லாஸ்லியாவின் அப்பாவுடன் சம்பந்தம் பேச தயார்.. வைரலாகும் பிரபலத்தின் ட்வீட் !

லாஸ்லியாவின் அப்பாவுடன் சம்பந்தம் பேச தயார்.. வைரலாகும் பிரபலத்தின் ட்வீட் !

பிக் பாஸ் சீசன் (bigg boss ) கவின் லாஸ்லியா (kavin losliya) காதலால்தான் பிரபலம் அடைந்தது என்று கவின்லியா ஆர்மியினர் சொல்லி வருகின்றனர். கவின் மற்றும் லாஸ்லியா இடையிலான ஈர்ப்பு பல விதமான விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறது.

ஆனாலும் இந்தக் காதலை கொண்டாடுபவர்கள் இந்த தலைமுறையினர்தான். அமர காதல் காவியங்களை எல்லாம் ஒப்பீடு செய்து இவர்கள் காதல் அப்படியானது என்று சத்தியம் செய்யாத குறையாக கூறுவதும் திடீர் திடீர் என டிவிட்டரில் கவின் லியா காதலை ட்ரெண்ட் செய்வதும் இவர்களின் வாடிக்கை.       

நாடியா ஓகே சொல்லிட்டாங்க.. காதலிலும் ஜெயித்த முகேன் !               

Hotstar

காதல் யார் செய்தால் என்ன.. அதில் உண்மை இருந்தால் அதுவே தன்னை காப்பாற்றிக் கொள்ளும். இது என் எண்ணம். ஆனால் கவினின் காதலுக்கு பின்னால் லாஸ்லியாவிற்கு தரப்பட்ட கைதட்டல்கள் காரணமாக இருந்தது.

அதுவரை சாக்ஷி என்றும் அவர் மேல் பொஸசிவ் என்றும் சாக்ஷிக்கு முகேன் பொட்டுவைக்க அதைப் பார்த்து பொறாமை வந்ததாகவும் மூட் அவுட் ஆனதும் சாக்ஷி இடம் ஸ்பரிசத்தின் மூலமும் நெருக்கமாக பழகி வந்தவர் கவின். ஆனால் சாக்ஷி தன்னுடைய நிர்பந்தங்களுக்கு செவி சாய்க்காமல் உண்மையான உணர்வுகளுக்கு ஆட்பட்டார். இது பெண்மையின் தன்மை.

உனக்காக எப்போதும் நான் காத்திருப்பேன்.. தர்ஷனுக்கு எழுதிய கடிதம் பற்றி ஷெரின்..

Hotstar

உண்மையாகவே சாக்ஷி கவினை நம்பத் தொடங்க கவினுக்கோ எப்படி இவரை கழட்டி விடுவது என்கிற யோசனை. அதே நேரம் இரண்டாவது மூன்றாவது வாரத்தில் லாஸ்லியா பேரை சொன்னதும் தரப்பட்ட கைதட்டல்கள் கவின் மனதில் ஆசையை வளர்த்தன.

தன்னுடைய கடன் பிரச்னைக்காக உள்ளே வந்திருக்கும் கவினிற்கு பிக் பாஸ்வீட்டிற்குள் இருக்கும் நாட்களை நீட்டித்தால் தான் தேவையான பணத்தை பெற முடியும். ஆகவே லாஸ்லியா தன்னுடைய டார்கெட் ஆக இருந்தால் கிடைக்கும் கைத்தட்டல்களில் பாதியை தன்வசம் ஆக்க முடியும் என்பது அவர் வியூகமாக மாறியது.

Hotstar

அதே நேரம் சாக்ஷியை கழட்டி விடவும் இதே காரணம் கவினுக்கு போதுமானதாக இருந்தது. மக்கள் அவ்வளவு எளிது மறந்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறன். லாஸ்லியா ஆரம்பத்தில் கவினுடன் பேசிய காலங்களில் அந்த வழியாக சாக்ஷி வருகையில் சாக்ஷி பார்த்து விட வேண்டாம் என்பதற்காக லாஸ்லியாவிடம் "வெயிலில் இருந்தால் உன் மேக்கப் கலைந்து விடும் " என பொய்யான ஒரு காரணத்தை கூறி லாஸ்லியாவை அங்கிருந்து அப்புறப்படுத்திய கவினின் செய்கைகளால் லாஸ்லியா உடைந்து போயிருந்தார்.

அப்போது சேரன் அப்பா லாஸ்லியாவிற்கு ஆறுதலாக இருந்தார். எதுவும் சொல்லாமலே அந்த ஆறுதலை அவரால் கொடுக்க முடிந்திருந்தது. ஏனெனில் அவர் தந்தை நிலையில் இருந்தார். அதன் பின்னரே கவின் லாஸ்லியாவின் மனப்போக்குக்கு ஏற்ப பேசி அவர் மனதை சிறிது சிறிதாக மாற்றினார்.

அதன் பின்னர் கவினும் ஏதோ ஒரு கணத்தில் ஏதோ ஒரு செயலில் லாஸ்லியா மீது உண்மையாகவே காதலில் விழுந்தார். அதனை மேலும் வளர்க்க விரும்பினார். அதற்கு தடையாக இருந்த சேரனை லாஸ்லியாவின் அன்பில் இருந்து அப்புறப்படுத்தினார்.

Hotstar

இதெல்லாம் நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால் அறியாத ஒன்று இப்படியான ஒரு காதலுக்காக ஒரு அம்மா லாஸ்லியாவின் தந்தைக்கு எழுதிய கடிதம். கவின் லியா திருமணத்திற்காக மாறியநேசனிடம் சம்பந்தம் பேச தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்போது இணையத்தில் இதுதான் வைரல் ஆகியிருக்கிறது. பிக் பாஸ் முடிந்தாலும் இந்தப் போட்டியாளர்கள் பற்றிய செய்திகள் இன்னும் சில நாளைக்கு வைரல் ஆகி வரும் என்பதுதான் உண்மை. அதில் ஒரு வைரல்தான் மேலே சொன்ன அந்தக் கவி கடிதம்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!