நாடியா ஓகே சொல்லிட்டாங்க.. காதலிலும் ஜெயித்த முகேன் !

நாடியா ஓகே சொல்லிட்டாங்க.. காதலிலும் ஜெயித்த முகேன் !

எத்தனை முறை சொன்னாலும் அலுக்காத ஒரே ஒரு விஷயம் இந்த பிக் பாஸ் சீசன் 3 எல்லோர்க்கும் 75 சதவிகித திருப்தி தந்தது. ஸ்க்ரிப்டட் , பாரபட்சம் போன்ற பல்வேறு விஷயங்கள் காதுகளில் விழுந்தாலும் அப்படி எதுவும் இல்லை பார்வையாளர்களுக்கு சோர்வடைந்து போகாமல் இருக்க அவ்வப்போது ஸ்டண்ட் தேவை என்பதால் அந்த கன்டென்டை போட்டியாளர்களிடம் இருந்தே எடுத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

யாரும் எதிர்பாராத வகையில் சேரனும் தர்ஷனும் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர் போலவே மீதமுள்ள நாட்கள் சென்றது. இந்த உலகில் திடீரென தகுதியே இல்லாதவர்களை தூக்கி வைத்துக் கொண்டாட சிலர் ஒருங்கிணைவார்கள். அப்படியாகத் தான் சரியான போட்டியாளர்களாக தர்ஷன் முகேன் இருவரை விடவும் தன்னலமுள்ள கவின் பிரபலம் ஆனார்.

பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் முறை இங்கும் இருக்கிறது என்று கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின்னரே இந்த சீஸனும் தவறான கைகளில் பட்டம் சென்று விடலாம் என்று பதட்டமாகவே இருந்தது. கடந்த சீசனில் ஐஸ்வர்யாவை வெளியே அனுப்ப எவ்வளவோ முயற்சித்தும் அவர் ரன்னர் அப் ஆனார்.

 

twitter

அதைப் போலவே இந்த முறையும் லாஸ்லியா அவரே வேண்டாம் என்றும் தனக்கு தகுதி இல்லை என்றும் கூறினாலும் கூட அவரை விடாப்பிடியாக மேடை ஏற்றி விடுவார்களோ என்கிற கவலை இருந்தது. ஆனால் கடைசி நிமிட மாற்றமாக முகேன் (muken) வின்னராக மாறியது பார்வையாளர்கள் நெஞ்சில் பாலை வார்த்தது.

எல்லோருக்கும் பிடித்த செல்லப்பிள்ளையாக மாறி இருக்கும் முகேன் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆனார். அந்த வெற்றிக்கு பின்னர் இன்று வரை ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். எப்போதும் நல்ல ஸ்டாமினா கொண்ட முகேன் (muken) எல்லா சேனல்களுக்கு இடைவிடாமல் பரபரப்பாக நேர்காணல் தந்து வருகிறார்.

அதிலும் பிக் பாஸ் வீட்டிற்குள் முகேன் பாடிய வெளிவராத ஒரு ஆல்பம் சாங் மிகப்பெரிய ஹிட் ஆனது. இளம்பெண்கள் எல்லோரும் தன்னை இப்படி நேசிக்க யாரும் இல்லையே என்று ஏங்கும் அளவிற்கு அந்தப் பாடலில் காதல் படர்ந்து கிடந்தது.

Hotstar

அதிலும் இரு மீன்கள் ஒரு ஓடையில் எனும் வரிகளும் அந்த நேரத்தில் முகேனின் குரல் செய்கின்ற ஏற்ற இறக்க ஜாலங்களும் காதலுக்காக ஏங்கும் எல்லா நெஞ்சங்களையும் ஏதோ செய்தன. அந்தப் பாடலில் இருக்கும் அந்தக் காதல் நிச்சயம் முகேன் அடிக்கடி நினைத்து ஏங்கும் அந்தப் பெண் நாடியாவாகவே இருக்கும் என எல்லோரும் சொல்கின்றனர்.

இந்நிலையில்தான் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில் முகேன் (muken) அந்த சந்தோஷ செய்தியை பகிர்ந்திருக்கிறார். நாடியா ஓகே சொல்லிட்டாங்க என்பதுதான் அது. உண்மையிலேயே நெஞ்சின் பூரிப்பை முகத்தில் காட்டும் முகேன் நிச்சயம் தன்னுடைய நல்ல மனத்திற்கான பதில்களை பெற்றுக் கொண்டு வருகிறார் என்பதுதான் சந்தோஷமே.

 

 

Twitter

அடிக்கடி முகேன் சொல்வது போல அவர் இந்த பிரபஞ்சத்தை மிக நேசிக்கிறார்.. ஆகவே பதிலுக்கு இந்த பிரபஞ்சமும் அவரை நேசிக்கிறது. அன்பை பொழிகிறது. பிரபஞ்சத்தின் மீது எதிர்பார்ப்பில்லாத அன்பை வைத்தவர்களுக்கு அது கோடி கோடியாக கொட்டித் தரும் என்பதற்கு முகேன் வின்னர் ஆனதும் அவரது காதல் கை கூடியதும் அவரது பாடல்கள் இனி எங்கும் கேட்கபோவதும் சாட்சி.

எப்படியோ முகேனை எந்த வடிவிலாவது பாடகரோ நடிகரோ அடிக்கடி சந்திக்கவே இளம்பெண்கள் கண்கள் ஏங்குகின்றன என்பதே உண்மை. மற்ற பெண்களுக்கெல்லாம் முகேன் செல்ல மகன், சுட்டி தம்பி என்பதை சொல்லவும் வேண்டுமா!

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!