logo
ADVERTISEMENT
home / Self Help
கோபத்தை இப்படியும்  அணுகலாமா ? சுவாரசியமான அணுகுமுறைகளும் நிர்வகிக்கும் விதங்களும்!

கோபத்தை இப்படியும் அணுகலாமா ? சுவாரசியமான அணுகுமுறைகளும் நிர்வகிக்கும் விதங்களும்!

கோபம் என்பது சாதாரணமான விஷயம்தான். ஏன் அது ஒரு ஆரோக்கியமான உணர்வும்கூட. ஆனால் அதை நேர்மறையாக எதிர்கொள்ள வேண்டும். ஒரு சூழ்நிலை உங்களை நிலைகுலையவைக்கிறது, உங்களுக்கு பிடிக்கவில்லை, நியமாக இல்லை, பயமுறுத்துகிறது போன்ற அச்சுறுத்தல்களின் வெளிப்பாடாக கோபம் வரும். ஒருவர் மனநிலையை, அதுவும் கோபமாக இருக்கும்போது அவரை பணியவைப்பது என்பது மிகவும் கடினம். கோபம் மிகவும் சக்திவாய்ந்த உணர்ச்சியின் வெளிப்பாடு. கோபத்தைக் கையாள (anger management) சுய விழிப்புணர்வும், சுய கட்டுப்பாடும் மிகவும் தேவை.

கோபத்தால் ஏற்படும் விளைவு

கோபம் நல்லதுதான் என்றாலும் அதனால் உங்களுக்கு ஏற்படும் எதிர்மறை விளைவுகள் பற்றி முதலில் பார்போம். 

  • உடல் ஆரோக்கியம்: தொடர்ந்து கோபப்பட்டுக்கொண்டே இருந்தால், இருதய நோய், நீரழிவு நோய், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, தூக்கமின்மை, உயர் இரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் வரக்கூடும்.
  • மன ஆரோக்கியம்: அதிகம் கோபப்படுவதால் உங்கள் மனம் யோசிக்கத் தெம்பில்லாமல், உங்கள் அன்றாட வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும்.
  • தொழில்: ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், சரியான வாக்குவாதமும் ஆரோக்கியமானது. அதற்கு மாறாக கோபப்படுவது உங்கள் தோழர்கள், உயர் அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் போன்றோரிடம் இருந்து உங்களை அந்நியப்படுத்தும்.
  • உறவு: நீங்கள் மிகவும் விரும்புபவரிடமும், வேலை இடங்களிலும் தோழர்களுக்கும் உங்கள் கோவம் (anger) அவர்கள் மனதில் ஒரு வடுவை ஏற்படுத்தும். மேலும், சத்தம் எழுப்பி கோபித்தால், மற்றவர்கள் உங்களை நம்ப மாட்டார்கள், உண்மையைச் சொல்ல தயங்குவார்கள், அல்லது இயல்பாக உணர கடினமாக இருக்கும்.

கோபத்தை எப்படியெல்லாம் அணுகக்கூடாது?

கோபத்தை முறையாக கையாள வேண்டும். முதலில், கோபத்தை எப்படியெல்லாம் அணுகக்கூடாது என்று பார்க்கலாம்.

1. கோபத்தை காலியாக்க முயற்சிப்பது

தலையணையை குத்துவது, குப்பையை சிதறவிடுவது, பயங்கரமாக கத்துவது என்று சிலர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். அது கோபத்தை குறைக்காது. மேலும் அதிகப்படுத்தும். உங்கள் ஆற்றல் முழுவதும் வீணாகி சோர்ந்து விடுவீர்கள்.

ADVERTISEMENT

2. பெண்களை விட ஆண்கள் கோபக்காரர்கள் என்று நம்புவது

ஆண்கள் கோபத்தை மூர்க்கமாக வெளிப்படுத்துகின்றனர். பெண்கள் வேறு வகைகளில் கையாளுகிறார்கள். அவ்வளவே. உண்மையில் இருபாலருக்கும் சமமாகவே கோபம் வருகிறது.

3. கோபத்தை நிராகரிப்பது

பெரும்பாலானோர் நினைப்பது, கோபத்தை மறக்க நினைத்தால் அது போய்விடும் என்று. உங்கள் ஏமாற்றத்தை சிரித்து மழுப்புவது, உங்கள் கோப உணர்வை மறுப்பது, அல்லது மற்றவர்கள் உங்களை கீழ்த்தரமாக நடத்த அனுமதிப்பது – இப்படி கோபம் வரும் சமயங்களில் அதை அடக்கினால் அது உங்களுக்கு எதிர்ப்பதமாகத் திரும்பும். உங்கள் உடல்நிலை மற்றும் மனநிலையை பாதித்து உயர் இரத்த அழுத்தம் முதல், மனச்சோர்வு வரை கொண்டுபோய் விட்டு விடும் அபாயம் உள்ளது.

4. கோபமும், முரட்டுத்தனமும் ஒன்று என்று எண்ணுவது

பெரும்பாலானோர், இவை இரண்டையும் ஒன்று என்று நினைத்து விடுகின்றனர். கோபப்படுவது ஆரோக்கியமானது. ஆனால் முரட்டுத்தனம் அப்படி இல்லை. 

