தீராத முழங்கால் வலி, இடுப்பு வலி, முதுகு வலிகளுக்கான நிரந்தர தீர்வு - இதோ!

தீராத முழங்கால் வலி, இடுப்பு வலி, முதுகு வலிகளுக்கான  நிரந்தர தீர்வு - இதோ!

சுண்ணாம்பு சத்து குறைபாட்டால் வரும் எலும்பு இணையும் இடங்களான முழங்கால்(knee), இடுப்பு, கழுத்து, முதுகு போன்ற இடங்களில் தொடர்ந்து வலி இருந்துகொண்டே இருக்கும். உங்களை வேலை செய்ய தடை செய்யும். அதனால் உடல் பருமன் ஆகும். அதன் விளைவாக நீரழிவு, இரத்த அழுத்தம் போன்ற பல நோய்கள் வரக்கூடும். இத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு உங்கள் உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்களை சேர்த்துக் கொள்வதுதான். 

நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இயற்கையாகவே சுண்ணாம்பு சத்து குறைவாக இருக்கும். அதனால், கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்களாகவே மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல், கடைகளில் வாங்கி உண்கின்றனர். அது உங்கள் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எப்போதும் இயற்கையை நம்புங்கள், உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்பும் வராது.

பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகள் முதல்  சுண்ணாம்பு சத்து குறைபாடு என்று ஆரம்பம் ஆகிறது. இதை எளிதாக வீட்டிலேயே நிறைவு செய்யக்கூடிய வைத்தியம் / வழிகளைப்(remedy) பார்க்கலாம். 

1. ராகி மற்றும் ஜவ்வரிசி

Pexels

மாவு ஜவ்வரிசியிலும், ராகியிலும் சுண்ணாம்பு சத்து அதிகம் இருக்கிறது. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் காலை மாலை என இரண்டு வேலைகளிலும் பருக்கக்கூடிய பானம் இது. 

தேவையான பொருட்கள்:

மாவு ஜவ்வரிசி - 25 கிராம்
ராகி - 50 கிராம்

செய்முறை: 

1. ஜவ்வரிசியை தனியாக எண்ணெய் சேர்க்காமல் ஒரு காடாயில் சேர்த்து வறுக்கவும்.
2. பின் அதோடு ராகியையும் சேர்த்து வறுக்கவும். கேழ்வரகின் நிறம் லேசாக மாறும் வரை இரண்டு நிமிடங்கள் வறுக்கவும்.
3. ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு நாற்றாக பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். சிறு குழந்தைகளுக்குத் தருவதாக இருந்தால் சலித்து வைத்துக்கொள்ளலாம்.
4. பிறகு, ஒரு டம்ளர் பாலை நன்றாக காய்ச்சிக் கொள்ளுங்கள்.
5. அதோடு, மூன்று தேக்கரண்டி ராகி, ஜவ்வரிசி மாவை சிறிது தண்ணீரில் கட்டி இல்லாமல் கரைத்து பாலோடு சேர்த்து கலந்து கொதிக்க விடுங்கள்.
6. இதோடு நாட்டுச்சக்கரை சேர்த்து கலந்து பருகுங்கள்.

2. எள் மற்றும் பாதாம்

Pexels

எள்ளில் சுண்ணாம்பு சத்து மிகவும் அதிகமாக இருக்கிறது. அதனால், எலும்பு தேய்மானத்தை சரி செய்யும் வல்லமை கொண்டது. மூட்டு வலி, மூட்டில் வீக்கம் ஆகியவற்றையும் நிவர்த்தி செய்யும். மற்றும் பல சத்துக்களும் எள்ளில் இருப்பதால், அது பல நோய்களுக்கு நிவாரணி ஆகும். 

தேவையான பொருட்கள்:

எள் - 3 தேக்கரண்டி
பாதாம் - 3

செய்முறை:

1.எள்ளை மிதமான சூட்டில் லேசாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 
2.அதோடு பாதாம் பருப்பையும் சேர்த்து அரைத்து போடி செய்து கொள்ளுங்கள். 
3. இந்த பொடியை, ஒரு க்ளாஸ் பாலில், நடுச்சக்கரையோடு சேர்த்துக் கலந்து பருகலாம்.

