும், ஆரோக்கியத்தோடும் வாழ சில இரகசிய குறிப்புகள்!

 • ஓட்ஸ் (oats) மற்றும் பேக்கிங் சோடாவை சம அளவு எடுத்து நன்றாக பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். இதனை வாரம் ஒரு முறை முகத்தில் ஸ்க்ரப் செய்தால் சருமம் அழகாகும். 
pixabay

 • ஓட்ஸ் உடன் எலுமிச்சை சாற்றை  சேர்த்து ஸ்கரப் செய்தால் முகம் நன்கு பளிச்சென்று காணப்படும். மேலும் எலுமிச்சையில் இருக்கும் பிளிச்சிங் தன்மை சரும நிறத்தை அதிகரிக்க உதவும். 
 • 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், சிறிது பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு  அரைத்து கொள்ளவும். இந்த கலவையை தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வாரம் மூன்று நாட்கள் இதனை தொடர்ந்து செய்து வந்தால் சரும வறட்சி நீங்கும்.

ஒப்பனைக்கு புதுசா? 8 ஒப்பனை அத்தியாவசியங்களுடன் ஒரு திகைப்பூட்டும் தோற்றத்தை அடையுங்கள்!

 • பளிச்சென்ற முகத்தைப் பெற 3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். 
pixabay

 • ஓட்ஸை (oats) முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து புளித்த தயிர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம்.
 • ஓட்ஸ் பொடி, சிறிது சர்க்கரை, 1 ஸ்பூன் ஜோஜோ எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து பேஸ்ட் செய்ய வேண்டும். இதனை தினமும் காலை ஸ்க்ரப் செய்து வந்தால் சருமம் மென்மையாகும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!