ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சுஜித் உடல் சடலாக மீட்பு : சோகத்தில் மூழ்கிய தமிழகம்!

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சுஜித் உடல் சடலாக மீட்பு : சோகத்தில் மூழ்கிய தமிழகம்!

ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் சுஜித் விழுந்த சம்பவம் நாட்டையே பதை பதைக்க வைத்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் (sujith) கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தார். இந்த நிலையில் 4 நாட்களுக்கும் மேலாக சுஜித்தை மீட்கும் பணி தீவிரமாக நடந்தது. 

இன்று அதிகாலை 4.30 மணிக்கு சுஜித்தின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. சுமார் 27 அடி ஆழத்தில் விழுந்த குழந்தையை மீட்க மீட்பு படையீனர் கடும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் ஆரம்பமுதலே தடங்கள் மட்டுமே இருந்தது. 

twitter

27 அடியில் இருந்த குழந்தை 100 அடி ஆழத்திற்கு சென்றவுடன் குழந்தையை மீட்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டது.  சுஜித்தை எப்படியாவது உயிருடன் மீட்க வேண்டும் என தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுஜித் விழுந்த போர்வெல் அருகே குழி குழி தோண்டப்பட்டு அவரை மீட்க திட்டமிடப்பட்டன. 

அதன்படி நேற்று மாலை 5.30 மணிக்கு 60 அடி வரை பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அப்போதுதான் சுரங்கம் தோண்டும் பணி தீவிரம் எடுத்தது. ரிக் இயந்திரம் மற்றும் போர்வெல் இயந்திரம் கொண்டு மீட்பு பணிகள் செய்யப்பட்டது. ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் பாறைகள் இருந்ததால் பணியில் தொய்வு ஏற்பட்டது. 

நேற்று 7.30 மணி அளவில் 63 அடி வரை குழி தோண்டப்பட்டது. தொடர்ந்து பாறைகள் இருந்ததால் தீயணைப்பு வீரர் அஜித்குமார் கீழே சென்று பார்த்தார். குழிக்குள் ஆக்சிஜன் சிலிண்டர் கட்டி உள்ளே இறங்கி எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு வந்தார். 

twitter

இதையடுத்து எப்படியும் 35 அடி மேலும் தோண்ட வேண்டும் என்றால் ஒன்றரை நாள் ஆகும் என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இதனால் உடனடியாக மருத்துவர்களிடம் மீட்பு குழு ஆலோசனை செய்தது. 60 அடிக்கு கீழே சுவாசிப்பது கடினம் என்பதால் சுஜித் பெரும்பாலும் இறந்திருக்க வாய்ப்புள்ளது என யூகிக்கப்பட்டது. 

மேலும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்களும் கூறினார்கள். இதனை தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி அதிகாலை 2.30க்கு குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டதாக வருவாய் நிர்வாக ஆணையர் தகவல் அறிவித்தார்.

twitter

சுஜித்தின் (sujith) உடல் இருந்த குழியில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அவர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுஜித் உடலை ஆழ்துளை கிணறு வழியாகவே மீட்டு எடுக்கும் பணிகள் நடந்தது. இரண்டு மணி நேரப் போராட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் அதிகாலை 4:30 மணியளவில் குழந்தை சுஜித்தின் உடல் சிதைந்த சிலையில் சடலமாக மீட்கப்பட்டது. 

பின்னர் சுஜித் உடல் உடல்கூறைவு செய்யப்பட்டு, ஆவாரம்பட்டி பாத்திமா புதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யப்பட்டது. 4 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் பெரும் தோல்வியில் முடிந்தது. 

twitter

இதனால் நாடே சோகத்தில் முழ்கியுள்ளது. முயற்சிகள் பலனளிக்காமல் உயிரிழந்த சுஜித்துக்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு சினிமா துறை பிரபலங்கள், அரசியல் வாதிகள் மற்றும் இணையவாசிகள் ட்விட்டரில் இரங்கல்களை பதிவிட்டுள்ளனர்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்ததற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். குழந்தை சுஜித் இறந்ததற்காக தாம் வருந்துவதாகவும் துக்கமடைந்துள்ள பெற்றோருக்கு தனது ஆறுதல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதே போல பலர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

சுஜித்தின் (sujith) இழப்பு மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க ஒரு பாடமாகவே அமைந்துள்ளது. தன் மகன் வந்துவிடுவான் என காத்திருந்த சுஜித்தின் தயாருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை என்பதே நிதர்சனம்!. 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!