மதுரை விளக்குத்தூண் ஸ்பெஷல் : பேமஸ் ஜிகர்தண்டா முதல் தெருவோர கடைகள் வரை ஒரு பார்வை!

மதுரை விளக்குத்தூண் ஸ்பெஷல் : பேமஸ் ஜிகர்தண்டா முதல் தெருவோர கடைகள் வரை ஒரு பார்வை!

மதுரையில் (madurai) புகழ்பெற்ற இடங்களில் விளக்குத்தூண் பகுதியும் ஒன்று. மதுரை நகரின் பத்துத் தூண் தெரு அருகே கீழமாசி வீதியும், தெற்கு மாசி வீதியும் இணையும் இடத்தில் இந்த தூண் அமைந்துள்ளது. வீதியின் நடுவே அழகிய வேலைபாடுகள் மிக்க இரும்புத்தூணில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 

பிரித்தானியர்கள் காலத்தில் மதுரை நகரை விரிவாக்கம் செய்த ஆங்கிலேய ஆட்சியாளரான பிளாக்பர்ன்  நினைவாக இந்த தூண் எழுப்பப்பட்டது. மேலும் அதன் அருகிலே பத்து தூண்களும் உள்ளன. 

மதுரையை  நாயக்க மன்னர்கள் ஆண்டதின் அடையாளமாக பல நினைவுச் சின்னங்கள் அரண்மனையாக கோயில்களாக, ஏரி குளங்களாக இன்றும் காட்சி தந்துகொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் பத்து தூண்கள்.

twitter

மதுரை (madurai) மீனாட்சி அம்மன் கோயிலுக்கும், திருமலை நாயக்கர் அரண்மனைக்கும் இடைப்பட்ட பகுதியில் விளக்குத்தூண் அருகில் வரிசையாக அமைந்துள்ளது. இந்த பத்து தூண்கள். மூன்று பேர் சேர்ந்து கட்டிப்பிடிக்கும் அகலத்தில் அமைந்துள்ள இந்தத் தூண்களில்தான் அரண்மனை யானைகளை அக்காலத்தில்  கட்டி வைத்திருப்பார்களாம்

இந்த பகுதியில் தற்போது எண்ணற்ற கடைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் பேமஸ் ஜிகர்தண்டா. மதுரையில் மல்லிக்கு அடுத்தபடியான பிரலமானது தான் ஜிகர்தண்டா. சுண்டக் காய்ச்சிய பாலில் கடற்பாசி, பாதாம் பிசின், நன்னாரி சர்பத் இவற்றுடன் பாலாடை, பாசந்தி ஐஸ் க்ரீம் என்ற சரியான கலவையில், பதத்தில் கிடைக்கிற மதுரை மண்ணின் மகத்தான பானம் ஜிகர்தண்டா. 

twitter

இதனை சாப்பிடவே பலரும் மதுரைக்கு செல்வார்கள். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். தமிழகத்தில் எங்கு ஜிகர்தண்டா சாப்பிட்டாலும் மதுரை விளக்குத்தூணில் உள்ள பேமஸ் ஜிகர்தண்டாவிற்கு ஈடாகாது என்பது நிதர்சமான உண்மை. 

தமிழ்நாட்டில் பல பெயர்கள் கொண்ட ஜிகர்தண்டா கடை கிளைகளுக்கெல்லாம் மதுரை ஃபேமஸ் ஜிகர்தண்டாவே காரணம்.  இந்த கடையின் உரிமையாளர் அமானுல்லாஹ். இவரது முன்னோர்கள் கடந்த 50 வருடங்களாக இந்த தொழிலை செய்து வருகின்றனர். 1977ம் ஆண்டு முதன்முதலா தள்ளுவண்டியில் இந்தக் கடையை ஆரம்பித்துள்ளனர். 

தற்போது சென்னை உட்பட தமிழகத்தில் 15 கிளைகளுடன் இயங்கி வருகிறது. மதுரை (madurai) நகரிலும் புகழ் பெற்ற வணிக நிறுவனங்கள் நிரம்பிய கடை வீதிகள் பல உண்டு. பண்டிகை காலங்களிலும், திருவிழா சமயத்திலும் இங்கு குழுமும் கூட்டம் விளக்குத்தூண் வீதிகளையே திருவிழா களங்களாக மாற்றிவிடும்.

twitter

தீபாவளி என்றால் சிறிய துணி கடைகள், பொங்கல் என்றால்  மஞ்சள்,காய்கறி கடைகள், தேரோட்டம் என்றால் விளையாட்டு, ஆபரணக் கடைகள் என காலத்திற்கேற்ப மாறும் கடைவீதி இது. பெரிய கடைகள் கோபுரம் போல் காட்சியளித்தாலும் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினரின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் சாலையோர கடைகளிலே அனைத்து வித துணி வகைகளும் கிடைப்பதால் தற்போதும் ஏராளமானோர் இங்கு வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று மதுரை முழுக்க பல்வேறு உணவகங்கள் பரவிக் கிடக்கின்றன. ஆனால் மாலையாகிவிட்டால் தெரு வோரங்களில் முளைத்திடும் இரவு உணவகங்கள் என்றும் பிரசித்தியானவை. விளக்குத்தூண் காவல் நிலையம் அருகிலுள்ள சந்தில் மாலைநேரம் மட்டும் செயல்படும் ‘அசோக் ஈவினிங் மட்டன் ஸ்டால்’ அசைவ உணவு பிரியர்களுக்கு விருப்பமான கடையாகும். 

twitter

புரோட்டா, மட்டன் பிரியாணி, குடல் குழம்பு, கறி தோசை என பல்வேறு ரெசிபிக்கள் இங்கு ஒரே இடத்தில கிடைக்கும். இந்த கடைக்கெனத் தனிப்பட்ட வாடிக்கையாளர் கூட்டம் இருக்கிறது. அந்தக் கடையைத் தொடர்ந்து இரவு நேரமானால் அசைவ அங்காடி என்ற பெயருடன் தெற்கு வெளி வீதியில் புதிய கடை தொடங்கப்பட்டுள்ளது. 

கடைக்கு வெளியே அடுப்பில் பெரிய தோசைக்கல்லில் புரோட்டாவை சுடுவது என்ற வழக்கம். அப்பொழுதுதான் தொடங்கியிருக்க வேண்டும். இரவினில் புரோட்டா, மட்டன் என புதிய வகைப்பட்ட உணவு வகைகளுக்கு பழக்கப் பட்ட மதுரைக்காரர்கள் உருவாகிவிட அந்தி நேரத்து அசைவ அங்காடிகள் முதன்மைக் காரணங்கள். இரவு இரண்டு மணிக்குப் போனாலும் ஏதோ ஒரு ஓட்டலில் சாப்பிட ஏதாவது கிடைப்பது மதுரை நகருக்கே உரித்தான தனிச்சிறப்பாகும். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!