மன அழுத்தத்தை குறைத்து புத்துணர்ச்சி அளிக்கும் இயற்கை முறையிலான மிதக்கும் சிகிச்சை!

மன அழுத்தத்தை குறைத்து புத்துணர்ச்சி அளிக்கும் இயற்கை முறையிலான மிதக்கும் சிகிச்சை!

மன அழுத்தத்தைப் போக்க புதுப்புது சிகிச்சைகளை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வரிசையில் புதிதாக வந்துள்ளது மிதக்கும் சிகிச்சை (Flotation therapy). புதுமையான குளியல் மூலம் உங்கள் மன அழுத்தத்தை காற்றில் மிதக்கச் செய்கிறது இந்த சிகிச்சை.

வாரம் முழுவதும் பணிச்சுமையால் அவதிப்படுபவர்கள் வார இறுதி நாட்களில் இந்த சிகிச்சையை எடுத்து கொள்வதால் மன அழுத்தம் குறைந்து நிம்மதியை தருகிறது. மும்பை, கல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட பகுதியில் பிரபலமான இந்த சிகிச்சை தற்போது சென்னையிலும் பிரபலமாகியுள்ளது. 

twitter

மிதக்கும் சிகிச்சை உருவான கதை!

அமெரிக்க மருத்துவரும், நரம்பியல் விஞ்ஞானியுமான டாக்டர் ஜான் லில்லி 1950ம் ஆண்டு இந்த சிகிச்சையை கண்டுபிடித்துள்ளார். ஆனால் தற்போது தான் இந்த சிகிச்சை பிரபலமாகி வருகிறது. 

தூண்டுதலின் விளைவுகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமையத்தில் மனிதனின் ஐம்புலன்களைக் குறைக்கக்கூடிய ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழலை உருவாக்குவதே அவரது யோசனையாக இருந்தது. 

ஆஹா! வேண்டாத மேக்கப் பொருட்களை வைத்து இத்தனை பயனுள்ள பொருட்களை செய்யலாமா?!

அதன்படி ஒரு அமைதியான இருட்டறையில் சரும வெப்பநிலைக்கு ஈடான சுடுநீரில் மிதப்பதன் மூலம் அதை ஓரளவு அடைய முடியும் என்பதை உணர்ந்தார். அதன் மூலம் மிதவை சிகிச்சையால் மன அழுத்தம் குறையும் என்பது கண்டறியப்பட்டது. 

twitter

மிதக்கும் சிகிச்சை - செயல்படும் விதம்

ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அறையில் ஒரு தொட்டி வைக்கப்பட்டிருக்கும். வெளிச்சம்  மற்றும் சத்தம் துளியும் இல்லாத (Sound and Light Proof) அறையில் இந்த தொட்டியை வைப்பார்கள். 

இந்த தொட்டியில் சுமார் 800 கிலோ எடையுள்ள எப்சம் உப்புகள் அல்லது மெக்னீசியம் சல்ஃபேட் அல்லது கடல் உப்பு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நிரப்ப வேண்டும். இது தண்ணீரை அடர்த்தியாகவும், மிதமாகவும் ஆக்குகிறது. 

சருமம் தாங்கக்கூடிய வெப்ப நிலையில் எந்த ஒரு நறுமணமோ, சுவையோ அற்ற நீரை நிரப்புவார்கள். ஈரப்பதம் நிறைந்த மிதமான காற்று அந்த அறையில் வீசும். இந்த அறை சூழலில் காதில் இயர் ப்ளக் அணிந்து கொண்டு அந்தத் தொட்டியில் படுத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு பிடித்த இசை மற்றும் மெல்லிய விளக்கின ஒளியை பரப்ப விட்டும் படுத்துக் கொள்ளலாம்.

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் & சரி செய்யும் முறைகள்!

உப்பு நீரில் மிதப்பது மூளைப்பகுதியின் கார்டிசோல் அளவுகளில் செயல்பட்டு, மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்கிறது. வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை என்ற இடைவெளிகளில் ஒரு மணிநேர மிதவை சிகிச்சை போதுமானது. 

twitter

 

மேலும் சிகிச்சை நேரத்தில் கழுத்து, தோள்களை தளர்வாக வைத்துக் கொண்டு மூச்சை நன்றாக உள்ளிழுக்க வேண்டும். மூச்சை வெளிவிடும் நேரம் உள்ளிழுக்கும் நேரத்தைவிட இருமடங்காக இருக்க வேண்டும். இந்த சுவாச நுட்பத்தை மேற்கொள்வது சிகிச்சையின் முழுபலனையும் பெற உதவும்.

மிதக்கும் சிகிச்சை - நன்மைகள்

  • மிதக்கும் சிகிச்சை மூளையில் தீட்டா அலைகளைத் தூண்டி மனதை  தியான நிலைக்கு கொண்டு செல்ல உதவுகிறது. 
  • சோரியாசிஸ், முகப்பரு மற்றும் எக்ஸிமா போன்ற சரும பாதிப்புகளை நீக்குகிறது. 
  • உடலின் நீரேற்றத்தை தடுத்து ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.  
  • உப்பு நீரில் படுக்கும்போது லாக்டிக் அமிலத்தை விரைவாக வெளியிட உடலுக்கு உதவுவதால், மூட்டு இணைப்பு தசைகளில் உள்ள புண் மற்றும் சோர்வை நீக்குகிறது. மேலும் வலி நிவாரணத்திற்கும் உதவுகிறது. 
  • எப்சம் உப்புகள் தோல், உச்சந்தலை மற்றும் கூந்தலின் இறுக்கத்தைக் குறைத்து தளர்வடைய செய்கின்றன.
twitter

  • தண்ணீரில் உள்ள மெக்னீசியம் சல்பேட் சருமத்தால் உறிஞ்சப்பட்டு ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு தூக்கத்தின் தரத்தையும், சருமத்தின் பளபளப்பையும் மேம்படுத்துகிறது.
  • மிதக்கும் சிகிச்சை மூலம் தூக்கமின்மை, தசைக்கூட்டு குறைபாடு, உயர் ரத்த அழுத்தம், பதற்றம் மற்றும் தசை மீட்பு போன்ற அறிகுறிகளை சரி செய்ய முடியும் என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • மிதவை சிகிச்சை என்பது ஒரே நேரத்தில் மன அழுத்தத்தை போக்கவும், தசை வலியை நிர்வகிக்கவும், உடலை தளர்வடையச் செய்யவும் உதவும் இயற்கையான வழி என்று லாரேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ப்ரெய்ன் ஆராய்ச்சி நிறுவனம் (LIBR) மற்றும் அமெரிக்காவிலுள்ள ஓஹியோ மாநில பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவித்துள்ளனர். 

சருமத்திற்கு இளமையும், புத்துணர்ச்சியும் தரும் ரோஸ் வாட்டர் : வீட்டிலேயே தயாரிக்கலாம்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!