ஜாமூன் மிக்ஸ் இல்லாம ஜாமூன் செஞ்சு பார்த்திருக்கீங்களா! ரொம்ப சிம்பிள் வாங்க சமைக்கலாம்!

ஜாமூன் மிக்ஸ் இல்லாம ஜாமூன் செஞ்சு பார்த்திருக்கீங்களா! ரொம்ப சிம்பிள் வாங்க சமைக்கலாம்!

தீபாவளி அன்னிக்கு எந்த ஸ்வீட் செய்யறமோ இல்லையோ குலாப் ஜாமூன் செஞ்சே தீருவோம்கறது எழுதப்படாத விதியா போய்டுச்சு! இந்த முறை ஒரு வித்யாசமான ஜாமூனை செஞ்சு அசத்துங்க !(gulab jamoon receipe)

இந்த தீபாவளிக்கு உங்க ஃபேவரைட் காஜூ கத்லிய வீட்லயே செஞ்சு அசத்துங்க!

Youtube

குலாப்ஜாமூன்

தேவையான பொருட்கள் :

ரவா - 1 கப்

நெய் - 1/2 ஸ்பூன்

பால் - 2 1/2 கப்

சர்க்கரை - 2 1/2 கப்

தண்ணீர் - 2 1/4 கப்

ஏலக்காய்த்தூள் - 1/2 ஸ்பூன்                                                                                   

Youtube

செய்முறை

ஒரு சுத்தமான வாணலியில் எடுக்கப்பட்ட அளவுக்கு ரவையை கொட்டி நன்கு வறுக்க வேண்டும். மிதமான தீயில் இருக்க வேண்டியதும் அவசியம்.

ரவை கொஞ்சம் வறுபட்டதும் உடன் கொடுத்திருக்கும் அளவுள்ள நெய்யை சேர்க்கவும்.

அதனுடன் 2 1/2 கப் பாலை சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும். ரவை உப்புமா செய்யும்போது உடையாமல் கட்டி தட்டாமல் செய்வது போலவே பாலையும் சேர்த்து செய்ய வேண்டும்.                        

ரவை வெந்த உடன் இறக்கி நன்றாக ஜாமூனுக்கு பிசைவது போல பிசைந்து கொள்ளுங்கள்.                           

ஒரு பாத்திரத்தில் 21/4 கப் நீர் ஊற்றி அதில் சர்க்கரையை சேர்த்து கொதிக்க விடுங்கள். 7 நிமிடம் கொதிக்க விட்ட பிறகு அதில் ஏலக்காயை சேர்த்து இறக்கி விடுங்கள்.                             

பின்னர் பிசைந்த ரவையை சிறு உருண்டைகளாக்கி மிதமான தீயில் எண்ணையை கொதிக்க விட்டு அதன் பின்னர் ரவை உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும்.                    

உருண்டைகள் ஆறியவுடன் அதனை சர்க்கரை பாகில் போட்டு ஊறவிடவும். அடுத்த நாள் சாப்பிட அருமையான குலாப் ஜாமூன் தயார்.              

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!