இளம் வயதிலேயே முதுமை தோற்றம் அறிகுறியா? மாற்றுங்கள் உங்கள் அன்றாட பழக்க வழக்கங்களை!

இளம் வயதிலேயே முதுமை தோற்றம் அறிகுறியா? மாற்றுங்கள் உங்கள் அன்றாட பழக்க வழக்கங்களை!

முதுமை பல காரணங்களால் ஏற்படுகிறது. அதற்கு நாம் உண்ணும் உணவுகளும் ஒரு வகை காரணம். அதுமட்டுமல்லாமல் சருமத்தை முறையாக பராமரிக்காததாலும் முதுமை தோற்றம் ஏற்படும். முந்தைய காலத்தில் வாழ்ந்த மக்கள் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்டதால் நீண்ட நாட்கள் இளமையோடு வாழ்ந்தனர். 

தற்போது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளால் 30 வயதிலேயே முதுமை (aging) தோற்றத்தை அடைகின்றனர். இதனால்முகத்தில், கோடுகள் போன்றவை காணப்படுகின்றன. நமது அன்றாட வாழ்க்கையில் முறையில் சில மாற்றங்கள் செய்தாலே முதுமையை தள்ளி போடலாம். அவை என்னென்ன என்பது குறித்து இங்கு காண்போம். 

pixabay

முதுமை தோற்றம் - முக்கிய காரணங்கள்

 • புகைபிடிப்பதால் கொலாஜென்’ உற்பத்தி குறைந்துவிடும். இதனால் இளமையிலேயே வயதான தோற்றம் உருவாகிவிடும். எனவே புகை, மது பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.
 • அதிகப்படியான மனஅழுத்தம் காரணமாகவும் முதுமைத்தோற்றம் ஏற்படும். மனஅழுத்தம், ‘ஸ்ட்ரெஸ் ஹார்மோன்’ எனப்படும் ‘கார்டிசால்’ சுரப்பை அதிகரிக்கச் செய்யும். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து முதுமை தோற்றம் ஏற்படும். 
 • பெரும்பாலும் சீக்கிரம் முதுமை தோற்றம் (aging) வாரத்துக்குக் காரணம் அவங்க பயன்படுத்தும் சோப்பு தான். ட்ரை சோப்பை பயன்படுத்தும் போது சருமத்தில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு போய்டும். 
pixabay

 • வெண்ணெய், சீஸ், சாக்லேட், கேக், இனிப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டாலும் சருமம் முதுமை அடையும். 
 • சிலருக்கு குப்புற படுத்து தூங்கும் பழக்கம் இருக்கும். அவர்களது முகம் தலையணை, பெட்ஷீட் போன்றவற்றில் தினமும் படிந்து முகம் முதுமை அடைகிறது.
 • கண்களைச் சிரமப்படுத்தி செய்யும் ஒவ்வொரு காரியத்தின் போதும் முகத்தில் சுருக்கம் ஏற்படத் தொடங்கும். இதனால் கண்களுக்கு ஒய்வு கொடுப்பது அவசியம். 
 • இரவில் அதிக நேரம்  செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு எளிதாக முக முதிர்ச்சி ஏற்படும்.
pixabay

முதுமை தோற்றத்தை சரிசெய்யும் இயற்கை வழிகள்

 • கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், அதில் உள்ள உட்பொருட்கள் சரும செல்கள் உறிஞ்சி முதுமை (aging) தோற்றத்தைப் பெறுவது தள்ளிப் போடப்படும்.
 • ஆரோக்கியமான சமச்சீரான உணவு முறை, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவை இளமைத் தோற்றத்தைக் காக்க உதவும்.
 • ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சிவப்பு, வெள்ளை, மஞ்சள், பச்சை நிறக் காய்கறிகள் மற்றும் பழங்கள், மீன், ஆலிவ் எண்ணெய் போன்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்நிறைந்த உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
 • ஆவி பிடிப்பதால் முதுமை தோற்றதை தடுக்க முடியும். சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்காமல் தங்கி விடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. வாரம் ஒரு முறை ஆவி பிடித்தால் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று இளமைத் தோற்றதை தரும்.
pixabay

 • உடலுக்கு மாசாஜ் செய்வது சிறந்த பலன்களை தரும். நல்லெண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்தால்எந்த ஒரு பிரச்சனையும் வராது. இந்த எண்ணெய் சருமத்தில் ஏற்படும் பருக்களை நீக்கி இளமையாக வைத்திருக்க உதவுகிறது. 
 • தக்காளி கூழை முகத்தில் அப்ளை செய்து கழுவலாம். தக்காளியில் இருக்கும் லைக்கோபீன் என்னும் கெமிக்கல் முகத்தில் தோன்றும் கோடுகளை தடுப்பதோடு செல்கள் பாதிப்பு மற்றும் சரும தோற்று நோய்கள் வராமலும் தடுக்கும்.
 •  தினமும் இரவில் படுக்கும் போது ஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து மறுநாள் காலையில் கழுவு வந்தால் முதுமையை தள்ளிப் போடலாம்.
pixabay

 • ப்ளு பெர்ரி பழச்சாறை முகத்தில் தேய்த்து வர முகம் இளைமையாக இருக்கும். இதில் இருக்கும் ஆன்தோசைனோசைடு, முதுமை தோற்றத்தை ஏற்படுத்தும் முகச்சுருக்கம் போன்றவற்றை தடுக்கிறது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் சி, உடலில் இருக்கம் கொலாஜென் உருவாக்கத்தை உறுதிப்படுத்துவதால் முதுமையை தடுக்கிறது. 
 • தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்து வந்தாலே போதுமானது. சருமத்தின் ஈரப்பதம் தக்கவைக்கப்பட்டும் என்று இளைமையாக காட்சியளிப்பீர்கள்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!