மனதை கவர்ந்த கவிதைகள் மற்றும் பொன்மொழிகள்

மனதை கவர்ந்த கவிதைகள் மற்றும் பொன்மொழிகள்

ஒவ்வொரு உறவுக்கும் ஒவ்வொரு உணர்வுகள் இருக்கும். அவற்றை வெளிபடுத்தும் விதமும் வேறுபடும். எனினும், அதனை சொல்லும் வகையில் அந்த உணர்வின் உண்மைத்தன்மையும், மனதில் தோன்றும் எண்ணங்களின் வெளிப்பாடும் மற்றவர்களுக்கு புரிய வரும் என்றால், அதில் சந்தேகம் வேண்டாம்.

உங்கள் மனதில் தோன்றிய காதல், பிரிவு, நட்பு போன்ற உணர்வுகளை வழிபடுத்தும் விதத்தில் நீங்கள் நேசிப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ள இங்கே சில சுவாரசியமான மற்றும் மனதை தொட்ட பொன்மொழிகளும் (heart touching quotes), கவிதைகளும், உங்களுக்காக!

இந்த தொகுப்பு நிச்சயம் உங்கள் மனதை கவரும் என்று நம்புகின்றோம்!

Table of Contents

  மனதை கவர்ந்த காதல் பொன்மொழிகள் (Heart touching love quotes)

  Pixabay

  1. யோசித்து வாழ ஆயிரம் உறவுகள் இருந்தாலும்,
  நேசித்து வாழ ஒரு உயிர் இருந்தால் போதும், உன்னைப் போல!

  2. கனவுகளில் உன்னை நிரப்பி நான் கண்டுவந்த காட்சிகளை
  நிஜமாக்கி செல்ல நீ வேண்டும் என்னருகில்!

  3. அவள் படிக்கும் புத்தகத்தின் எழுத்துகளை பிறக்க ஆசை
  அப்போதாவது அவள் பார்வை என் மீது பட்டு
  அவளின் உதடுகள் எண்ணை உச்சரிக்குமே என்று!

  4. பெண்ணே...
  உனது வுருவத்தை என் கண்களால் கைது செய்து
  இதயத்தில் பதுக்கி வைத்து, நினைவுகளிலே உன்னை
  தினந்தோறும் இரசிக்கின்றேன்!

  5. மனதை தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும் என்பதால்
  மறுபடி மறுபடி உன்னைத் தேடி வந்தேன்!!

  6. இத்தனை நாட்களாய் நான் நடந்த பாதை இன்று
  உன்னுடன் நடக்கும் போது தான் எவ்வளவு அழகு என்று தெரிந்து கொண்டேன்!

  7. அனைவரும் இருந்தும் நான் ஒரு அனாதை போல் உணருகின்றேன்...
  ஏனென்றால் என் உண்மையான அன்பை உன்னிடத்தில் இழந்துவிட்டதால்!!

  8. எழுதிய கவிதைகள் அனைத்தும் காத்திருப்பது
  விர்ப்பனைக்காக அல்ல விலையற்ற உன் ஒரு சில பார்வைக்காக!

  9. உன்னை பார்த்த தருணத்தில் மகிழ்ந்ததை விட உன்னை பார்த்ததை நினைத்து மகிழ்ந்ததே அதிகம்!!

  10. காதலியே.....
  நீ என் தேடலின் முடிவென்று நினைத்திருந்தேன்
  என் தவிப்பின் துவக்கமென்று அறியவைத்தாய்!!

  11. அன்பே உன்னை காணும் வரை வாழ்க்கை பிடித்தது!!
  ஆனால், உன்னை கண்ட பிறகு தான் வாழ பிடித்தது!!!

  12. யாரை நீ வெறுத்தாலும் உன்னை மட்டுமாவது நேசிக்க கற்றுக்கொள் ஏனெனில் இந்த உலகிலேயே மிக மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பது தான்...!

  13. அன்பின் எதிர்பார்ப்பு எப்போதும் அன்பாக தான் இருக்கும்...
  அதற்கு ஏமாற தெரியுமே தவிர ஏமாற்றத் தெரியாது....

