சீயக்காய் என்பது நம் கூந்தலையும், தலைச்சருமத்தையும் பராமரிக்க காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் பொருட்களில் ஒன்றாகும். பல நூற்றாண்டுகளாக ஆசிய துணைக்கண்டத்தில் புகழ்பெற்று விளங்கும் இது மற்ற கண்டங்களிலும் கூட பரவியுள்ளது.
அசாசியா கோன்சின்னா மரத்தின் காயில் இருந்து செய்யப்படும் சீயக்காய் கூந்தலுக்கு சிறந்த க்ளின்ஸராக விளங்கும். எங்கு வேண்டுமானாலும் வருடம் முழுவதும் எளிதில் கிடைக்கக்கூடியவை தான் சீயக்காய் தூள். இது மிகவும் மலிவான ஒன்றும் கூட. ஆனால் இவற்றை கடையில் வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டிலேயே செய்து பயன்படுத்துவது நல்லது.
அடர்ந்த மேக்கப்பை எளிதில் நீக்கும் ஜோஜோபா எண்ணெய் மேக்கப் ரிமூவர்! தயாரிப்பது எப்படி?
பேஷியலின் வகைகள் மற்றும் இயற்கை பொருட்களை கொண்டு வீட்டிலேயே பேஷியல் செய்யும் வழிமுறைகள்!
இப்போது வீட்டிலேயே சீயக்காய் (shikakai) தூள் அரைக்க என்னனென்ன பொருட்கள் சேர்க்க வேண்டும் என்பது குறித்து காண்போம்.
தேவையான பொருட்கள் :
சீயக்காய் - 1 கிலோ,
செம்பருத்திப்பூ- 50 பூ,
வெந்தயம் - 100 கிராம்,
பூலாங்கிழங்கு – 100 கிராம்,
எலுமிச்சை தோல் - 25,
பயத்தம் பருப்பு - 1/4 கிலோ,
காய்ந்த நெல்லி - 100 கிராம்,
கார்போக அரிசி - 100 கிராம்,
பூவந்திக் கொட்டை - 100 கிராம்,
செம்பருத்தி பூ, இலை - 50 கிராம்,
ஆவாரம்பூ - 100 கிராம்,
மரிக்கொழுந்து - 100 கிராம்.
மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் வெயிலில் 2 நாட்கள் வைத்து நன்றாக காய்ந்த பின் மிஷினில் கொடுத்து அரைத்து கொள்ள வேண்டும். தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து சீயக்காய் குழைத்து 15 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் கூந்தல் மிருதுவாக இருக்கும்.
த்ரிஷாவின் அசத்தலான பாரம்பரிய லுக்கை பெறுவதற்கான 10 படிகள் மற்றும் யுத்திகள்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!