காதலன் குடும்பத்திற்கு பிரியாணி செய்து கொடுத்து அசத்திய நடிகை ஸ்ரீதேவி மகள்

காதலன் குடும்பத்திற்கு பிரியாணி செய்து கொடுத்து அசத்திய நடிகை ஸ்ரீதேவி மகள்

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். தமிழில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி இந்தியிலும் முன்னணி நடிகையாக விளங்கினார். தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஜான்வி (janhvi), குஷி என 2 மகள்கள். கடந்த ஆண்டு துபாயில் நடந்த விபத்தில் ஸ்ரீதேவி காலமானார்.

தனது அம்மாவின் மறைவிற்கு பின்னர்  ஜான்வி கபூர் சினிமாவுக்கு வந்துவிட்டார். முதன் முதலாக தடக் எனும் ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் ஜான்விக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகரின் சகோதரரான ஷாகித் கபூரின் தம்பி இஷான் கட்டார் நடித்திருந்தார். 

twitter

மராத்தியில் வெளியாகி வெற்றி பெற்ற சாய்ரத் என்ற படத்தின் ஹிந்தி ரீமேக்தான் தடக். இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் ஜான்சி-இஷான் ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து ஜான்வி இரண்டு படங்களிலும், இஷான் ஒரு படத்திலும் நடித்து வருகின்றனர். 

நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் சாக்ஷி அகர்வால் : ஒருதலை காதலில் சிக்கி தவிர்ப்பு!

இவர்கள் இருவரும் சினிமா வாழ்க்கையில் பிஸியாக இருந்தாலும் இருவரும் ஜோடியாக இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவர். 

மேலும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொள்வதாலும் ஹிந்தி மீடியாவில் இவர்கள் காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இதுகுறித்து சமீபத்தில்  இஷானிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், ஜான்வியுடன் (janhvi) காதலா என்று கேட்டனர்.

twitter

அதற்கு நாங்கள் நல்ல நண்பர்கள் என்பதால் தான் ஒன்றாக பல இடங்களுக்கு செல்கிறோம். ஜான்வி அதிகமாக தென்னிந்திய பாடல்களை கேட்பதால் எனக்கு தற்போது அந்தப் பாடல்கள் பிடித்துள்ளன என்று பதில் அளித்திருந்தார். 

மேலும் ஜான்வி - இஷான் பழகி வருவது போனி கபூருக்கு தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என கூறப்பட்ட நிலையில் இது குறித்து பேசிய, போனி கபூர், இஷான் மற்றும் ஜான்வி ஒன்றாக படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் நண்பர்கள் ஆகியிருப்பார்கள். 

இதெல்லாம் பிடிக்காமல்தான் நான் டிடியை விவாகரத்து செய்தேன் - ரகசியத்தை வெளியிட்ட DD கணவர்!

நான் என் மகளை மதிக்கிறேன், அவரது நட்பையும் தான் என கூறியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஜான்வி இஷான் கட்டர், ஷாகித் கபூர் மற்றும் ஷாகித் கபூரின் மனைவி மிரா ராஜ்புட் ஆகியோருக்கு ஜான்வி அழைப்பு விடுத்துள்ளார். 

twitter

அப்போது அவர்களுடன் சேர்ந்து மதிய உணவாக பிரியாணி சமைத்து பரிமாறியுள்ளார். இதனை தொடர்ந்து மிரா ராஜ்புட் , ஜான்வி (janhvi) செய்த பிரியாணியின் போட்டோவை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு சிவப்பு அரிசியில் பிரியாணி சமைத்துள்ள ஜான்விக்கு பாராட்டுகளை தெரிவிக்குமாறு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

முன்னதாக சமீபத்தில் டிவி நிகழ்ச்சியில் ஜான்வி தனது தங்கை குஷி கபூருடன் கலந்து கொண்டார். அப்போது இஷான் உடனான பழக்கம் குறித்து பேசிய அவர் நான் எந்த பையனுடன் வெளியே போகலாம் என்பதை அப்பா கண்காணிப்பார். 

நான் அந்த அளவுக்கு யாருடனும் வெளியே செல்வது இல்லை என கூறினார். உங்களின் அப்பா இஷான் பற்றி என்ன நினைக்கிறார் என்று கேள்விக்கு, வெட்கப்பட்டுக் கொண்டே இஷான் நல்ல நடிகர், நல்ல பையன் என்று நினைக்கிறார் என கூறியது குறிப்பிடத்தக்கது.

வாணி போஜனுக்கு அடித்த அதிஷ்டம் : பிரபல நடிகர் படத்தில் இணைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!