  மனம் கவர்ந்த நண்பருக்கான பொன்மொழிகள் (Heart touching friendship quotes)

  14. காரணம் இல்லாமல் களைந்து போக இது கனவும் இல்லை
  காரணம் சொல்லி பிரிந்து போக இது காதலும் இல்லை
  உயிர் உள்ளவரை தொடரும் உண்மையான நட்பு!

  15. “உயிரின் சுவாசம் மூச்சு
  கண்களின் சுவாசம் கனவு
  இதயத்தின் சுவாசம் துடிப்பு
  நாக்கின் சுவாசம் பேச்சு
  என் நட்பின் சுவாசம் நீ”

  16. நட்பின் துரோகம் கத்தியை போன்றது
  நண்பனை குத்தும் போது, சுகமாகத்தான் இருக்கும்
  ஆனால் தன்னை குத்தும் போதுதான் கொடூரமாக வலிக்கும்!

  17. நடப்பை விட ஆழமானது இந்த உலகத்தில் வேறு எதுவும் இருக்காது!
  18.நண்பன் இருந்தால் வாழ்வில் துன்பம் தெரியாது
  நண்பன் பிரிந்தால் வாழ்வில் இன்பம் தெரியாது
  நண்பனை மறக்காதே....

  19. உன் நட்பு என்னும் சிறையில் சிக்கிக் கொண்டேன்
  தவறுகள் செய்தால் தண்டித்து விடு
  அனால் விடுதலை மட்டும் செய்து விடாதே!

  20. உயிரின் சுவாசம் மூச்சு
  கண்களின் சுவாசம் கனவு
  இதயத்தின் சுவாசம் துடிப்பு
  அன்பின் சுவாசம் நம் நட்பு !

  21. நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது, ஆனால்
  ஒரு நல்ல நண்பனின் மௌனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
  அதனால் எப்போதும் என்னுடன் தொடர்பில் இரு
  இப்படிக்கு, உண்மையான நண்பன்!

  22. உரிமை இல்லாத உறவும்
  உண்மை இல்லாத அன்பும்
  நேர்மை  இல்லாத நட்பும்
  நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும் என்றும் நிரந்தரமில்லை!

  23. உயிரின் சுவாசம் மூச்சு
  கண்களின் சுவாசம் கனவு
  இதயத்தின் சுவாசம் துடிப்பு
  அன்பின் சுவாசம் நம் நட்பு!

  24. உங்கள் தவறை நியாப்படுத்தும் நண்பனை விடவும்
  சுட்டிக்காட்டி திருத்தும் நண்பன் தான் சிறந்தவன்!

  25. இதயத்தை துளைக்கும் காதலை விட
  இதயங்களை இணைக்கும் நட்பை நான் அதிகம் நேசிக்கிறேன்!

  26. காதல் – நாம் யார் என்பதை மறக்க வைக்கும்
  நட்பு – நாம் யார் என்பதை புரிய வைக்கும்

  27. நூறு நண்பர்களை தேடுவதை விட,
  நூறு ஆண்டு நிலைத்து நிற்கும் ஒரு நண்பனை தேடு
  உன்னை உச்சத்தில் வைக்கும் அந்த நட்பு...

  மனதை தொட்ட வாட்ஸ் ஆப் பொன்மொழிகள்(Heart touching whatsapp status)

  Pixabay

  28. நிலவுக்கும் ஒரு நாள் விடுதலையுண்டு
  உன் நினைவுக்கு ஒருபோதும் விடுதலையில்லை...

  29. வார்த்தைகள் தொலைத்த ஊமை நான்...
  ஏனென்னில், என் வார்த்தைகளை கொளுசிடமும்
  என் மனதை உன்னிடமும் தொலைத்து விட்டேன்!

  30. இனி என் உயிரே பிரிந்தாலும் சரி
  என் காதலை நீ ஏற்கும் வரை உன்னை துரத்துவேன் உன்
  சுகமான இம்சையாக!

  31. உயிரில்லா ஒன்றுக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும்
  உயிருள்ள ஒருவருக்கு கிடைப்பதில்லை!
  உறவு எதுவானாலும் “பணம்” என்று ஒன்றில்லை என்றால்
  மதிப்பில்லை!

  32. உண்மையாக நேசிப்பவர்கள் மீண்டும் மீண்டும் கிடைப்பதில்லை,
  இனிமேல் கிடைப்பவர்கள் உன்னைப்போல் நேசிப்பார்களா என்று தெரியவில்லை!

  33. அதிகமான அன்பு இருந்தால், அன்பானவர்களுக்கு
  தொல்லை கொடுக்கத்தான் தோன்றும்
  அதுதான் காதல்!

  34. சில நேரம் உன் மௌனம் பிடிக்கும்
  சில நேரம் உன் கோபம் ரொம்ப பிடிக்கும்
  உன் நல்ல குணம் பிடிக்கும், உன் கொஞ்சல் பிடிக்கும்
  நீ எனேக்கென்று சொல்லும் உன் வார்த்தைகளை பிடிக்கும்
  எண்ணை எனக்கே உணர வைத்த உன் அன்பை பிடிக்கும்!

  35. ஒரு நாள் நீ நானாக வேண்டும்..
  நான் நீயாக வேண்டும்...
  அன்று உனக்கு புரியும் நான் படும் வேதனை...

  36. நீ பேசாமல் இருக்கையில் எனக்கு புரிந்தது...
  உன் மௌனமும் எண்ணை அழகாய் கொள்ளும் என்று....

  37. நினைவுகள் எப்போதும் வித்தியாசமானவை
  சில நேரங்களில் அழுத நாட்களை நினைத்து சிரிக்க வைக்கும்
  சிரித்த நாட்களை நினைத்து அழ வைக்கும்...

  38. உன்னை பார்த்த தருணத்தில் மகிழ்ந்ததை விட
  உன்னை பார்த்ததை நினைத்து மகிழ்ந்ததே அதிகம்!

  39. காதலியே, நீ என் தேடலின் முடிவென்று நினைத்திருந்தேன்
  என் தவிப்பின் துவக்கமென்று அறியவைத்தாய்!!

  40. ஒவ்வொரு இதயங்களும் ஓர் இதயத்தை நேசித்து கொண்டுதான் இருக்கும்
  அந்த இதயத்தை நினைத்து!

  41. உண்மையான நேசம் இருந்தால்...
  வார்த்தைகள் தேவை இல்லை, நினைவுகள் கூட பேசும்”

  42. உன்னில் எண்ணை கண்டதால் என்னவள்
  நீதானோ என்று நினைத்து என் கண்கள் உன்னை தேடின...

  43. ஒவ்வொரு முறையும் பிரிந்து சேர்வது
  உடலும் உயிரும் மட்டுமல்ல
  நம் காதல் ஜென்மங்களும் தான்...

  44. நல்ல நண்பனை அடைய விரும்பினால்
  நீயும் நல்லவனாக இருக்க வேண்டும்!

  45. அன்பான ஒருவரிடம் தோற்றுப்பாருங்கள்,
  வெற்றியை விட தோல்வி எத்தனை சுகம் என்று தெரியும்!

  46. பிடிவாதத்தில் ஜெயிப்பதை விட
  உன் அன்பிடம் தோற்ப்பதையே விரும்புகிறேன்!

  47. இரவுகள் நம்மை உறங்க வைத்தாலும்
  சில நினைவுகள் நம்மை உறங்க விடுவதில்லை...

  மனதை கவர்ந்த வாழ்க்கை பொன்மொழிகள்(Heart touching life quotes )

  48. நல்ல மனிதன் விவாதத்தில் ஈடுபடுவதில்லை
  விவாதத்தில் ஈடுபட்டு காலத்தை கழிப்பவன்
  நல்ல மனிதனாக இருக்க முடியாது!

  49. வாழ்க்கை பிடிக்கவில்லை என வெறுத்து விடாதீர்கள்
  வாழும் வாழ்க்கைக்கு உங்களை விரும்ப கற்றுகொடுங்கள்!

  50. “சிலருக்கு புரியவைக்கும் முயற்சியின் பெரும் தோல்விகளே
  நம் வெறுப்புக்கு காரணம் ஆகின்றன”

  51. உரிமை இல்லாத உறவும்
  உண்மை இல்லாத அன்பும்
  நேர்மை இல்லாத நட்பும்
  நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும் என்றும் நிரந்தரமில்லை!

  52. புதிது ஒன்று வந்து விட்டால்
  பழசுக்கு மரியாதை கிடையாது, அது
  உறவாக இருந்தாலும் சரி
  பொருளாக இருந்தாலும் சரி!

  53. உங்களை நேசிப்பவர்களிடம், பொய் சொல்லும் போது,
  அதை அவர்கள் நம்பிவிடும் முட்டாள்கள் என நினைக்காதீர்கள்!
  உங்களை காயப்படுத்தக் கூடாது என்பதற்காக,
  தங்களது உணர்சிகளை மறைத்துக் கொள்கிறார்கள்!

  54. துன்பங்கள் மட்டுமே நிறைந்த என் வாழ்வில்
  கிடைத்த முதல் சந்தோஷம் உன் அன்பு...

  55. மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது.
  எண்ணங்களை மாற்றிக் கொள்ள முடியாதவர்களால் வேறு எதையும்
  மாற்ற முடியாது!

  56. நான் ஒரு கண்ணாடி
  எண்ணை பார்த்து நீ சிரித்தாள் நானும் சிரிப்பேன்,
  நீ அழுதால்,நானும் அழுவேன், ஆனால்...
  நீ அடித்தால் நான் அடிக்க மாட்டேன்...

  57. வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டுமென்றால் உன்னை நேசி,
  சந்தோஷமே வாழ்க்கையாக வேண்டுமென்றால் உன்னை நேசிப்பவரை உண்மையாக நேசி!

  58. சொல்லாமல் கொள்ளாமல் தழுவிச்செல்லும் தென்றலைப் போல்
  மனதை வருடிச் செல்கிறது சில நினைவுகள்..

  59. இன்னாரை போல் வாழ வேண்டும் என்று நாம் நினைப்பதை விட
  நம்மை போல் வாழ வேண்டும் என்று பிறர் என்னும் அளவிற்கு நாம் வாழ்ந்து காட்டுவதே சிறப்பு!

  60. உரிமையில்லாதவரிடம் நீ எதிர்பார்ப்பு வைத்தால்
  இறுதியில் முஞ்சுவது வலியும், ஏமாற்றமுமே!!

  61. எல்லோர் இதயத்திலும் காயங்கள் உண்டு..
  அதை வெளிபடுத்தும் விதம் தான் வித்தியாசம்..
  சிலர் கண்ணீரால்..
  சிலர் புன்னகையால்...

  62. அன்புக்கும் தோல்வியுண்டு
  மதிப்பு தெரியாதவரிடம் அதை காட்டும் போது...

  63. தன் சோகங்களை பகிர்வதற்கும்
  தன் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு துணை தேவைப்படுகிறது, வாழ்க்கையில்...

  64. உன்னிடம் பேச நினைத்தேன் வார்த்தை மௌனமானது
  உன்னிடம் பேசாமல் இருந்தேன் வாழ்வே மௌனமானது!

  65. உண்மையான அன்பை சொல்லி புரிய வைக்க முடியாது,
  அந்த அன்புக்கு உரியவர்கள் மட்டுமே உணர முடியும்!

  66. சிக்கல்கள் என்பவை ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை,
  அருகில் பெரிதாகத் தெரியும்

  அவற்றைக் கடந்து சென்றால் அவை சிறிதாகி விடும்

  இதுதான் வாழ்க்கை...

  67. எனக்கும் நிலாவுக்கும் சிறு வித்யாசம் தான்
  அது அனாதையாக விண்ணில், நான் மண்ணில்!!

   

  காதல் பிரிவிற்கான பொன்மொழிகள்(Breakup heart touching quotes)

  Shutterstock

  68. நெருக்கமானவர்கள் பிரியும் போது தான் தெரியும்
  உயிர் பிரியும் வலி என்னவென்று!

  69. காலமெல்லாம் உன்னோடு வாழ துடிக்கும் என் இதயத்தை நீ
  புரிந்து கொள்ளவில்லை..
  காலம் உனக்கு உணர்த்தும் என் காதலை
  நீ இல்லை என்று போனாலும் உனக்காக நான் வாழ்வேன்!

  70. இனி பார்க்க முடியாது பேச முடியாது என்று சொல்லும் அந்த தருணத்தில் தான்
  ஆண்களின் காதல் ஆரம்பிகிறது, பெண்களின் காதல் முடிவடைகிறது!

  71. வலிக்கின்ற இதயத்தை உற்றுப் பார்க்காதீர்கள்,
  சற்று உணர்ந்து பாருங்கள் அபோது தெரியும்
  அதன் வலியின் வலி..!

  72.என் இதயம் துடிகிறதோ இல்லையோ!
  ஆனால் நன்றாக நடிக்கிறது, உன்னை மறந்து விட்டேன் என்று!

  73. ரசித்து பார்த்த என்னையே வெறுப்பாய் பார்க்கச் செய்தது..
  நீ தொக்கி எரிந்தும் மீதமிருக்கும் உன்னுள் வாழ்ந்த என் காதல்...

  74. உன் காதலியை உன் குழந்தையாய் பாரு
  அப்போது தான் அவள் தரும் வழிகளை தாங்க வசதியாய் இருக்கும்!

  75. அழகாய் அசைந்தாடும் கடல் அலைகள்...
  அதில் உன் நினைவுகளை எண்ணி அழுதாய் வழிந்திடும் என் கண்ணீர் துளிகள்!!

  76. அன்பே நீயின்றி வாழ எனக்கு பழகி போனது..
  ஆனால் உன் நினைவின்றி வாழ்ந்தால் என் இதயம் எண்ணை விட்டு விலகி போகிறதே..!

  77. என் பயணமோ வெகு தொலைவு
  என் வசம் உள்ளது அவளின் நினைவு
  முப்பொழுதும் உன்னை பற்றியே கனவு
  அவளோ எனக்கு தொடுத்து விட்டால் சிறு பிரிவு
  எப்போது திசை தெரியாமல் நிற்கிறதே என் மனது...

  78. உன்னை மறக்க நினைத்து எண்ணை நினைக்க மறக்கிறேன்..
  எதற்கு எண்ணை காதலித்தாய்
  எதற்கு எண்ணை கைவிட்டாய்
  சொல்லடா ஒரு பதிலை
  வாழ்ந்து விட்டு போகிறேன் இந்த நரகத்தில்
  உனக்காக அல்ல என் காதலுக்காக!

  79. நான் இல்லாத தனிமைகள் ஒரு போதும் உன்னைத் தாக்கவில்லை என்றால்,
  நான் உன் நினைவுகளில் இல்லையென்று அர்த்தப்படும்....

  80. வலிக்கின்ற இதயத்தை உற்றுப் பார்க்காதீர்கள்
  சற்று உணர்ந்து பாருங்கள்
  அப்போது தெரியும் அதன் வலியின் வலி...

  81. அலைகள் கரையை தொட்டு கடப்பது போல்
  உன் நினைவுகள் எண்ணை விட்டு கடப்பதில்லையே
  அது ஏனோ!!

  82. நீ யாருக்காக வாழ்கிறாயோ, அவருக்காக அனைத்தையும் விட்டுக் கொடு
  உனக்காக யார் வாழ்கிறாரோ அவரை யாருக்காகவும் விட்டு கொடுக்காதே!

  83. வாழ்க்கையில் மிகப்பெரிய கொடுமை
  நாமாகவே கற்பனை செய்து இன்னொருவரின் மேல் அளவு கடந்த அன்பை வைப்பது!!

  84. எல்லோர் இதயத்திலும் காயங்கள் உண்டு...
  அதை வெளிபடுத்தும் விதம் தான் வித்யாசம்...
  சிலர் கண்ணீரால்...
  சிலர் புன்னகையால்...

  85. “உண்மையான நேரம் இருந்தால், வார்த்தைகள் கூட தேவை இல்லை
  நினைவுகளும் பேசும்”

  86. காதலின் தோல்வியை விட கொடுமையான நரகம்
  வேறேதுமில்லை!

  87. பிரியாத நினைவு – எஞ்சில் பிரியமுடன் திரிகிறதே
  நீ சொன்றாலும் செல்லாதே – உன் செல்ல நினைவுகள்!

  மனதை கவர்ந்த பெற்றோர்களுக்கான பொன்மொழிகள்(Heart touching quotes for parents)

  88. இரவும் பகலும் இமை மூடாமல் என் வாழ்க்கையைப் பற்றி
  எண்ணிக் கொண்டிருக்கும் என் அன்பு தாய் தந்தைக்கு
  என்றும் கடமைப்பட்டு வாழ்வேன்!

  89. என் முகம் பார்க்கும் முன்பே என் குரல் கேட்கும் முன்பே
  என் குணம் அறியும் முன்பே எண்ணை, நேசித்த ஓர் இதயம் – அம்மா!

  90. பெற்றோர்களுக்காக ஏதாவதொன்றை விட்டுச் செல்லுங்கள்
  பெற்றோர்களை எதாவதொன்றிர்காக விட்டுச் செலாதீர்கள்!

  91. நீ தேடி சென்றாலும் விலகி செல்வது மற்றவர்கள்
  நீ விலகி சென்றாலும் உன்னைத் தேடி வருவது பெற்றோர்கள்!

  92. சொந்த காலில் நிற்கும் போது தான் தெரிகின்றது,
  இத்தனை நாள் நம்மை சுமந்து பெற்றவர்களுக்கு எவ்வளவு வலித்திருக்கும் என...

  93. அழகை நேசித்தவன் அறிவை இழக்கிறான்
  பணத்தை நேசித்தவன் பாசத்தை இழக்கிறான்,
  குணத்தை நேசித்தவன் கோபுரமாகிறான்!

  94. என் அன்னையின் கண்ணில் நான் கற்றது அன்பு
  என் தந்தையின் கண்ணில் நான் கற்றது வீரம்
  என் கண்ணில் எனது பெற்றோர் கண்டது மரியாதை!

  95. நாம் நேசிப்பவர்கள் மீது நாம் காட்டும் அன்பு அவர்களுக்கு காவலாக இருக்க வேண்டுமே தவிர
  ஒரு போதும் காயமாக இருக்கக் கூடாது!

  96. உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்
  தாயின் கருவறை!

  97. அன்பு என்ற வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தம் இருப்பினும்
  நான் கண்ட முதல் அர்த்தம் நீதான் – அம்மா!

  98. மூன்றெழுத்துக் கவிதை சொல்லச் சொன்னால்
  முதலில் சொல்வேன், அம்மா என்று....

  99. செய்தது தவறென உணர்ந்து விட்டால் காலில் விழவும் தயங்க மாட்டேன்
  செய்யாத் தவறுக்கு பழி சொன்னால் எந்த உறவானாலும் இழக்க தயங்க மாட்டேன்!!

  100. தாய் என்பவள் பத்து திங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தால்
  தந்தை என்பவன் வாழ்க்கையையே தன் குழந்தைக்காய் தியாகம் செய்தான்!

  101. இவளருகில் தோல் சாயும் போது துன்பத்தின் சுவடுகளும் தொலை தூரம்
  இவள் மடியில் துயிலுறங்கும் போது இதயத்தில் இன்பத்தின் அருவியும் கரைபுரண்டோடும்
  ஒருமுறை உதிக்கும் நம்மை தினம் தினம் சுமக்கும் ஒரே ஜீவன், - அம்மா!

   

  கணவன்/மனைவிக்கான உருக்கமான பொன்மொழிகள்(Heart touching quotes for wife / husband)

  Pixabay

  102. என் இதயத்தைப் பிரித்துக் கொண்டு
  நித்தம் நித்தம் எண்ணை கொல்லும் இதயக் கள்வனே,
  விழிகள் இருந்தும் பார்வையற்றவளாக இருளில் தவிக்கிறேன்
  உன்னை மட்டுமே காண என் இமைகள் இமைக்க வேண்டும் என்பதற்காக!

  103. எப்போதும் என்னோடு நீ வேண்டும்!
  துக்கத்தில் தோழனாய்..
  இன்பத்தில் கணவனை...
  இறுதிவரை எனக்கு காவலனாய் இருக்க வேண்டும் அன்பே!

  104. தவம் இருப்பவர்களுக்கெல்லாம் வரம் கிடைத்து விடுமா என்று தெரியவில்லை
  ஆனால், நீயோ எனக்கு தவமின்றி கிடைத்த வரம்!

  105. நீ இமைக்கும் அழகைக் காண்பதற்காகவே,
  இமைக்காமல் கிடக்கின்றன என் இமைகள்!!

  106. நீ ரோஜாவாக இருந்தால் நான் முள்ளாக இருப்பேன்
  உன்னை காயப்படுத்த அல்ல
  உன்னை யாரும் காயப்படுத்தாமல் இருக்க!

  107. மனைவி என்பவள் உன்னில் ஒரு பாதி,
  உன் உயிரில் ஒரு பாதி,
  உன் உடலில் ஒரு பாதி
  அப்படிப்பட்ட மனைவியிடம் கொஞ்சம் ஈகோவை மறக்க பழகுங்கள்...

  108. இதயத்தின் மொழி துடிப்பென்றால்...
  நான் உனக்காக துடிப்பதை..
  உலகின் வேறு எந்த மொழியாலும் உனக்கு விளக்கிட முடியாது...

  109. இத்தனை நாட்களாய் நான் நடந்த பாதை
  இன்று உன்னுடன் நடக்கும் போது தான் இவ்வளவு அழகு என்று
  தெரிந்து கொண்டேன்!!!

  110. புரிந்து கொள்ளாத அன்பு எளிதில் பிரிந்து விடும்
  ஆனால்...
  புரிந்து கொண்ட உண்மையான அன்பு எவ்வளவு காயப்பட்டாலும் ஒரு போதும் பிரியாது....

  111. கண்களில் தென்பட்ட அனைத்தும் இதயத்தில் இடம் பிடிப்பதில்லை
  இதயத்தில் இடம்பெற்ற அனைத்தும் அருகில் இருப்பதில்லை
  அதுதான் வாழ்க்கை...

  112. நீ எனக்கு தந்த காயங்களை எண்ணி பார்த்தால் உன்னை உனக்கே பிடிக்காது
  ஆனால், நீ என்னதான் காயங்கள் கொடுத்தாலும், உன்னை தவிர வேறு
  யாரையும் எனக்கு பிடிக்காது...

  113. ஒருவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வரும் போது, இன்னொருவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வந்தால்
  அந்த உறவைவிட இந்த உலகத்தில் பெரிய உறவு இல்லை...

  114. உன்னிடம் மட்டும் எனக்கு சுயநலம் அதிகம்
  உன் அன்புக்கு சொந்தக்காரி நான் மட்டும் என்பதில்!

  115. நீ எனக்கு சொந்தம் என்பதை விட
  நீ எனக்கு மட்டும் தான் சொந்தம் என்ற வார்த்தையிலேயே உயிர் வாழ்கிறேன்!

   

  மேலும் படிக்க - மனதை ஊக்கவிக்கும், தன்னம்பிக்கைத் தரும் பொன்மொழிகள்

  மேலும் படிக்க - உங்கள் அன்பானவர்களுடன் பகிர இனிய இரவு வணக்கங்கள்!

  பட ஆதாரம்  - Shutterstock 

  மேலும் வாசிக்க -

  Heart Touching Status in Hindi

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!