ஆளி விதையின் நற்பண்புகள், சரும மற்றும் தலைமுடி ஆரோக்கிய பலன்கள்!

ஆளி விதையின் நற்பண்புகள், சரும மற்றும் தலைமுடி ஆரோக்கிய பலன்கள்!

ஆளி விதை(flax Seeds), கேட்பதற்கு சற்று புதுமையாக இருந்தாலும், இன்று இது மிகவும் பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. இதன் பயன்பாடு மக்களிடையே பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது. இது அதிக அளவு ஐரோபிய, ஆசிய நாடுகளில் பயிரடப்படுகின்றது. மஞ்சள் நிறத்திலும், சிவந்த காப்பி நிறத்திலும் இந்த விதை இருக்கும். இதை அதிக அளவு மக்கள் உணவுக்காக பயன்படுத்துவார்கள். இதில் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனுக்கு இணையான பைட்டோஎஸ்ட்ரோஜன்கள், மற்றும் கரையக்கூடிய நார் மற்றும் எண்ணை சத்து நிறைந்துள்ளது. இந்த விதை உணவுக்கு மட்டுமல்லாது, சரும ஆரோக்கியத்திற்கும் தலைமுடி வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகின்றது. நீங்கள் இந்த ஆளி விதையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த தொகுப்பை தொடர்ந்து படியுங்கள். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Table of Contents

  ஆளி விதையை பற்றி சில சுவாரசியமான தகவல்கள்(Facts about flax seed)

  • ஆளி விதையில் ஒமேக கொழுப்பு அமிலம் மற்றும் ஆல்பா-லினோலெனிக் அமிலம் நிறைந்துள்ளது
  • இதை மருத்துவத்திற்கும், உணவிற்கும் 5௦௦௦ ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்
  • இதை குறிப்பாக மல சிக்கல், வயிற்று போக்கு, குடல் பிரச்சனை போன்ற உடல் உபாதைகளுக்கு அதிகம் பயன்படுத்துவார்கள்
  • இதில் நார் சத்து, புரதம், கொழுப்பு மற்றும் மேலும் பல தாது பொருட்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளது
  • இதில் இருக்கும் சத்துக்கள், சர்க்கரை நோய், புற்றுநோய், இருதய பிரச்சனை போன்றவற்றை குணப்படுத்த உதவும்
  • இந்த ஆளி விதையை உணவில் சேர்த்துக் கொள்வதால், சத்துக்கள் உடலில் எளிதாக சார உதவும்
  • இந்த ஆளி விதை சருமத்தில் தோன்றும் சில பிரச்சனைகளைகுணப்படுத்த மிகவும் உதவுகின்றது
  • இது கண்களில் ஏற்படும் சில நோய்களை உணப்படுத்த உதவுகின்றது

  ஆளி விதை சத்துக்களின் விவரம்(Nutritional content of flax seed)

  இரண்டு தேக்கரண்டி ஆளி விதையில் நிறைந்துள்ள சத்துக்கள் பற்றிய விவரத்தை இங்கு காணலாம்;

  • 110 கலோரிகள்
  • 6 கிராம் கார்போஹைட்ரேட்டுகள்
  • 4 கிராம் புரதம்
  • 5 8.5 கிராம் கொழுப்பு
  • 6 கிராம் ஃபைபர்
  • 6 0.6 மில்லிகிராம் மாங்கனீஸ்
  • 4 0.4 மில்லிகிராம் தியாமின்
  • வைட்டமின் பி 1 22 சதவீதம்
  • 80 மில்லிகிராம் மெக்னீசியம்
  • 132 மில்லிகிராம் பாஸ்பரஸ்
  • 0.2 மில்லிகிராம் செம்பு
  • 5 மில்லிகிராம் செலினியம்

  இந்த சத்துக்கள் மட்டுமல்லாது, ஆளி விதையில் வைட்டமின் B6, போலேட், இரும்பு, பொட்டாசியம், ஒமேக 3 கொழுப்பு அமிலம், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் ஜின்க் சத்துக்களும் நிறைந்துள்ளது.

  pixabay

  ஆளி விதைகளால் கிடைக்கும் உடல் நலன்கள்(Health benefits of flax seed)

  ஆளி விதை பல உடல் நலன்களை தருகின்றது. இது உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தி, நலமோடு வாழ உதவுகின்றது. எப்படி இந்த ஆளி விதை உங்கள் உடல் நலனுக்கு உதவுகின்றது என்று இங்கே பார்க்கலாம்

  ஒமேக 3 கொழுப்பு நிறைந்துள்ளது

  அசைவம் சாப்ப்பிடாதவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். இதில் ஒமேக 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இது உடல் நலத்தை அதிகரிக்க பெரிதும் உதவும். குறிப்பாக இருதயத்தில் இருக்கும் இரத்த குழாய்களில் அடைத்திருக்கும் தேவையற்ற கொழுப்பை கரைக்க அல்லது சேராமல் தடுக்க உதவும். மேலும் மேலும் தமனிகளில் வீக்கத்தை குறைந்து கட்டி வளர்ச்சியைக் குறைக்கின்றது. இதன் காரணமாக இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பல மடங்கு குறைகின்றது.

  புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பை குறைக்கும்

  இதில் இருக்கும் ஆக்சிஜனேற்றம் மற்றும் ஈஸ்ட்ரோஜென் பண்புகள். புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பை பெரிய அளவிற்கு குறைகின்றது. மேலும் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகின்றது.

  நார் சத்து நிறைந்துள்ளது

  ஒரு தேக்கரண்டி ஆளி விதையில் 3 கிராம் நார் சத்து நிறைந்துள்ளது, இது 12% அளவை குறிக்கும்/ இதை அனைவரும், மற்றும் அனைத்து வயதினரும் எடுத்துக் கொள்ளும் போது, குடலில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் மல சிக்கல் போன்ற பிரச்சனைகள் குணமாகும். மேலும் ஜீரணத்தை அதிகரித்து, உணவு செரிமானம் ஆகவும் உதவுகின்றது.

  நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்

  உடலுக்குத் தேவை இல்லாத கொழுப்பால் அதிக பிரச்சனைகள் ஏற்படுகின்றது. ஆனால், ஆளி விதை, நல்ல கொழுப்பு உடலில் சேர உதவுகின்றது. மேலும் தேவையற்ற கொழுப்பை உடலில் இருந்து வெளியேற்றவும் உதவுகின்றது. இதன் காரணமாக குறிப்பாக இருதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கலாம்.

  குறைந்த இரத்த அழுத்தத்தை சீர்படுத்த உதவும்

  ஆளி விதை குறைந்த இரத்த அழுத்தத்தை சீர் செய்து, சரியான அளவு வைத்துக் கொள்ள உதவும். இந்த ஆளி விதையை தினமும் குறிப்பிடத்தக்க அளவு உணவில் சேர்த்து எடுத்துக் கொண்டால், சில நாட்களிலேயே நல்ல மாற்றத்தை நீங்கள் உணரலாம்.

  அதிக தரமான புரதம் நிறைந்துள்ளது

  ஆளி விதையில் புரதம் நிறைந்துள்ளது. இதில் இருக்கும் புரதம் அமினோ அமிலங்கள் அர்ஜினைன், அஸ்பார்டிக் அமிலம் மற்றும் குளுட்டமிக் அமிலம் நிறைந்துள்ளதாக உள்ளது. இவை அனைத்தும் உடலில் உள்ள ஹோர்மோன்கள் சீரான அளவு சுரக்கவும், உடல் ஆரோக்கியம் அதிகரிக்கவும் உதவும்.

  இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும்

  இது குறிப்பாக நீரழிவு நோய் இருப்பவர்களுக்கு பெரிதும் உதவும். ஆளி விதையை தினமும் உணவில் எடுத்துக் கொள்ளும் போது, இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக்கும். இதனால் நீரழிவு நோயும் கட்டுபடுத்தப்பட்டு, உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

  பசியை போக்கும்

  ஆளி விதை பசியின்மையை உண்டாக்கி, உணவை அதிகம் எடுத்துக் கொள்ளாமல் இருக்க உதவும். இதன் காரணமாக உடல் எடையும் குறைந்து, சீரான அளவில் இருக்கும். குறிப்பாக இதில் இருக்கும் நார் சத்து அதிக பசி எடுக்காமலும், உண்ணும் உணவு சீராக ஜீரனமாகவும் மற்றும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்.

  பல சத்துக்கள் நிறைந்துள்ளது

  ஆளி விதையை பிற உணவுப் போல தினமும் பயன்படுத்தலாம். இதை இரசம் போலவும் செய்து, சூப் போலவும் செய்து, அல்லது நன்கு வேக வைத்து செய்து சாராகவும் செய்து சாப்பிடலாம். இதை சாலட் செய்யவும் பயன்படுத்துவார்கள். திருடனும், பிற காய் வகைகளுடனும், பயிருடனும் சேர்த்து சாப்பிடலாம். இப்படி உணவில் சேர்த்து சாப்பிட்டால் மேலும் பல பலன்களைப் பெறலாம்.

  இருதய பிரச்சனையை போக்கும்

  ஆளி விதையில் இருக்கும் ஒமேக 3 கொழுப்பு அமிலம், இருதயத்தின் செயல்பாட்டையும், அது சார்ந்த அமைப்புகளையும் சீராக செயல்பட உதவுகின்றது. இதனால் இருதயம் நல்ல ஆரோக்கியத்தோடு செயல்படுகின்றது. மேலும் தினமும் இந்த ஆளி விதையை உணவில் எடுத்துக் கொள்ளும் போது, தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு கிடைகின்றது. இதனால் மேலும் இருதயத்தின் ஆரோக்கியம் அதிகரிகின்றது.

  pixabay

  பெண்களுக்கு ஏற்படும் சூடான ஃப்ளாஷ்களைத் தடுக்க உதவும்

  ஒரு மருத்துவ ஆய்வின் படி, ஆளி விதை ஹாட் ஃப்ளாஷ் என்னும் பிரச்சனையை போக்க உதவுகின்றது. இது குறிப்பாக மாதவிடாய் நிற்கப் போகும் காலகட்டத்தில் பிரச்சனைகள் அதிகரிக்காமல், இருக்க உதவும்.

  மல சிக்கலை போக்கும்

  ஆளி விதையில் கரையும் நார் சத்து அதிகம் உள்ளதால், இது மல சிக்கலை எளிதாக போக்க உதவும். மேலும் குடல் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை போக்கி, ஆரோக்கியத்தைப் பெற உதவும். ஜீரணத்தை சீர் செய்யும்.

  கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கும்

  ஆளி விதையில் இருக்கும் லிக்னன்ஸ் கதிர்வீச்சால் நுரையீரல் பாதிக்கப்படுவதை தடுத்து, உடல் நலத்தை அதிகரிகின்றது. மேலும் வேறு சில நுரையீரல் குறித்த பிரச்சனைகளும் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது.

  நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும்

  ஆளி விதையில் இருக்கும் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரித்து, நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க உதவும்.

  மூளையின் செயல் திறனை அதிகரிக்கும்

  ஆளி விதையில் ஒமேக 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருப்பதால், இது மூளையின் வளர்ச்சியையும், ஆரோகியத்தையும் அதிகரிக்க உதவுகின்றது.

  ஆளி விதை உடல் எடை குறைப்பு(Flax seed and weight loss)

  ஆளி விதை உடல் எடையை குறைக்க உதவுகின்றது. இதனை சரியான முறையில் பயன்படுத்தினால் எதிர்பார்த்த பலன்களைப் பெறலாம். ஆளி விதை எப்படி உடல் எடையை குறைக்க உதவுகின்றது என்று இங்கே பார்க்கலாம்;

  • ஆளி விதையில் இருக்கும் சத்துக்கள் உடல் பருமனை குறைத்து, உடல் எடை சீரான அளவு வர உதவுகின்றது
  • இதில் நார் சத்தும், ஆரோக்கியமான கொழுப்பும் இருப்பதால், நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் இருக்க உதவுகின்றது. இதனால் அதிக உணவை சாப்பிடவில்லை என்றாலும், ஆரோக்கியமாக இருக்க முடியும்
  • இதில் இருக்கும் பல வகை அமிலங்கள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, சோர்வடையாமல் இருக்க உதவும்
  • மேலும் இதில் இருக்கும் நார் சத்து ஜீரண பிரச்சனைகளை போக்கி, மல சிக்கல் மற்றும் வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும்
  • ஆளி விதையை உடல் எடையை குறைக்க பயன்படுத்துவது ஒரு பாதுகாப்பான முறையாகும்
  • இதில் இருக்கும் புரதம் பசியை போக்கி, சிறிது உணவை எடுத்துக் கொண்டாலே, அதிகம் உண்ட உணர்வை உருவாக்கும்
  • இதில் கார்போஹைட்ரெட் குறைந்த அளவு இருப்பதால், உடல் எடையை குறைக்க உதவும்

  ஆளி விதியின் உதவியால் உடல் எடையை குறைக்க சில குறிப்புகள்

  1. ஆளி விதையை பொடி செய்து கொண்டு, பயிர் வகைகளுடன் சேர்த்து, சிறிது மேலே தூவி சாப்பிடலாம்
  2. ஓட்மீல் போன்றவற்றுடன் சிறிது சேர்த்து சாப்பிடலாம்
  3. சாலடில் லேசாக மேலே ஆளி விதியின் பொடியை தூவி பயன்படுத்தலாம்
  4. முட்டை சாலட், கோழி வறுவல், மீன் வறுவல் போன்றவற்றில் இந்த ஆளி விதியின் பொடியைத் தூவி சாப்பிடலாம்
  5. இந்த ஆளி விதையை நுணுக்கி, அல்லது பொடி செய்து, ஒரு கப் தண்ணீரில் நன்கு கொதிக்க விட்டு, வடிகட்டி தேநீர் போல அருந்தலாம்

  ஆளி விதை மற்றும் சரும பாதுகாப்பு(Flax seed and skin care)

  ஆளி விதை உடல் நலத்திற்கு மட்டுமல்லாது, சரும பாதுகாப்பிற்கும் பெரிதும் உதவுகின்றது. ஆளி விதை எப்படி சரும ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது என்று இங்கே பார்க்கலாம்

  ஆரோக்கியமான சருமம்

  ஆளி விதை குறிப்பாக வறண்ட சருமத்திற்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கின்றது. சோரியாசிஸ், எக்சீமா மற்றும் வயதான தோற்றம் போன்றவற்றை போக்க உதவுகின்றது. மேலும் இது சருமத்தை எப்போதும் ஈரப்பதத்தொடு வைத்திருக்கவும் உதவுகின்றது. இதனால் சருமம் சோர்வாக தொடராமல், புத்துணர்ச்சியோடு இருகின்றது.

  பருக்களை போக்கும்

  ஆளி விதையில் ஒமேக 3, மற்றும் தேவையான நார் சத்து இருப்பதால், இவை இரண்டும் ஜீரண அமைப்பை சுத்தப்படுத்தவும், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றது. இதன் காரணமாகவே, ஆளி விதை சருமத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் பிற பிரச்சனைகளையும் போக்க உதவுகின்றது. சீபம் உற்பத்தியை கட்டுப்படுத்த உதவுகின்றது.

  தடிப்பை போக்கும்

  ஆளி விதையில் இருக்கும் ஒமேக 3 கொழுப்பு அமிலம் தடிப்பு மற்றும் சருமம் சிவந்தால் போன்ற பிரச்சனைகளை போக்க உதவும். மேலும் சருமத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், அதனை உடனடியாக குணப்படுத்த உதவும்.

  சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை குறைக்க உதவும்

  ஆளி விதை சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரித்து, இளம் வயதிலேயே சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்க உதவும். இதில் பல சத்துக்கள் நிறைந்திருப்பதாலும், ஆக்சிஜனேற்றம் அதிகமாக இருப்பதாலும், சருமதிற்கு பிராணவாயு கிடைக்க உதவுகின்ப்றது. மேலும் இது ப்ரீ ரடிகல்ஸ்களை குறைகின்றது. இதனால் சருமத்தில் இருக்கும் அணுக்கள் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுகின்றது.

  சருமத்தில் புற்றுநோய் உண்டாவதை தடுக்கும்

   ஆளி விதையில் ஆக்சிஜனேற்றம் அதிகம் இருப்பதால், இது ப்ரீ ராடிகல்ஸ்களை எதிர்த்து போராடுகிறது. இதனால், பிராணவாயு அதிக அளவு அணுக்களுக்கு கிடைகின்றது. இதனால் சருமத்தில் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு குறைகின்றது. மேலும் சூரிய கதிர்களாலும், ஊதா கதிர்களாலும் சருமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் உதவுகின்றது.

  சருமத்திற்கு பொலிவைத் தரும்

  இதில் நிறைந்திருக்கும் சத்துக்கள், குறிப்பாக ஒமேக 3 கொழுப்பு அமிலம், சருமத்திற்கு நல்ல பலபலப்பை தருகின்றது. இது சருமத்தில் எண்ணைத் தன்மையை இயற்கையாக தக்க வைக்க உதவுகின்றது. மேலும், இதனால் சருமம் ஈரத்தன்மையாகவும் இருகின்றது.

  சுருக்கம் மற்றும் மெல்லிய கோடுகளை போக்கும்

  இதில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் சருமத்தில் தோன்றும் சுருக்கம் மற்றும் மெல்லிய கோடுகளை போக்க உதவுகின்றது. இதனால் வயதான தோற்றம் உண்டாவதையும் தவிர்த்து,. நல்ல இளமையான தோற்றத்தைப் பெறலாம்.

  சருமத்திற்கு போஷாக்கைத் தரும்

  ஆளி விதை ஒரு வலுவான எக்ஸ்போலியன்ட். இது இறந்த அணுக்களை சருமத்தில் இருந்து நீக்க உதவும். மேலும் புது அணுக்கள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும். இது உங்கள் சருமத்திற்கு நல்ல போஷாக்கு கிடைப்பதை உறுதி செய்கின்றது.

  pixabay

  ஆளி விதை பேஸ் பாக்குகள்(Flax seed face packs)

  ஆளி விதையானது நமது சருமத்திற்கு மிக சிறந்த நல்ல ஒரு பொலிவு தரக்கூடிய பொருட்களில் ஒன்றாக பயன்படுகின்றது. பலர் இதன் மகத்துவத்தை அறிந்திருந்தும் எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் உபயோக படுத்தாமல் இருக்கலாம். இங்கு நீங்கள் எப்படி இந்த விதையை சருமத்திற்கு பயன்படுத்தலாம் என்பது குறித்து குறிப்பிட்டுள்ளோம்.

  1. திடமான சருமத்தைப் பெற

  • ஒரு தேக்கரண்டி ஆளி விதையை எடுத்துக் கொள்ளவும்
  • அரை கப் தண்ணீரில் இதை போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்
  • பின் ஒரு பருத்தி துணியால் 3 மணி நேரம் வரை மூடி வைத்துக் விட வேண்டும்
  • பின்னர் வந்திருக்கும் நுரைப் பகுதியை சருமத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்
  • சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவி விட வேண்டும்

  2. ஆரோக்கியமான சருமம் பெற

  • ஆளி விதையை ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்
  • பின்னர் இதனுடன் பன்னீர் மற்றும் நீல களிமண்ணை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்
  • பசை போல செய்தவுடன் முகத்தை நன்கு கழுவி பின் இதனை தேய்த்து மசாஜ் செய்யவும்
  • சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்

  3. ஆளி விதை மற்றும் முட்டை – சருமத்தை சுத்தப்படுத்த

  • முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்
  • இதனுடன் ஆளி விதையின் பிடியை சேர்த்து பசை போல செய்து கொள்ள வேண்டும்
  • இதை முகத்தில் தடவி சிறிது நேரம் விட்டு விட வேண்டும்
  • பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்
  • இது சருமத்தில் நல்ல ஈரத்தன்மையை தக்க வைக்க உதவும்
  • மேலும் சருமத்தை சுத்தம் செய்ய உதவும்

  4. பருக்களை போக்க

  • ஆளி விதையை ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்
  • பின்னர் நன்கு பசை போல அரைத்துக் கொண்டு இதனுடன் எலுமிச்சைப்பழ சாறு மற்றும் தேன் கலந்து
  • நன்கு பசைப் போல செய்து கொள்ளவும்
  •  இந்த பசியை முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்
  • சிறிது நேரம் கழித்து முகத்தை நன்கு கழுவி விடவும்

  5. சருமம் போஷாக்கைப் பெற

  • ஆளி விதையை நன்கு ஊற வைத்து பசை போல அரைத்துக் கொள்ளவும்
  • இதனுடன் தயிர் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  • இந்த கலவையை இப்போது முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்
  • சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி விட வேண்டும்
  pixabay

  தலைமுடி வளர்ச்சிக்கு ஆளி விதை(Flax seed and hair growth)

  ஆளி விதை சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுவது போல, தலைமுடியின் வளர்ச்சியையும் அதிகப்படுத்த உதவுகின்றது. அது எப்படி என்று தெரிந்து கொள்ள உங்களுக்காக இங்கே சில தகவல்கள்

  வைட்டமின் E நிறைந்துள்ளது

  ஆளி விதையில் வைட்டமின் E நிறைந்திருப்பதால் இது தலைமுடி நல்ல ஆரோக்கியத்தைப் பெற உதவும். குறிப்பாக வேர்கள் நல்ல ஆரோக்கியத்தை பெறுகின்றது. ப்ரீ ரடிகல்ஸ்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளை குறைகின்றது. மேலும் தலைக்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைக்க உதவுகின்றது.

  ஒமேக 3 கொழுப்பு அமிலம்

  இது வறண்ட தலைமுடியை போக்கி, நல்ல போஷகக்குப் பெற உதவுகின்றது. குறிப்பாக குளிர் காலங்களில் தலைமுடி வறண்டு போவது அதிகம். அந்த காலகட்டத்தில் தலைமுடிக்கு ஒமேக 3 கொழுப்பு அமிலம் அதிக அளவு கிடைத்தால், முடி உதிர்வு மற்றும் மெல்லிய தலைமுடி போன்ற பிரச்சனைகள் அகன்று நல்ல ஆரோக்கியமான வளர்ச்சியைப் பெரும்.

  நுணி முடி வெடிப்பைப் போக்கும்

  பலருக்கும் தலைமுடியின் நுணி இரண்டாக வெடித்து, அதன் காரணமாக முடி உதிர்வு அதிகரிக்கும். ஆனால், ஆளி விதை அத்தகைய பிரச்சனைகளை போக்க பெரிதும் உதவுகின்றது.

  முடி வேர்களுக்கு போஷாக்கைத் தரும்

  இதில் வைட்டமின் B, மக்னேசியம், மங்கனீஸ், செலெனியம் மற்றும் செம்பு இருப்பதால், தலை முடி நல்ல போஷாக்கைப் பெறுகின்றது, மேலும் இதனால் நல்ல வளர்ச்சியையும் இது பெறுகின்றது. நீளமான மற்றும் அடர்த்தியான தலைமுடிப் பெற இது ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

  pH அளவையும் எண்ணை உற்பத்தியையும் சீர் செகின்றது

  தலை முடி நல்ல ஆரோக்கியமாக வளர இந்த இரண்டும் மிக முக்கியம். இதை ஆளி விதை சீர் செய்ய உதவுகின்றது. இதனால் தலைமுடிக்குத் தேவையான எண்ணை இயற்கையாகவே கிடைகின்றது.

  தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்துகின்றது

  இதில் ஒமேக 3 கொழுப்பு அமிலம் அதிகம் இருப்பதால், தலைமுடிக்குத் தேவையான போஷாக்கு விரைவாக கிடைகின்றது. இதனால், தலைமுடி நன்கு விரைவாக வளர இது உதவியாக உள்ளது. மேலும் புதிதாக தலைமுடி வளரவும் இது உதவுகின்றது.

  தலைமுடியை மிருதுவாக வைத்துக் கொள்ள உதவும்

  ஆளி விதை தலைமுடியின் வறட்சி, நுணி வெடித்தல், மற்றும் சிக்கு போன்றவற்றை போக்கி, எப்போதும் ஈரத்தன்மையோடு வைத்திருக்க உதவும். இதனால் தலைமுடி எப்போதும் மிருதுவாக இருகின்றது.

  pixabay

  தலைமுடி வளர்ச்சிக்கு எப்படி ஆளி விதையை பயன்படுத்துவது

  சருமத்திற்கு மட்டும் தான் இந்த ஆளி விதை சிறந்தது என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் இவை சருமத்திற்கு மட்டும் அல்ல தலை முடிக்கும் நல்ல பொலிவை தருகின்றது. இப்படிப்பட்ட இந்த ஆளி விதையை தலைமுடிக்கு கீழ் கொடுக்கப்பட்ட முறைகளை கொண்டும் பயன்படுத்தலாம்.

  செய்முறை 1

  • தேவையான ஆளி விதியின் எண்ணையை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்
  • சில நொடிகள் இதை சூடு செய்து கொள்ள வேண்டும்
  • மிதமான சூடு இருக்கும் போதே, தலைமுடியின் வேர்களில் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்
  • ஒரு அடர்ந்த பருத்தி துண்டை சுடு தண்ணீரில் நனைத்து, பிழிந்து தலையை சுற்றி கட்டி அப்படியே சிறிது நேரம் விட்டு விட வேண்டும்
  • இது தலைமுடி முழுவதும் நன்கு மூடி இருக்கும் படி இருக்க வேண்டும்
  • சிறிது நேரம் கழித்து பாதுகாப்பான ஷாம்பூ அல்லது சீயக்காய் தூள் கொண்டு முடியை நன்கு அலசி விட வேண்டும்

  செய்முறை 2

  • ஆளி விதையை பொடி செய்து தயிருடன் கலந்து கொள்ள வேண்டும்
  • பின்னர் இந்த கலவையை தலைமுடியின் வேர் முதல் நுணி வரை நன்கு தேய்த்து சிறிது நேரம் விட்டு விட வேண்டும்
  • பின்னர் தரமான ஷாம்பூ அல்லது செய்யக்காய் தேய்த்து தலை முடியை நன்கு அலசி விட வேண்டும்

  கேள்வி பதில்கள்(FAQ)

  ஆளி விதை உங்களுக்கு தீங்கு விளைவிக்குமா?

  அனேகமானவர்களுக்கு ஆளி விதை பாதுகாப்பானதே, இதனால் யாருக்கும் பெரிதாக எந்த தீங்கும் ஏற்படுவதில்லை. ஆனால், இதனை அதிக அளவு, எடுத்துக் கொள்ளும் போது, சில நேரங்களில் வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏறபட வாய்ப்பு உள்ளது.

  மூளையின் ஆரோக்கியத்திற்கு ஆளி விதை நல்லதா?

  ஆளி விதையில் ஒமேக 3 கொழுப்பு அமிலம் இருகின்றது. இது மூளையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றது. இதன் காரணமாக ஆளி விதை மூளையின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற ஒரு தீர்வாக உள்ளது.

  ஒரு நாளைக்கு எவ்வளவு ஆளி விதையை எடுத்துக் கொள்ளலாம்?

  ஒரு நாளைக்கு ஒருவர் ஒரு தேக்கரண்டி முதல் இரண்டு தேக்கரண்டி வரை ஆளி விதையை உணவில் எடுத்துக் கொள்ளலாம். இது அனைவருக்கும் பரிந்துரைக்கப்பட்ட அளவாகும்.

  ஆளி விதை நினைவாற்றலை அதிகரிக்க உதவுமா?

  பிற நினைவாற்றலை அதிகப்படுத்த உதவும் பொருட்களை போல, ஆளி விதையிலும் மக்னேசியம், ஒமேக 3 கொழுப்பு அமிலம், மங்கனீஸ் மற்றும் வைட்டமின் B இருகின்றது. ஆளி விதையை தானியத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, மேலும் பல சத்துக்களைப் பெற இது உதவும். இவை மூளையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவதோடு, மூளையின் செயல்திறனையும் அதிகரிகின்றது.

  ஆளி விதையை வறுப்பதால், அதில் நிறைந்திருக்கும் சத்துக்கள் குறையுமா?

  ஆளி விதையை ஒவ்வொரு வகையில் பயன்படுத்தும் போது அதில் இருக்கும் சத்துக்களில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பே. இதன் காரணமாகவே, ஆளி விதையை வருக்கும் போது, நிச்சயம், அதில் வெப்பம் ஏற்படுவதால், சத்துக்களில் மாற்றங்கள் ஏற்படும்.

  ஆளி விதையில் எதிர்ப்பு ஊட்டசத்துக்கள் உள்ளதா?

  ஆம், ஆளி விதையில் எதிர்ப்பு ஊட்டசத்துக்கள் உள்ளது. இதனால் உடல் ஆரோக்கியத்தை இது மேலும் அதிகரிக்க உதவுகின்றது.

  ஆளி விதை டெஸ்டோஸ்டிரோனை குறைக்குமா?

  சில ஆய்வுகள் ஆளி விதை டெஸ்டோஸ்டிரோனை குறைக்கும் என்று கண்டறிந்துள்ளது.

  மேலும் வாசிக்க - 

  Flax Seeds Benefits for Skin in Hindi

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ், தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!