logo
ADVERTISEMENT
home / Celebrity Life
ஊடகங்கள், பட விழாக்களை தவிர்ப்பது ஏன்? 10 ஆண்டுகளுக்கு பிறகு மவுனம் கலைத்த நடிகை நயன்தாரா!

ஊடகங்கள், பட விழாக்களை தவிர்ப்பது ஏன்? 10 ஆண்டுகளுக்கு பிறகு மவுனம் கலைத்த நடிகை நயன்தாரா!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் தென்னிந்திய மொழி சினிமாவின் நம்பர் 1 நடிகையாக நயன்தாரா இருந்து வருகிறார். 

தமிழில் ரஜினி, விஜய், தெலுங்கில் சிரஞ்சீவி, மலையாளத்தில் நிவின் பாலி என முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் அதே வேளையில் சோலோவாகவும் நடித்து அசத்தி வருகிறார். 

முன்னணி கதாநாயகர்கள் இடம் பெறாவிட்டாலும் கூட கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இவர் நடித்த அறம் மற்றும் கோலமாவு கோகிலா ஆகிய படங்களும் மிகப் பெரிய ஹிட் ஆகியது. 

ADVERTISEMENT

twitter

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் நடிகர் விஜயுடன் இவர் நடித்த பிகில் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தொடர்ந்து உச்சத்தில் சென்று கொண்டிருக்கும் நயன்தாரா மீது இருக்கும் பெரிய சர்ச்சை அவர் ஊடகங்கள் தவிர்க்கிறார் என்பது தான்.  

மக்களின் ஆதரவுடன் பிக் பாஸ் டைட்டிலை வென்ற முகென் : இரண்டாவது இடத்தை பிடித்த சாண்டி!

கிட்டத்தட்ட கடந்த 10 வருடங்களாக அவர் நடித்து வரும் திரைப்படங்கள் சம்பந்தமான விழாக்களில் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இதனால் நயன்தாராவைப் பற்றி பல்வேறு சர்ச்சைகளும் வெடித்து வருகிறது.  இந்நிலையில் உலக அளவில் பிரபலமான இதழ்களில் ஒன்றான வோக் இதழின் இந்தியப் பதிப்பு தன்னுடைய 12வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதை முன்னிட்டு சிறப்பு பிரதியை வெளியிட்டுள்ளனர். 

ADVERTISEMENT

வோக்கின் அட்டைப்படத்தில் இடம் பெறுவது என்பதும் ஒவ்வொரு நடிகர்கள், மற்றும் மாடலிங் துறையில் இருப்போரின் பெருங்கனவு. பொதுவாக பாலிவுட் நட்சத்திரங்களை மட்டுமே தனது அட்டைப்படத்தில் பதிவு செய்கின்ற வோக் இதழ் இந்த முறை தென்னிந்திய நட்சத்திரங்களை பிரபலப்படுத்தும் விதமாக வளரும் நட்சத்திரங்களை அடையாளம் கண்டு அவர்களை அட்டைப் படத்தில் வைத்து அழகு பார்த்துள்ளது. 

அதன்படி மலையாளத்தில் துல்கர் சல்மான், தெலுங்கில் மகேஷ் பாபு மற்றும் தமிழில் சினிமாவை சேர்ந்த நயன்தாராவை அட்டைப் படத்தில் வைத்துள்ளது. இவர்கள் மூவர்தான் தென்னியந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திரங்களாக அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என நயன்தாராவிற்கு புகழாரம் கொடுத்துள்ளனர்.

twitter

ADVERTISEMENT

இது அவருக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களால் வெளியாகி  வரவேற்பை பெற்றுள்ளது. லட்சக்கணக்கானோர் லைக்குகள் மற்றும் கமெண்ட்கள் செய்து வருகின்றனர். இது நயன்தாராவின் அயராத முயற்சிகளுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. 

இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிட்டுள்ள விக்னேஷ் ஷிவன், பெருமை கொள்ளக் வேண்டிய இனிய தருணம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது ரசிகர்களும், சினிமா பிரபலங்கள் பலரும் நயன்தாராவை வாழ்த்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் வோக் இதழ் சார்பில் நடைபெற்ற சந்திப்பில் பேசிய நயன்தாரா, இத்தனை வருடங்களாக ஊடகங்களை தவிர்த்தது ஏன்? என விளக்கம் அளித்துள்ளார். நான் என்ன நினைக்கிறேன் என்பதை எப்போதுமே சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT

இரண்டு மாதக் குழந்தையோடு 6300 அடி உயர மலை சிகரத்திற்கு ட்ரெக்கிங் ! சமீரா ரெட்டி ராக்கிங்!

பலமுறை ஊடகங்களால் தான் தவறாக சித்தரிக்கப்பட்டதும் அதற்கு காரணம் எனவும் கூறியுள்ளார். மேலும் சினிமாவில் எல்லா முடிவுகளையும் நானே எடுக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கும் நீங்கள் மற்ற நடிகர்கள் படங்களில் ஏன் கவர்ச்சியாக நடிக்கிறீர்கள்? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். 

twitter

ADVERTISEMENT

சில நேரங்களில் என்னையும் மீறி அப்படி நடிக்க வேண்டிய நெருக்கடிகள் ஏற்படுகின்றன. கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று எத்தனை நாட்கள்தான் சொல்லிக்கொண்டே இருக்க முடியும். சவாலான வேடங்களில் துணிந்து நடிப்பேன். வெற்றியை எனது தலையில் ஏற்றிக்கொண்டது இல்லை. 

என்னை ஏளனம் செய்பவர்களுக்கு வெற்றி படங்களில் நடிப்பதன் மூலம் பதிலடி கொடுக்கிறேன். தனிமையை விரும்புகிறேன். இந்த உலகம் என்னை பற்றி என்ன நினைக்கிறது என்று கவலைப்படுவது இல்லை. என்னுடைய சில பேச்சுகள் திரித்து வெளியிடப்பட்டதால் 10 ஆண்டுகளாக பேட்டி அளிக்காமல் தள்ளியே இருக்கிறேன் என நயன்தாரா உணர்வுபூர்வமாக கூறியுள்ளார். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

ADVERTISEMENT

 

07 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT