ஆடை சுதந்திரம் என்றால் என்ன? மீண்டும் பிக் பாஸ் போட்டியாளர்களை விமர்சிக்கும் மதுமிதா!

ஆடை சுதந்திரம் என்றால் என்ன? மீண்டும் பிக் பாஸ் போட்டியாளர்களை விமர்சிக்கும் மதுமிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசன் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி 4 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இன்னும் ஒரு தினத்தில் போட்டியில் வெற்றி பெற்றது யார் என்பது தெரிந்துவிடும் என்பதால் ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாக நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார். ஆனால் நடைபெற்ற பிரச்சனைகள் குறித்து ஒளிபரப்பாமல் மதுமிதா வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து டாஸ்க்குக்கு பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார். அவரின் இந்த செயல் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதி மீறியது என்பதால் நிகழ்ச்சியை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார் என கமலஹாசன் அறிவித்தார்.

twitter

இதையடுத்து விஜய் டிவி நிர்வாகம் நடிகை மதுமிதா சம்பள பாக்கியை கேட்டு தற்கொலை மிரட்டல் விடுப்பதாக கடந்த மாதம் ஆகஸ்ட் 21 ம் தேதி போலீசில் புகாரளித்தது. இந்த புகாருக்கு மறுத்து தெரிவித்த மதுமிதா விஜய் டிவி நிர்வாகம் மீது மதுமிதா காவல்நிலையத்தில் தபால் மூலமாக புகார் அளித்துள்ளார். 

அதில் ஹலோ ஆப் டாஸ்க்கின் போது சக போட்டியாளர்கள் தன்னைக் கொடுமைப்படுத்தியதை தெரிவித்திருந்தார். மேலும் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த மதுமிதா, பிக் பாஸ் வீட்டில் சகா போட்டியாளர்கள் என்னை துன்புறுத்தினர். நான் தற்கொலை செய்ய முயற்ற போது கூட சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர வேறு யாரும் என்னை காப்பாற்ற முன்வரவில்லை என கூறினார். 

மேலும் பிக்பாஸ் வீட்டில் மாலை நேரங்களில் பெண் போட்டியாளர்கள் உள்ளாடை கூட அணியாமல் மிகவும் மெல்லிய உடை அணிந்து உலா வந்ததாகவும் குற்றம் சாட்டினார். பிக்பாஸ் வீட்டில் மிகவும் மோசமாக அபிராமி நடந்து கொண்டார் என்றும் தெரிவித்திருந்தார். மதுமிதாவின் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

twitter

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அபிராமி ப்ளீஸ் யாராவது அவர்களுக்கு நேர்கொண்ட பார்வை படத்திற்கான டிக்கெட்டைக் கொடுங்கள் என்று தெரிவித்திருந்தார்.சக போட்டியாளர்களின் ஆடை பற்றி மோசமாக விமர்சித்திருக்கும் அவர்களுக்கு ஒரு கேள்வியும் வைத்திருக்கிறேன். 

அதாவது உங்களை உயர்த்திக் காண்பிக்க ஏன் மத்தவங்களை அசிங்கப்படுத்துறீங்க என்றும் அபிராமி பதிலடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஆடை குறித்த பிரச்சனையை மதுமிதா எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஆடை விவகாரத்தில் எனக்கு நியமாண முடிவுகளை எடுக்க இரவுகள் நீள்கிறது. 

ஆடை சுதந்திரம் என்றால் என்ன? நாம் நினைத்த உடைகளை எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியுமா? நாம் அணியும் உடை மற்றவர்களளை பாதிக்குமா? 4? உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் என தெரிவித்துள்ளார். மதுமிதாவின் இந்த கேள்விக்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவுகள் மற்றும் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளனர். 

twitter

பெரும்பாலான பதிவுகள் மதுமிதாவுக்கு ஆதரவாகவே உள்ளது. அதில் நாம் அணியும் ஆடையே நமது மரியாதையை தீர்மானிக்கிறது. ஆடை குறைந்தால் நம்முடைய மரியாதையும் குறையும்.நமக்கு பிடித்த ஆடையை அணிய முழு சுதந்திரம் உண்டு ஆனால் அது ஆபாசமாக இருக்கக்கூடாது என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர். 

மேலும் 8 பேர் எப்படி ragging பண்ணுவாங்க என்று கேட்பவர்களுக்கு இந்த video சமர்பணம் என வி ஆர் தி பாய்ஸ் குழுவினர் மதுமிதாவுடன் சண்டை போடும் வீடியோவையும் அவர் ஷேர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. கண்டனத்திற்கு மிக தகுதியானவர்கள் இவர்கள் என லாஸ்லியா, கவின் உள்ளிட்டோரை மதுமிதா குறிப்பிட்டுள்ளார்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம் , இந்தி , தமிழ் , தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shop ல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!