5. கோபம் ஒரு எதிர்மறையான உணர்ச்சி என்று நினைப்பது

நியாயமான விஷயங்களுக்கு கோபம் மிகவும் தேவையான, ஆரோக்கியமான ஒன்றுதான். சமூகத்தில் மாற்றங்கள் வர, நல்ல விஷயங்கள் நடக்க கோபம் நல்லது. 

ADVERTISEMENT

6. கோபத்தை அணுகுவதால் கோபம் கட்டுப்படாது என்று நினைப்பது

கோபத்தை தக்க முறையில் வெளிப்படுத்துவதும், அணுகுவதும் பல உறவுகளை வலுப்படுத்தும். முரட்டுத்தனமான கோபத்தை கட்டுப்படுத்த ஒரு பயிற்சி வகுப்பை அணுகினால் நிச்சயம் தீர்வு காணலாம். 

கோபத்தை எப்படி முறையாக கையாள வேண்டும்?

சரி , கோபத்தை எப்படி முறையாக கையாள வேண்டும் (handle tips) எப்படி அணுக வேண்டும் என்று பார்க்கலாம்.

1. சுய விழிப்புணர்வு (self-awareness)

சுய விழிப்புணர்வு என்பது நீங்கள் என்ன உணருகிறீர்கள், என்ன நினைக்கிறீர்கள், ஏன் நினைக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ளும் திறன். சின்ன குழந்தைகளுக்கு இது வருவது கடினம். அதனால் தான்  அவர்கள் கோபப்படும்போது சண்டித்தனம் செய்கிறார்கள். ஆனால், வளர்ந்த குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அந்த ஆற்றல் இருக்கும். அதனால், அடுத்த முறை கோபம் வரும்போது ஒரு நிமிடம் யோசித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், என்ன யோசிக்கிறீர்கள் என்று அறிந்து செயல்பட்டால் போதும். 

2. சுய கட்டுப்பாடு(Self-Control)

கோபப்படும்போது நீங்கள் யோசிக்க வேண்டியது சுய கட்டுப்பாடு. உங்கள் நேரத்தை இப்படி கோபப்பட்டு வீணடிக்கலாமா என்று ஒரு நொடி நினைத்தால் போதும், கோபம் தேவை இல்லாத இடங்களில் காணாமல் போய்விடும். 

ADVERTISEMENT

3. உடற்பயிற்சி

கோபப்படும்போது அதிகம் அட்ரீனலின் சுரக்கும். உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு இருந்தால் அதிக அட்ரீனலினால் ஏற்படும் முரட்டுத்தனமான நடத்தைகள் கட்டுக்குள் இருக்கும். 

4. இசை

உங்களுக்கு பிடித்த இசையை கேட்பது உங்கள் கோபத்தை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது. உங்கள் மனநிலையை உடனடியாக மாற்றக்கூடிய தன்மை இசைக்கு இருக்கிறது.இது ஒரு சிறந்த எளிதான அணுகுமுறை ஆகும்! 

5. தீர்மானம்

உங்கள் கோபம் நியாயமாக இருக்கலாம், ஆனால் அதை வெளிப்படுத்தும் இடம் சரியாக இருந்தால், பின் விளைவுகளில் இருந்து தப்பிக்கலாம்.

6. தீர்வு

உங்களை எது கோபப்படுத்தியது என்று உணராமல், கோபத்திற்கான தீர்வு என்ன என்று யோசியுங்கள். உங்கள் குழந்தை வீட்டின் அறையை அலங்கோலப்படுத்திக் கொண்டே இருக்கிறதா? கதவை மூடி விடுங்கள். உங்கள் கணவர் தினமும் நேரம் களித்து வருகிறாரா? இரவு உணவை நேரம் களித்து உண்ணுங்கள். அல்லது நீங்கள் விரைவாகவே சாப்பிட்டு விடுங்கள். 

ADVERTISEMENT

7. நகைச்சுவை

உங்கள் கோபத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்துங்கள். கிண்டல் செய்யாமல், உங்கள் எண்ணங்களை நாசூக்காக வெளிப்படுத்தலாம். 

8. தியானம்

தியானம் உங்கள் மனதை சாந்தப் படுத்தும். தேவையே இல்லாமல் கோபம் வருவதையும் கட்டுப்படுத்தும்.

9. உதவி

ஒரு நல்ல ‘ஏங்கெர் மேனேஜ்மென்ட்’ தெரபி (anger management therapy) பயிற்சி மேற்கொள்ளுங்கள். 

10. தளர்வு

உங்கள் மனதை தளர்வாக ஆக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, அல்லது தொடர்ந்து ‘டேக் இட் ஈசி’ போன்ற வாசகங்களை மனதிற்குள் உச்சரிப்பது போன்ற உங்களை தளர்த்திக்கொள்ளும் செயல்களில் ஈடுபடுங்கள்.

ADVERTISEMENT

“கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்”! என்பார்கள். ஆனால், கோபம் எதையும் சரி செய்யாது. சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் என்பதை  நினைவில் கொண்டு, மேலே கூறிய பல வழிகளில் உங்களுக்கு பொருந்தும் யுக்தியை கையாண்டு கோபத்தை சரி செய்யுங்களேன்! 

 

மேலும் படிக்க – மன அழுத்தத்தில் இருந்து பெண்கள் விடுபட உதவும் ஸ்பா தெரபிகள் மற்றும் சில சிம்பிள் டிப்ஸ்கள்

பட ஆதாரம்  – Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! 

16 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT