பிரம்மாண்ட பட்ஜெட்டில் நயன்தாரா திருமணம்.. கல்யாண புடவையே இவ்வளவு லட்சமா!

பிரம்மாண்ட பட்ஜெட்டில் நயன்தாரா திருமணம்.. கல்யாண புடவையே இவ்வளவு லட்சமா!

நயன்தாரா சில வருடங்களாகவே சொல்லாமல் காதலித்து வந்த நபர் இயக்குனர் விக்னேஷ் ஷிவன். எங்கு சென்றாலும் ஒன்றாக சென்ற இவர்கள் கோலிவுட்டின் செல்லக் காதலர்கள். இன்ஸ்டாக்ராமை தங்களுடைய காதல் புகைப்படங்களால் நிரப்பியவர்கள்.

ஏற்கனவே ஏற்பட்ட கசப்புகள் நயன்தாராவை மிகுந்த இறுக்கமானவராக மாற்றி இருந்தது. அதனால் இவரைத்தான் காதலிக்கிறேன் என்று வெளியில் அறிவிக்க அவர் நிறைய தயங்கினார். இதனைப் புரிந்து கொண்ட விக்னேஷ் ஷிவன் நயன்தாராவை எதற்காகவும் கட்டாயப்படுத்தவில்லை.       

இதெல்லாம் பிடிக்காமல்தான் நான் டிடியை விவாகரத்து செய்தேன் - ரகசியத்தை வெளியிட்ட DD கணவர்!                                                

Youtube

அதனால் நல்ல புரிதலுடன் தன்னுடைய சினிமா வாழ்க்கை பாதிக்கப்படாமல் காதலைத் தொடர்ந்து வந்தார் நயன்தாரா. ஆனால் விக்னேஷ் ஷிவனின் அம்மாவிற்கோ தன்னுடைய மகனின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடக்கூடாது என்கிற பயம் இருந்தது. அதனால் திருமணத்திற்கு கட்டாயப்படுத்தி வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.                                                                         

நீண்ட முயற்சிக்கு பின்னரே நயன்தாரா திருமணத்திற்கு (nayanthara wedding) சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சில மாதங்களுக்கு முன்னர் இரு வீட்டாரும் பேச்சு வார்த்தை சம்பிரதாயங்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

twittter

கூடவே வருகிற டிசம்பர் மாதம் நயன்தாரா - விக்னேஷ் ஷிவன் திருமணம் (nayanthara wedding) நடைபெறலாம் என சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தான் திருமண தேதி எனவும் பல தகவல்கள் வெளியாகின.

தற்போது கிறிஸ்துமஸிற்கு முன்பாகவே திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. திருமணம் நயன்தாராவின் சொந்த மாநிலமான கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சர்ச்சிலோ அல்லது லண்டனில் உள்ள சர்ச்சிலோ வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.                                                                  

instagram

இந்நிலையில் தன்னுடைய கல்யாணபுடவையை நயன்தாரா இத்தாலியில் உள்ள ஆடை வடிவமைப்பாளரிடம் ஆர்டர் செய்திருப்பதாகவும் அதன் விலை 30 லட்சம் எனவும் கூறப்படுகிறது. சினிமாத்துறையில் ஏற்பட்ட காதல் கசப்புகள் காரணமாக சினிமா துறையில் உள்ள யாரையும் அழைக்காமல் எளிமையாக குடும்பத்தினருடன் திருமணம் நடக்க நயன்தாரா திட்டமிட்டிருக்கிறாராம்.

கல்யாண புடவையே 30 லட்சம் என்றால் திருமணத்தின் பிரம்மாண்டம் பற்றி சொல்லவும் வேண்டுமா. தமிழ்த் திரையுலகின் காஸ்ட்லியான நடிகை நயன்தாராவிற்கு திருமணம் என்றால் சும்மாவா!

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!