பயபக்தியும் அதிக அக்கறையும் உள்ளவரே என் கணவர்.. கல்யாண கனவுகளில் காஜல் அகர்வால்!

பயபக்தியும் அதிக அக்கறையும் உள்ளவரே என் கணவர்.. கல்யாண கனவுகளில் காஜல் அகர்வால்!

நடிகை காஜல் அகர்வாலுக்கு என தமிழ் சினிமாவில் தனி இடத்தையே ஒதுக்கும் அளவிற்கு இப்போதும் அவருக்கு ரசிகர் கூட்டம் இருக்கிறது.                                          

தமிழில் பழனி திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் காஜல் அகர்வால் (kajal aggarwal) . அதன் பின்னர் கார்த்தியுடன் நடித்த நான் மகான் அல்ல திரைப்படம் அவருக்கு நல்ல புகழை தேடி தந்தது. அதன் பின் மாற்றான், துப்பாக்கி, மெர்சல் இந்த வருடம் வெளியான கோமாளி உட்பட பல வெற்றி திரைப்படங்களில் இவர் நாயகியாக நடித்திருக்கிறார்.                                     

Twitter

இது தவிர தெலுங்கு திரைப்படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தெலுங்கு வலைதள ஊடகம் ஒன்றிற்கு காஜல் அகர்வால் பேட்டி அளித்திருந்தார். அதனை நடிகை லக்ஷ்மி மஞ்சு தொகுத்து வழங்கினார். அப்போது பல கேள்விகளுக்கு காஜல் அகர்வால் பதில் அளித்தார்.

எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் உங்கள் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்கிற கேள்விகள் அவரை நோக்கி எழுந்தன. அதற்கு பதில் அளித்த காஜல் அகர்வால் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று அதிர்ச்சியான பதிலை அளித்திருக்கிறார்.                              

 

Youtube

தன்னை திருமணம் செய்து கொள்ளும் கணவனாக பட்டவர் அமைதியானவராக இருக்க வேண்டும் என்பதும் காஜல் மீது அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும் பயபக்தியுடன் இருக்க வேண்டும் என்பதும் அவரது நிபந்தனைகளாம்.                   

இதனை தவிர யாரை கொல்ல நினைக்கிறீர்கள் என்கிற கேள்விக்கு ராம்சரணை கொல்ல விரும்புவதாகவும் யாரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் என்கிற கேள்விக்கு பிரபாஸை திருமணம் செய்து கொள்ள விருப்பம் என்றும் பதில் அளித்திருக்கிறார் காஜல் அகர்வால்.

Instagram

மேலும் காஜல் மிகுந்த ஆன்மீக சிந்தனை உள்ள பெண் என்பதால் அவர் எங்கு சென்றாலும் உடன் ஒரு சிவலிங்கத்தை கொண்டு செல்வாராம். அதனால் தான் பயபக்தி உள்ள கணவரை அவர் எதிர்பார்க்கிறாராம். இந்த தீபாவளியை குடும்பத்தோடு கொண்டாடிய காஜல் அகர்வால் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.                                  

இவரது அடுத்த தீபாவளி தலை தீபாவளியாக இருக்கலாம் என காஜலின் நெருக்கமான வட்டத்திற்குள் இருப்பவர்கள் தெரிவிக்கிறார்கள்.                                         

View this post on Instagram

#diwali2019 🕯💸💥

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!