லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அழகில் மயங்கிய பாலிவுட்: அழகு தேவதை என புகழாரம்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அழகில் மயங்கிய பாலிவுட்: அழகு தேவதை என புகழாரம்!

தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா அழகு தேவதையாக மிளிர்கிறார் என பாலிவுட் முன்னணி நடிகை கேத்ரினா கைப் மற்றும் பேட்மிட்டன் வீராங்களை சாய்னா நேவால் ஆகியோர் சமூகவலைதளத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளனர். 

பாலிவுட் திரையுலகின் மிகப் பிரபலமான முன்னணி நடிகையாக உள்ள  கேத்ரினா கைப், தன்னுடைய பிராண்ட்மேக்கப் உபகரணங்களை அறிமுகம் செய்யும் வீடியோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார். கே பியூட்டி என்ற பெயரில் உருவாக்கப்பட்ட அந்த விளம்பரத்தில் கேத்ரினா கைப்யுடன் பாலிவுட் முன்னணி நடிகைகள் பலர் கலந்து கொண்டனர்.

instagram

அதில் பேட்மிட்டன் வீராங்கனை  சாய்னா நேவாலும் அதில் நடித்துள்ளனர். அதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த வீடியோவில் தமிழ் சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா கலந்து கொண்டு பட்டையை கிளப்பியுள்ளார்.  

நடிகை நயன்தாரா சமீபத்தில் சோலோவாக நடித்து வருகிறார். ஆனாலும் தான் நடிக்கும் பட புரோமோஷன்களில் பங்கேற்பதில்லை, அழகு சாதன பொருட்கள் விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பது உள்ளிட்ட ஒருசில பாலிசிகளை பின்பற்றி வருகிறார். 

இந்நிலையில் அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் நடிக்க கேத்ரினா, நயன்தாராவிற்கு அழைப்பு விடுத்துள்ளார் அழைப்பை உடனடியாக ஏற்றுக்கொண்ட நடிகை நயன்தாரா ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து கொடுத்துள்ளார். 

 

twitter

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவிற்கு, கேத்ரினா நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் நயன்தாராவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கேத்ரினா கைப் டுவிட்டரில்  தனது கருத்தை பதிவிட்டாள்ளார். 

அதில் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு நன்றி. இடைவிடாத பணிகளுக்கு  மத்தியிலும் கே பியூட்டி நிகழ்ச்சிக்காக மும்பைக்கு பறந்த வந்ததுள்ளார். நயன்தாரா மிகவும் அழகானவர்,  தாராள மனதுடையவர். உங்களுக்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

மேலும் நயன்தாரா குறித்து கருத்து தெரிவித்துள்ளார் சாய்னா நேவால் நயன்தாரா கே பியூட்டி வீடியோவில் அழகு தேவதையாக  மிளிர்கிறார் என பதிவிட்டுள்ளார். இது நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என கலக்கி வரும் நடிகை நயன்தாரா அடுத்து தனது பார்வையை பாலிவுட் பக்கம் திருப்ப உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

twitter

அதற்கான ஒத்திகையாகத் தான் பாலிவுட் விளம்பரங்களில் நயன்தாரா கால்பதிக்க காரணம் என்றும், விரைவில் ஒரு பெரிய பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக தி வோக் இதழின் 2019 எடிசனுக்காக நடிகை நயன்தாரா நிகழ்த்தியுள்ள போட்டோஷூட் சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆனது. தமிழ் நடிகைகளிலேயே நயன்தாராவுக்குத் தான் வோக் பத்திரிக்கையில் முதன் முதலாக இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 
 
 
View this post on Instagram
 
 

VOGUE INDIA ✨ Photographed by : @shotbynuno Styled by: @priyankarkapadia Hair & makeup: @namratasoni

A post shared by nayanthara🔵 (@nayantharaaa) on

நடிகை நயன்தாராவுக்கு டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எந்தவொரு சமூகவலைதளங்களில் கணக்கு இல்லாதநிலையிலும், அவரது ரசிகர்கள் தி வோக் இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே நயன்தாராவின் போட்டோஷூட்டுக்கு லைக்குகள் போட்டிருந்தனர். 

மேலும் அவரது போட்டோக்களுக்கு தொடர்ந்து லைக் போட்டு வருவதால் அந்த போட்டோஷூட் சர்வதேச அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளது. இந்நிலையில் தற்போது கேத்ரினாவுடன் நடத்திய விளம்பர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரல் ஆகிவருகிறது. 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!