உலகம் முழுவதும் பிரபலமாகும் சீஸ் டீ : தயாரிக்கும் விதம் மற்றும் சுவாரஸ்யமான நன்மைகள்!

உலகம் முழுவதும் பிரபலமாகும் சீஸ் டீ  : தயாரிக்கும் விதம் மற்றும் சுவாரஸ்யமான நன்மைகள்!

சீஸ் டீ ஆசியாவில் தோன்றி தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. சீஸ் டீ பல விதங்களில் தயாரிக்கப்படுகிறது. சீஸ் டீ  தயாரிக்க டீயில் கீழடுக்கில் க்ரீம் சீஸ், வைப்டு க்ரீம், கன்டன்ஸ்டு மில்க் என ஒவ்வொரு அடுக்காக சேர்த்து, சீஸின் நுரையை மேல் அடுக்கில் சேர்க்கிறார்கள். 

அதற்கு மேல் சிறிது உப்பும் தூவி கொடுக்கிறார்கள். ஒவ்வொரு துளி பருகும்போதும் இனிப்பு தேநீர், உப்பு மற்றும் இனிப்பு க்ரீம் சீஸ் என கலவையான சுவையை உணர முடியும். இதுவே சீஸ் டீயின் (cheese tea) பிரபலத்திற்கு காரணம். சீஸ் டீ சூடாக மற்றும் குளிர்ச்சியாக என்று இரண்டு வகையாக கிடைக்கிறது.

twitter

சீஸ் டீ குறிப்பாக சீனாவில் இருந்து தான் உலகமே முழுவதும் பரவியுள்ளது.  21 வயது இளைஞர் தான் இந்த சீஸ் என்னும் தேநீரை முதன் முதலாகத் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் சிறிய கடையில் தொடங்கிய சீஸ் டீ விற்பனை இன்று குவாங்டோங் மாகாணத்தில் மட்டுமே 50 கிளைகளுடன் செய்யப்பட்டு வருகின்றன. 

இந்த சீஸ் டீயை பலவிதமான நறுமணச்சுவைகளிலும் தயாரிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சம். தேயிலை ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது என ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கின்றன. அதன் அடிப்படையில் சீஸ் டீயின் முக்கிய மூலப்பொருள் தேயிலை என்பதால டீயின் மூலம் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் சுவையோடு சேர்த்து இந்த சீஸ் டீயிலும் பெற முடியும் என்பது இதன் சிறப்பு.

ஆண்களுக்கு இவ்வகை பெண்களைத்தான் மிகவும் பிடிக்குமாம் ! இதை கவனியுங்கள் பெண்களே!

சீஸ் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. தற்போது பிட்சா, பர்கர், சீஸ் சாண்ட்விச் மற்றும் சாக்லெட் டெசர்ட்டுகள் போன்ற சுவையான உணவுப் பொருட்கள் கடைகளில் விற்கப்படும் போது உடல் எடையை குறைப்பது என்பது சற்று சவாலான விஷயம் தான்.

twitter

ஏனெனில் இவற்றைப் பார்க்கும் போது பசியுணர்வு அதிகரித்து ஒரு கட்டத்தில் நம்மை மீறியே அதனை சாப்பிட்டு விடுவோம். அப்படி சாப்பிட்ட பின்னர் அதனால் ஏற்பட்ட உடல் எடையை உடற்பயிற்சியை மட்டும் செய்து குறைக்க முயற்சிப்போம். 

உடல் எடையை குறைக்க காய்கறிகள், பழங்கள் மற்றும் பானங்கள் கூட பெரிதும் உதவியாக இருக்கும். அவற்றில் பானங்கள் என்று வரும் போது டீ தான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சீஸ் டீயை குறிப்பிட்ட அளவு தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும். 

ஸ்ட்ரெச் மார்க்ஸை குறைக்கும் புதிய பொருட்கள்!

சீஸில் கால்சியம், ஜிங்க், விட்டமின் ஏ மற்றும் பி 12 ஆகியவை உள்ளன. மேலும் உடலுக்கு தேவையான மிக முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனால் சீஸ் டீ (cheese tea) அருந்துவது ஆரோக்கியமானே ஒன்றே. 

twitter

சீஸ் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருளாகும். அதனால் சீஸ் டீ சாப்பிடுவதால் உங்களது உடலில் உள்ள சிறுசிறு நோய் தொற்றுகள் அழிந்து போகும். அதனால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம்.

நமது மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், சட்டென்று யோசித்து முடிகளை திறமையாக எடுக்கவும் இந்த சீஸ் டீ  (cheese tea) மிகவும் உதவியாக இருக்கிறது. எனவே நீங்கள் சுறுசுறுப்பான மூளையின் இயக்கத்திற்கு இதனை சாப்பிடலாம்.

சீஸில் உள்ள செலினியம் மற்றும் விட்டமின் இ ஆகியவை உங்களது சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்கிவகிக்கிறது. எனவே ஆரோக்கியமான சருமத்திற்கு சீஸ் டீ அருந்தலாம். 

வாய்ப்புண் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் இயற்கை முறையில் குணப்படுத்துவதற்கான டிப்ஸ்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!