 

3. வெந்தயம், சீரகம், மிளகு

Pexels

இந்த மூன்று பொருட்களிலும் ஆன்டி-இன்பிலமேடரி (anti-inflammatory) தன்மை நிறைந்துள்ளது ஏன்னெனில், இவற்றில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் இருக்கிறது. இந்த வெந்தய சூரணம் மூட்டுவலிக்கு மிகவும் ஏற்றது.

தேவையான பொருட்கள்:

வெந்தயம் - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - ½ தேக்கரண்டி

செய்முறை:

இவை மூன்றையும் சேர்த்து பொடி செய்து கொள்ளுங்கள். வெறும் வயிற்றில் இரண்டு தேக்கரண்டி வெந்தய சூரணத்தை சுடு தண்ணீரில் கலந்து காலையிலும், மாலையிலும் பருகலாம்.

4. கொள்ளுப்பருப்பு

Pexels

இடுப்பு வலி, முதுகு வலி ஆகியவற்றை சரி செய்ய கொள்ளுப்பருப்பை உட்கொள்ளுங்கள். 

1. கொள்ளுப்பருப்பை ஊற வைத்து, சுண்டல் போல வேகவைத்து உண்ணலாம். 
2. அல்லது வேக வைத்த பருப்பை சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாய், உப்பு சேர்த்து சட்னியாக அரைத்து சாதத்தில் நல்லெண்ணெய்யோடு சேர்த்து சாப்பிடலாம்.
3. மேலும், கொள்ளுப்பருப்பை பயன்படுத்தி கொள்ளு ரசம் செய்து சாப்பிடலாம்.

5. முருங்கைக் கீரை

Pexels

முதுகெலும்பில் உள்ள டிஸ்க்(L4, L5 Disc Prolapse) தொங்கி வலி ஏற்படுத்தும். இந்த வலியில் இருந்தும் மற்றும் இடுப்பு வலியில் இருந்தும் நிரந்திர தீர்வு காண முருங்கைகீரை கஞ்சி செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்:

முருங்கைகீரை - 3 கட்டு
பச்சரிசி - 1 கிலோ
மிளகு - 50 கிராம்
பாசிப்பருப்பு - 200 கிராம்
சுக்கு மற்றும் ஏலக்காய் - சிறிது

செய்முறை:

1. முருங்கை கீரையின் இலைகளைப் பறித்து நன்றாக சுத்தம் செய்து, அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
2. பிறகு, பச்சரிசியோடு, இந்த அரைத்த முருங்கை கீரை, மிளகு, பாசிப்பருப்பு, சுக்கு சேர்த்து வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும்.
3. இந்த கலந்த அரிசியை குருனைகளாக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
4. தினமும், காலையிலும் மாலையிலும் இந்த குருனை அரிசியை பயன்படுத்தி, தண்ணீர் விட்டு கஞ்சியாக காய்ச்சி ஒரு மண்டலம் விடாமல் குடிக்க வேண்டும்.

மேலே சொன்ன பொருட்கள் தவிர, பொதுவாக பால், மோர், தயிர் ஆகியவற்றில் மட்டும்தான் கால்சியம் சத்து இருக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால், அன்றாடம் நாம் பார்க்கும் பொருட்களில் கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது. அவை,

1. சோயா
2. பாதாம்
3. நிலக்கடலை
4. வெண்டைக்காய்
5. மீன்
6. முட்டைகோஸ்
7. அத்திப்பழம்

இப்படி, உணவில் மட்டும் மாற்றம் ஏற்படுத்தினால் போதாது. உடல் பருமனாக இருந்தால், அதைக் குறைக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டினால் வலி வந்தால், நல்ல ஆரோக்கியமான உணவை உண்டு சரி செய்ய வேண்டும். 

 

மேலும் படிக்க - தும்மல், இருமல் போன்ற இயற்கை உந்துதல்களை அடக்கினால் வரும் துன்பங்களும் தீர்வுகளும்

பட ஆதாரம்  - Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!