துயரங்கள் துன்பங்கள் எல்லாம் நீக்கும் துர்காஷ்டமி - நவராத்திரியின் முதல் நாயகி துர்க்கை!

துயரங்கள் துன்பங்கள் எல்லாம் நீக்கும் துர்காஷ்டமி - நவராத்திரியின் முதல் நாயகி துர்க்கை!

அவசியமற்ற நபர்களால் குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற கவலைகள் நீங்கவும் குடும்பத்திற்குள் உள்ள கசப்புகள் விலகி மகிழ்வு நிலைக்கவும் இந்த நவராத்திரியில் நீங்கள் முதலில் வணங்க வேண்டிய தெய்வம் துர்க்கை அம்மன்.                                  

புரட்டாசி மஹாளய அமாவாசைக்கு பின்பு வரும் ஒன்பது நாட்கள் அம்பிகைக்கானது. அம்மன்களை கொண்டாட அந்த ஒன்பது நாளும் விதம் விதமாக அவர்களை அலங்காரம் செய்து நைவேத்தியம் செய்து தானங்கள் தந்து அம்பிகையின் அருளை பெறவே இந்த நவராத்திரி விசேஷம் கொண்டாடப்படுகிறது.                             

Youtube

இந்த ஒன்பது இரவுகள் அம்பிகையை மனதில் இருத்தி வழிபட அன்னையின் வாத்சல்யத்துடன் கேட்டதை எல்லாம் அருள்வாள் சக்தி. நவராத்திரியில் அஷ்டமி அன்று வணங்கப்பட வேண்டிய தெய்வம்தான் துர்க்கை. துர்க்கை, பார்வதி, அம்பாள் என எல்லோரும் ஒருவராகவே இருப்பவர் அன்னை பார்வதி. அவரது ஒரு வடிவமே துர்க்கை.                             

ஸ்ரீ வித்யா மார்க்கத்தில் அன்னையை வழிபட 10 விதமான அன்னை வடிவங்கள் உபாஸிக்க நன்மை தரும். அவற்றை தசமகா வித்யை என்பார்கள். அதில் முதலாவதாக கூறப்படுவது அன்னை காளியின் ரூபமே. 10 விதமான அம்மன் ரூபத்திற்கும் முதலாவதாக கூறப்படுவது காளி அம்மன் என்பதால் அவரை வணங்கினாலே பத்து வித அம்மன்களை வணங்கிய பலனை பெறுவார்கள்.                              

Youtube

துர்காஷ்டமி (durgashtami) அன்று அன்னையை வழிபடுவதும் விரதம் இருப்பதும் தொலைந்து போன குடும்ப மகிழ்ச்சியை திரும்பத்தரும். உடல் ஆரோக்கியம் மனநலம் மேம்படும். தைரியமும் தன்னம்பிக்கையும் பெருகும். சக்தியின் எல்லையற்ற வடிவம் துர்க்கை. நவராத்திரியின் ஒன்பது ராத்திரிகளிலும் வணங்க முடியாதவர்கள் இந்த மூன்று நாட்களை மிக முக்கியமாக வணங்க வேண்டும்.                           

அதில் முதல் நாள் துர்காஷ்டமி (durgashtami) . சிவனை அகங்காரத்தால் அவமதித்த தட்சனை அழிக்கவே துர்க்கை தோன்றினாள். இதே போன்றதொரு அஷ்டமி நாளில் அவள் அவதரித்ததாலேயே இந்த நாள் அவளை வழிபட முக்கிய நாளாக மாறியிருக்கிறது.

தொடர்ந்த துரோகங்களால் சக்தியற்று மனசோர்வு அடைந்து தோல்விகளால் துவண்டு போயிருப்பவர்கள் அவசியம் இந்த துர்காஷ்டமி அன்று பூஜை செய்யுங்கள். இயலாதவர்கள் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று மனமார வேண்டுங்கள். கேட்டதை எல்லாம் தாய்மை சுரக்கும் மனதோடு நம்மை நெஞ்சார அணைத்து அன்போடு தருவாள் நம் அன்னை பராசக்தி.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!