சூப்பர் ஸ்டார் மகனுடன் காதலில் விழுந்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன்? நட்பு காதலானது!

சூப்பர் ஸ்டார் மகனுடன் காதலில் விழுந்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன்? நட்பு காதலானது!

பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் (kalyani) காதலில் விழுந்துள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது. நடிகை லிசி - இயக்குநர் பிரியதர்ஷன் மகளான கல்யாணி தற்போது முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு நடிகை லிசி - இயக்குநர் பிரியதர்ஷன் விவாகரத்து பெற்றனர். 

முதலில் மாடலிங்கில் பிஸியாக இருந்த கல்யாணி ஹலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தற்போது சிவகார்த்திகேயனுடன் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

twitter

மேலும் நடிகர் சிம்புவுடன் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கல்யாணி பிரியர்ஷனும், பிரபல நடிகர் மோகன்லாலின் மகனுமான பிரணவ்வும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  நடிகர் மோகன்லாலும், இயக்குநர் பிரியர்ஷனும் நெருங்கிய நண்பர்கள். 

அதேபோல கல்யாணி பிரியதர்ஷனும்(kalyani), பிரணவ்வும் சிறுவயது முதலே நட்பாக பழகி வந்துள்ளனர். அந்த நட்பு தற்போது காதலாக மாறியிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரியதர்ஷன் இயக்கத்தில் பல்வேறு படங்களில் மோகன்லால் நடித்து இருப்பதால் அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு உள்ளது. 

4 முன்னணி பெண் தொழிலதிபர்கள் ஊக்கமளிக்கும் வாழ்க்கைப் பாதை! முழுமையான வழிகாட்டி உள்ளே !

அதனால் பிரணவ்- கல்யாணி காதலுக்கு இரண்டு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக தொடர்ந்து வதந்திகள் பரவி வந்தது. இதுகுறித்து  ஏற்கெனவே பேட்டியளித்திருக்கும் கல்யாணி பிரியதர்ஷன், நான் ஒருவரை காதலிக்கிறேன். எனது காதல் குடும்பத்தினருக்கு தெரியும். 

twitter

எதிர்காலத்தில் அவரையே திருமணம் செய்வேன். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. மற்ற விவரங்களையும் இப்போதைக்கு சொல்ல மாட்டேன் என்று கூறியிருந்தார். இதை கேட்ட ரசிகர்கள், இன்னும் தமிழில் ஒரு படம் கூட வெளியாகி வில்லை அதற்குள் காதலா என்று விமர்சனம் செய்தது வந்தனர். 

இதனால் கடுப்பான கலையணி பிரியதர்ஷன், பிரணவ் தனக்கு கூட பிறக்காத அண்ணன் என்றும் அவரை சிறு வயதில் இருந்தே தெரியும் என்றும் கூறியுள்ளார். எனினும் இதனை யாரும் நம்பியதாக தெரியவில்லை.  இப்படி தான் கூறுவார்கள், பின்னர் இருவரும் திருமணம் செய்து வருவார்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

நாடியா ஓகே சொல்லிட்டாங்க.. காதலிலும் ஜெயித்த முகேன் !

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் (kalyani) இந்த காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தும் இன்னும் அது தீரவேயில்லை. கல்யாணி பிரியதர்ஷனுக்கு கோலிவுட் திரையுலகம் உள்பட தென்னிந்திய திரையுலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் திடீரென அவர் காதலில் விழுந்திருப்பதாக தொடர்ந்து வதந்திகள் வெளியாகி வருகிறது. 

twitter

மேலும் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் தற்போது நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்யாணி பிரியதர்ஷன் ஏற்கனவே தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் இன்னும் அவருக்கு ஒரு படம்கூட வெளியாகவில்லை. 

இந்த நிலையில் காதலில் விழுந்தால் அவரது திரையுலக எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், காதல் என்பது அவரது தனிப்பட்ட விஷயம் அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று அவரது தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். 

twitter

 

இருப்பினும் இந்த காதல் குறித்து அவர் தெளிவான ஒரு விளக்கத்தை அளித்தால் தேவையில்லாத கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் தன்னை விடாமல் துரத்தும் இந்த காதல் கிசுகிசுக்களுக்கு கல்யாணி பிரியதர்ஷனின் பதிலே முற்றுப்புள்ளி வைக்கும்.

ரசிகர்களை எத்தனை நாள் ஏமாற்றுவீர்கள்..உண்மை வெளிவரும் : விஜய்யை விமர்சித்த இயக்குநர் சாமி!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!